2018 ட்ரையம்ஃப் டைகர் 1200 பைக் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்!

2018 ட்ரையம்ஃப் டைகர் 1200 அட்வென்ச்சர் ரக சூப்பர் பைக் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது.

By Saravana Rajan

2018 ட்ரையம்ஃப் டைகர் 1200 அட்வென்ச்சர் ரக சூப்பர் பைக் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. விலை உள்ளிட்ட அனைத்து விபரங்களையும் இந்த செய்தியில் காணலாம்.

2018 ட்ரையம்ஃப் டைகர் 1200 பைக் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்!

ட்ரையம்ஃப் டைகர் 1200 அட்வென்ச்சர் பைக்கின் XCx என்ற நடுத்தர விலை கொண்ட மாடல் இந்தியாவில் விற்பனைக்கு வந்துள்ளது. இந்த புதிய மாடல் ஜெட் பிளாக், க்றிஸ்ட்டல் ஒயிட் மற்றும் மேட் காக்கி ஆகிய மூன்று புதிய வண்ணங்களில் கிடைக்கும்.

2018 ட்ரையம்ஃப் டைகர் 1200 பைக் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்!

புதிய ட்ரையம்ஃப் டைகர் 1200 பைக்கில் மூன்று சிலிண்டர்கள் அமைப்புடைய 1,215சிசி எஞ்சின் பொருத்தப்பட்டு இருக்கிறது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 141 பிஎச்பி பபரையும், 122 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் திறன் வாய்ந்தது. 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டு இருக்கிறது.

2018 ட்ரையம்ஃப் டைகர் 1200 பைக் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்!

இந்த பைக்கில் இருதிசை நுட்பத்தில் இயங்கும் குயிக் ஷிஃப்ட் வசதி கொடுக்கப்பட்டு இருக்கிறது. இந்த பைக் எஞ்சினின் க்ராங்க்சாஃப்ட்டில் சிறிய மாறுதல்கள் செய்யப்பட்டுள்ளன. இலகு எடையிலான ஃப்ளைவீல் மற்றும் மெக்னீசியத்திலான கேம்சாஃப்ட் கவர் கொடுக்கப்பட்டு இருப்பது முக்கிய சிறப்பம்சம்.

2018 ட்ரையம்ஃப் டைகர் 1200 பைக் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்!

பழைய ட்ரையம்ஃப் டைகர் 1200 எக்ஸ்சிஎக்ஸ் மாடலைவிட புதிய மாடல் 5 கிலோ எடை குறைவானது. இந்த பைக்கின் ஃப்ரேம் அமைப்பிலும் மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. மேலும், எஞ்சின் மற்றும் புகைப்போக்கி அமைப்புகளில் மாற்றங்கள் செய்யப்பட்டு இருப்பதுடன், இலகு உதிரிபாகங்கள் மூலமாக எடை வெகுவாக குறைந்துள்ளது.

2018 ட்ரையம்ஃப் டைகர் 1200 பைக் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்!

பழைய மாடல் டைகர் எக்ஸ்ப்ளோரர் என்ற பெயரில் அழைக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில், புதிய மாடலை டைகர் 1200 என்ற பெயரில் அறிமுகம் செய்துள்ளது. பழைய மாடலைவிட மொத்தம் 100 புதிய மாற்றங்களுடன் இந்த புதிய மாடல் மேம்படுத்தப்பட்டு வந்துள்ளது.

2018 ட்ரையம்ஃப் டைகர் 1200 பைக் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்!

ட்ரையம்ஃப் டைகர் 1200 எக்ஸ்சிஎக்ஸ் பைக்கில் 5 அங்குல டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் களஸ்ட்டர் பொருத்தப்பட்டுள்ளது. எல்இடி ஹெட்லைட்டுகள், கார்னரிங் லைட்டுகள், க்ரூஸ் கன்ட்ரோல், புஷ் பட்டன் ஸ்டார்ட் வசதி என அமர்க்களமான தொழில்நுட்ப வசதிகளை பெற்றிருக்கிறது.

2018 ட்ரையம்ஃப் டைகர் 1200 பைக் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்!

இந்த பைக்கில் ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம், டிராக்ஷன் கன்ட்ரோல், ஹில் ஹோல்டு அசிஸ்ட், ரைடு பை ஒயர் த்ராட்டில், 6 விதமான நிலைகளில் இயங்கும் டிரைவிங் மோடுகள் ஆகியவை இடம்பெற்றுள்ளன. அட்ஜெஸ்ட்டபிள் விண்ட்ஸ்க்ரீன் கண்ணாடி, 12 வோல்ட் சார்ஜர் மற்றும் சூடாகும் வசதியுடன் கைப்பிடிகள் கொடுக்கப்பட்டு இருக்கின்றன.

2018 ட்ரையம்ஃப் டைகர் 1200 பைக் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்!

புதிய ட்ரையம்ஃப் டைகர் 1200 பைக்கின் முன்புறத்தில் 48மிமீ WP அப்சைடு டவுன் ஃபோர்க்குகள் கொண்ட சஸ்பென்ஷன் அமைப்பும், பின்புறத்தில் WP மோனோஷாக் அப்சார்பரும் பொருத்தப்பட்டுள்ளன. இரண்டு சஸ்பென்ஷன் அமைப்பையும் தேவைக்கேற்ப மாற்றும் வசதியும் உள்ளது.

2018 ட்ரையம்ஃப் டைகர் 1200 பைக் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்!

இந்த பைக்கின் முன்புறத்தில் பிரெம்போ நிறுவனத்தின் 4 பிஸ்டன் காலிபர்களுடன் கூடிய 305 மிமீ ட்வின் டிஸ்க் பிரேக்குகளுடன் கூடிய பிரேக் சிஸ்டம் கொடுக்கப்பட்டு இருக்கிறது. பின்புறத்தில் நிஸின் நிறுவனத்ததின் 2 பிஸ்டன் காலிபர்களு"ன் கூடிய 282மிமீ டிஸ்க் பிரேக் சிஸ்டமும் உள்ளது.

2018 ட்ரையம்ஃப் டைகர் 1200 பைக் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்!

ரூ.17 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. டுகாட்டி மல்டிஸ்ட்ரேடா 1200, பிஎம்டபிள்யூ ஆர்1200 ஜிஎஸ் மற்றும் விரைவில் வர இருக்கும் டுகாட்டி மல்டிஸ்ட்ரேடா 1260 ஆகிய பைக் மாடல்களுடன் இந்த புதிய ட்ரையம்ஃப் டைகர் 1200 பைக் போட்டி போடும்.

Most Read Articles
English summary
2018 Triumph Tiger 1200 launched in India. British motorcycle manufacturer Triumph Motorcycles has launched the new 2018 Tiger 1200 in the country. The 2018 Triumph Tiger 1200 is priced at Rs 17 lakh ex-showroom (Delhi).
Story first published: Monday, May 14, 2018, 16:02 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X