புதிய சுஸுகி ஜிஎஸ்எக்ஸ்- எஸ்750 பைக் விற்பனைக்கு அறிமுகம்: முழு விபரம்!!

புதிய சுஸுகி ஜிஎஸ்எக்ஸ்- எஸ்750 பைக் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. நடுத்தர ஸ்போர்ட்ஸ் பைக் மார்க்கெட்டில் வாடிக்கையாளர்களின் கவனத்தை ஈர்க்கும் அம்சங்களுடன் இந்த புதிய மாடல் வந்துள்ளது.

By Saravana Rajan

கடந்த பிப்ரவரி மாதம் நடைபெற்ற சர்வதேச ஆட்டோ எக்ஸ்போவில் இந்த புதிய பைக் காட்சிக்கு வைக்கப்பட்டு இருந்தது. நடுத்தர வகையை சேர்ந்த இந்த பைக் இளைய சமுதாயத்தினர் மத்தியில் அதிக ஆவலைத் தூண்டியது.

 புதிய சுஸுகி ஜிஎஸ்எக்ஸ்- எஸ்750 பைக் விற்பனைக்கு அறிமுகம்: முழு விபரம்!!

இந்த நிலையில், ரூ.7.45 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையில் இந்தியாவில் விற்பனைக்கு வந்துள்ளது. புதிய சுஸுகி ஜிஎஸ்எக்ஸ்- எஸ்750 பைக் முக்கிய உதிரிபாகங்களாக இறக்குமதி செய்யப்பட்டு இந்தியாவில் அசெம்பிள் செய்யப்பட இருக்கிறது. சுஸுகி ஹயபுசா சூப்பர் பைக்கை தொடர்ந்து இந்தியாவில் அசெம்பிள் செய்யப்படும் சுஸுகி மோட்டார்சைக்கிள் நிறுவனத்தின் விலை உயர்ந்த மாடல் இதுவாகும்.

 புதிய சுஸுகி ஜிஎஸ்எக்ஸ்- எஸ்750 பைக் விற்பனைக்கு அறிமுகம்: முழு விபரம்!!

நாடுமுழுவதும் உள்ள சுஸுகி மோட்டார்சைக்கிள் டீலர்களில் இந்த பைக்கிற்கு முன்பதிவு துவங்கப்பட்டு இருக்கிறது. அடுத்த மாதம் இந்த பைக்கை டெலிவிரி கொடுக்கும் பணிகள் துவங்கும்.

 புதிய சுஸுகி ஜிஎஸ்எக்ஸ்- எஸ்750 பைக் விற்பனைக்கு அறிமுகம்: முழு விபரம்!!

புதிய சுஸுகி ஜிஎஸ்எக்ஸ்- எஸ்750 பைக்கில் 4 சிலிண்டர் அமைப்புடைய 749சிசி லிக்யூடு கூல்டு எஞ்சின் பொருத்தப்பட்டு இருக்கிறது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 110 பிஎச்பி பவரையும், 81 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் திறன் வாய்ந்தது. 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டு இருக்கிறது.

 புதிய சுஸுகி ஜிஎஸ்எக்ஸ்- எஸ்750 பைக் விற்பனைக்கு அறிமுகம்: முழு விபரம்!!

சுஸுகி ஜிஎஸ்எக்ஸ்- எஸ்1000 சூப்பர் பைக்கின் டிசைன் தாத்பரியங்கள் இந்த புதிய சுஸுகி ஜிஎஸ்எக்ஸ்- எஸ்750 பைக்கில் அதிகம் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது. இதனால், தோற்ற சாயல் ஜிஎஸ்எக்ஸ்- எஸ்1000 பைக் போலவும் தெரிகிறது. வலிமையான பெட்ரோல் டேங்க், புடைப்பான எஞ்சின் பகுதி, கூர்மையாக தோற்றமளிக்கும் ஹெட்லைட் ஹவுசிங் ஆகியவை பைக்கிற்கு மிரட்டல் தோற்றத்தை தருகின்றன.

 புதிய சுஸுகி ஜிஎஸ்எக்ஸ்- எஸ்750 பைக் விற்பனைக்கு அறிமுகம்: முழு விபரம்!!

புதிய சுஸுகி ஜிஎஸ்எக்ஸ்- எஸ்750 பைக்கில் எல்சிடி திரை கொண்ட இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர் பொருத்தப்பட்டு இருக்கிறது. குறைவான எஞ்சின் சுழல் வேகத்தில் ஓட்டும்போது எஞ்சின் ஆஃப் ஆகாமல் குறிப்பிட்ட அளவில் எஞ்சின் சுழல் வேகத்தை அதிகரித்து தக்க வைக்கும் லோ ஆர்பிஎம் அசிஸ்ட், பட்டனை அழுத்தி எஞ்சினை ஸ்டார்ட் செய்யும் வசதி, 3 லெவல் டிராக்ஷன் கன்ட்ரோல் சிஸ்டம் ஆகியவை முக்கிய தொழில்நுட்ப அம்சங்களாக இருக்கின்றன.

 புதிய சுஸுகி ஜிஎஸ்எக்ஸ்- எஸ்750 பைக் விற்பனைக்கு அறிமுகம்: முழு விபரம்!!

புதிய சுஸுகி ஜிஎஸ்எக்ஸ்- எஸ்750 பைக்கில் கேஒய்பி அப்சைடு டவுன் ஃபோர்க்குகள் கொண்ட முன்புற சஸ்பென்ஷனும், பின்புறத்தில் மோனோஷாக் அப்சார்பரும் பொருத்தப்பட்டு இருக்கிறது. அதேபோன்று, முன்சக்கரத்தில் 310மிமீ விட்டமுடைய இரண்டு டிஸ்க்குகள் கொண்ட பிரேக்கும், பின்புறத்தில் 240மிமீ டிஸ்க் பிரேக்கும் உள்ளது. டியூவல் ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம் நிரந்தர அம்சமாக இடம்பெற்றுள்ளது.

 புதிய சுஸுகி ஜிஎஸ்எக்ஸ்- எஸ்750 பைக் விற்பனைக்கு அறிமுகம்: முழு விபரம்!!

புதிய சுஸுகி ஜிஎஸ்எக்ஸ்- எஸ்750 பைக் இரண்டு வண்ணங்களில்கிடைக்கும். ஒன்று மெட்டாலிக் டிரைட்டன் புளூ மற்றும் கருப்பு வண்ணக் கலவையிலும், மற்றொன்று கேண்டி டேரிங் ரெட் என்ற வண்ணத்திலும் கிடைக்கும்.

 புதிய சுஸுகி ஜிஎஸ்எக்ஸ்- எஸ்750 பைக் விற்பனைக்கு அறிமுகம்: முழு விபரம்!!

புதிய சுஸுகி ஜிஎஸ்எக்ஸ்- எஸ்750 பைக் இந்தியாவில் டிரையம்ஃப் ஸ்ட்ரீட் ட்ரிப்பிள் ஆர்எஸ், யமஹா எம்டி- 09, கவாஸாகி இசட்900 ஆகிய மாடல்களுக்கு போட்டியாக இருக்கும். விரைவில் வர இருக்கும் டுகாட்டி மான்ஸ்ட்டர் 821 பைக்கும் போட்டியாளர்தான்.

More from DriveSpark

Article Published On: Wednesday, April 25, 2018, 13:52 [IST]
English summary
The new 2018 Suzuki GSX-S750 has been launched in India. The new 750cc offering from Suzuki has been priced at Rs 7.45 lakh, ex-showroom (Delhi).
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+