2019 யமஹா ஆர்-3 பைக் படங்கள், தகவல்கள் வெளியானது!

யமஹா ஆர்-1 பைக்கின் அடிப்படையிலான அம்சங்களுடன் புதிய யமஹா ஆர்-3 பைக் மேம்படுத்தப்பட்டு இருக்கிறது. யமஹா ஆர்-1 பைக் போன்றே, முன்புற ஃபேரிங் பேனல்களில் டிசைன் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

2019 யமஹா ஆர்-3 பைக் படங்கள் மற்றும் தகவல்கள் வெளியாகி இருக்கிறது. இந்தியாவிலும் வர இருக்கும் இந்த புதிய மாடலில் இடம்பெற்றிருக்கும் தகவல்களை இந்த செய்தியில் காணலாம்.

2019 யமஹா ஆர்-3 பைக் படங்கள், தகவல்கள் வெளியானது!

யமஹா ஆர்-1 பைக்கின் அடிப்படையிலான அம்சங்களுடன் இந்த புதிய யமஹா ஆர்-3 பைக் மேம்படுத்தப்பட்டு இருக்கிறது. யமஹா ஆர்-1 பைக் போன்றே, முன்புற ஃபேரிங் பேனல்களில் டிசைன் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. முக்கிய அம்சமாக எல்இடி ஹெட்லைட்டுகள் இடம்பெற்றுள்ளன. பெரிய அளவிலான விண்ட்ஸ்க்ரீன் கண்ணாடி கொடுக்கப்பட்டு இருக்கிறது.

2019 யமஹா ஆர்-3 பைக் படங்கள், தகவல்கள் வெளியானது!

பக்கவாட்டில் ஃபேரிங் பேனல்கள் முற்றிலும் புதிதாக இருப்பதுடன் R என்ற பிராண்டு ஸ்டிக்கர் கவர்ச்சியை கூட்டுகிறது. பெட்ரோல் டேங்க் மிரட்டலாக இருப்பதுடன், ஓட்டுபவர் கால்களை சேர்த்து வைத்துக் கொள்ள ஏதுவாக வடிவமைக்கப்பட்டு இருக்கிறது. பின்புறத்தில் பெரிய அளவிலான மாற்றங்கள் இல்லாமல் தற்போதைய மாடலைப்போலவே இருக்கிறது.

2019 யமஹா ஆர்-3 பைக் படங்கள், தகவல்கள் வெளியானது!

2019 மாடலாக வரும் புதிய யமஹா ஆர்-3 பைக்கில் முற்றிலும் புதிய டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது. வெள்ளை வண்ண பேக்லிட் கொண்ட டிஎஃப்டி திரை மூலமாக பைக் இயக்கம் உள்ளிட்ட ஏராளமான தகவல்களை பெற முடியும். எஞ்சினில் வெப்பநிலை, கியர் பொசிஷன் இண்டிகேட்டர் உள்ளிட்டவற்றையும் தெரிந்து கொள்ள முடியும். க்ளிப் ஆன் ஹேண்டில்பார் இருக்கிறது.

2019 யமஹா ஆர்-3 பைக் படங்கள், தகவல்கள் வெளியானது!

புதிய யமஹா ஆர்-3 பைக்கில் முன்புறத்தில் KYB அப்சைடு டவுன் ஃபோர்க்குகள் கொண்ட சஸ்பென்ஷனுடன் சிறந்த கையாளுமை கொண்ட மாடலாக மேம்படுத்தப்பட்டு இருக்கிறது. ஆனால், இந்தியாவில் வர இருக்கும் ஆர்-3 மாடலில் இந்த ஃபோர்க்குகள் இடம்பெறுமா என்பது சந்தேகமாக உள்ளது.

2019 யமஹா ஆர்-3 பைக் படங்கள், தகவல்கள் வெளியானது!

இந்த பைக்கில் இரண்டு சிலிண்டர்கள் கொண்ட 321சிசி லிக்யூடு கூல்டு எஞ்சின் பொருத்தப்பட்டு இருக்கிறது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 41 பிஎச்பி பவரையும், 29.6 என்எம் டார்க் திறனையும் வழங்க வல்லது. 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டு இருக்கிறது.

2019 யமஹா ஆர்-3 பைக் படங்கள், தகவல்கள் வெளியானது!

இரண்டு சக்கரங்களிலும் டிஸ்க் பிரேக்குகள் கொடுக்கப்பட்டுள்ளன. ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம் நிரந்தர பாதுகாப்பு அம்சமாக இடம்பெற்றுள்ளது. இந்த பைக் 169 கிலோ எடை கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

2019 யமஹா ஆர்-3 பைக் படங்கள், தகவல்கள் வெளியானது!

புதிய யமஹா ஆர்-3 பைக்கில் இடம்பெற்றுள்ள எல்இடி ஹெட்லைட்டுகளும், டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டரும் வாடிக்கையாளர்களால் அதிகம் எதிர்பார்க்கப்படும் அம்சங்களாக இருந்தன. அந்த ஆசையை யமஹா நிறுவனம் தற்போது பூர்த்தி செய்துள்ளது.

2019 யமஹா ஆர்-3 பைக் படங்கள், தகவல்கள் வெளியானது!

அடுத்த ஆண்டு புதிய யமஹா ஆர்-3 பைக் இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வரப்பட இருக்கிறது. கேடிஎம் ஆர்சி390, கவாஸாகி நின்ஜா 300 மற்றும் பெனெல்லி 302ஆர் ஆகிய பைக் மாடல்களுடன் போட்டி போடும்.

More from DriveSpark

Article Published On: Thursday, October 11, 2018, 15:08 [IST]
English summary
Japanese two-wheeler manufacturer Yamaha has revealed the new 2019 YZF-R3. The new 2019 Yamaha YZF-R3 gets updates to the design and comes equipped with new features. The overall design of the updated Yamaha YZF-R3 is inspired by the bigger YZF-R1.
மேலும்... #யமஹா
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+