புதிய ட்ரையம்ஃப் டைகர் 800 பைக் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்!

புதிய ட்ரையம்ஃப் டைகர் 800 பைக் மாடல்கள் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு இருக்கின்றன. அதன் விபரங்களை இந்த செய்தியில் காணலாம்.

By Saravana Rajan

புதிய ட்ரையம்ஃப் டைகர் 800 பைக் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. வெவ்வேறு சிறப்பம்சங்கள் கொண்டதாக மொத்தம் மூன்று மாடல்களில் விற்பனைக்கு கிடைக்கும்.

புதிய ட்ரையம்ஃப் டைகர் 800 பைக் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்!

2018 ட்ரையம்ஃப் டைகர் 800 பைக் எக்ஸ்ஆர்எக்ஸ், எக்ஸ்ஆர் மற்றும் எக்ஸ்சிஎக்ஸ் ஆகிய மூன்று மாடல்களில் கிடைக்கும். இதில், எக்ஸ்ஆர்எக்ஸ், எக்ஸ்ஆர் ஆகிய மாடல்கள் சாதாரண சாலை பயன்பாட்டுக்கானதாகவும், எக்ஸ்சிஎக்ஸ் மாடலானது ஆஃப்ரோடு சிறப்பம்சங்களையும் பெற்றிருக்கிறது.

புதிய ட்ரையம்ஃப் டைகர் 800 பைக் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்!

ட்ரையம்ஃப் டைகர் 800 பைக்கில் இருக்கும் மூன்று சிலிண்டர்கள் கொண்ட 800சிசி லிக்யூடு கூல்டு எஞ்சின் அதிகபட்சமாக 94 பிஎச்பி பவரையும், 87.8 என்எம் டார்க் திறனையும் வழங்கும். இந்த எஞ்சின் 6 ஸ்பீடு கியர்பாக்ஸுடன் இணைக்கப்பட்டு இருக்கிறது.

புதிய ட்ரையம்ஃப் டைகர் 800 பைக் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்!

இந்த பைக்கின் கியர்பாக்ஸ் ஆஃப்ரோடுக்கு தக்கவாறு அதிக டார்க் திறனை வெளிப்படுத்தும் விதத்தில் முதல் கியரானது குறைவான கியர் ரேஷியோவுடன் வந்திருக்கிறது. இதன்மூலமாக, குறைவான வேகத்தில் ஓட்டுபவர் சிறப்பான கையாளுமையையும், பிக்கப்பையும் உணர முடியும்.

புதிய ட்ரையம்ஃப் டைகர் 800 பைக் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்!

இந்த பைக்கின் எஞ்சின் மற்றும் சேஸீயில் 200 விதமான சிறிய சிறிய மாற்றங்களை செய்திருப்பதாக ட்ரையம்ஃப் நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த பைக்கில் புதிய புகைப்போக்கி அமைப்பும் சிறப்பான புகைப்போக்கி சப்தத்தை வழங்கும் வகையில் மேம்படுத்தப்பட்டு இருக்கிறது.

புதிய ட்ரையம்ஃப் டைகர் 800 பைக் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்: விபரம்!

புதிய ட்ரையம்ஃப் டைகர் 800 பைக்கில் புதிய எல்இடி விளக்குகள் கொண்ட ஹெட்லைட் ஹவுசிங் கொடுக்கப்பட்டு இருக்கிறது. எல்இடி பகல்நேர விளக்குகள் இருப்பதுடன், உயர்தரமான லட்சினைகள் மற்றும் பாடி கிராஃபிக்ஸ் ஸ்டிக்கர் வேலைப்பாடுகளுடன் வந்துள்ளது. இந்த பைக் புதிய வண்ணங்களில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது.

புதிய ட்ரையம்ஃப் டைகர் 800 பைக் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்: விபரம்!

புதிய ட்ரையம்ஃப் டைகர் 800 பைக் மாடல்களில் 5 அங்குல டிஎஃப்டி திரை கொண்ட இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர் கொடுக்கப்பட்டு இருக்கிறது. இந்த இன்ஸ்ட்ரூமென்ட்டை இயக்குவதற்கான ஜாய்ஸ்டிக் இருப்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த பைக்கில் க்ரூஸ் கன்ட்ரோல் சிஸ்டம் இருப்பதுடன், முன்சக்கரம் பிரெம்போ பிரேக் சிஸ்டம் கொடுக்கப்பட்டு இருக்கிறது.

புதிய ட்ரையம்ஃப் டைகர் 800 பைக் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்: விபரம்!

புதிய ட்ரையம்ஃப் டைகர் 800 பைக்கின் எக்ஸ்ஆர்எக்ஸ் மாடலானது 4 டிரைவிங் மோடுகளையும், ஆஃப்ரோடுக்கான எக்ஸ்சிஎக்ஸ் மாடலாானது 5 விதமான டிரைவிங் மோடுகளையும் பெற்றிருக்கின்றன.

புதிய ட்ரையம்ஃப் டைகர் 800 பைக் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்: விபரம்!

இந்த பைக் மாடல்களில் டபிள்யூபி அட்ஜெஸ்ட்டபிள் வசதியுடன் கூடிய முன்புற மற்றும் பின்புற சஸ்பென்ஷன், வெப்பப்படுத்தும் வசதியுடன் கூடிய கைப்பிடி உறைகள், இருக்கை மற்றும் ஹேண்டில்பாரை அட்ஜெஸ்ட் செய்யும் வசதி ஆகியவை முக்கிய விஷயங்கள்.

புதிய ட்ரையம்ஃப் டைகர் 800 பைக் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்: விபரம்!

இந்த பைக்கில் ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம் மற்றும் டிராக்ஷன் கன்ட்ரோல் சிஸ்டம் ஆகியவையும் இடம்பெற்று இருக்கின்றன. எக்ஸ்ஆர் மாடல்கள் அலாய் வீல்களும், எக்ஸ்சி மாடல் ஸ்போக் வீல்களுடனும் வந்துள்ளது.

விலை விபரம்

விலை விபரம்

2018 ட்ரையம்ஃப் டைகர் 800 வேரியண்ட்டுகள் மற்றும் விலை விபரம்

புதிய ட்ரையம்ஃப் டைகர் 800 பைக்குகள் ரூ.11.76 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையிலிருந்து இந்தியாவில் விற்பனைக்கு கிடைக்கும்..

வேரியண்ட் விலை
எக்ஸ்ஆர் ரூ.11.76 லட்சம்
எக்ஸ்ஆர்எக்ஸ் ரூ.13.13 லட்சம்
எக்ஸ்சிஎக்ஸ் ரூ.13.76 லட்சம்

*அனைத்தும் எக்ஸ்ஷோரூம் விலை

Article Published On: Wednesday, March 21, 2018, 14:05 [IST]
English summary
2018 Triumph Tiger 800 launched in India. Triumph Motorcycles India has launched the new 2018 Tiger 800 adventure motorcycle at a starting price of Rs 11.76 lakh ex-showroom (India).
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+