இனி 16 வயது நிரம்பியவர்களுக்கும் பைக் ஓட்ட லைசன்ஸ் வழங்க அரசு முடிவு

இந்தியாவில் 16 வயது நிரம்பிய சிறுவர்கள் 100 சிசிக்கு உட்பட்ட கியர் இல்லாத ஸ்கூட்டர்களை ஓட்ட அனுமதி வழங்க அரசு முடிவு செய்துள்ளது.

By Balasubramanian

இந்தியாவில் 16 வயது நிரம்பிய சிறுவர்கள் 100 சிசிக்கு உட்பட்ட கியர் இல்லாத ஸ்கூட்டர்களை ஓட்ட அனுமதி வழங்க அரசு முடிவு செய்துள்ளது. இதன் மூலம் சிறுவர்கள் முறையான ஆவணங்கள் இன்று பைக் ஓட்டுவதை தடுக்க முடியும் என கூறப்பட்டுள்ளது.

இனி 16 வயது நிரம்பியவர்களுக்கும் பைக் ஓட்ட லைசன்ஸ் வழங்க அரசு முடிவு

இந்தியாவில் முறையாக லைசன்ஸ் பெறாத 18 வயதிற்கு குறைந்தவர்கள் வாகனம் ஓட்டுவது அதிகரித்துள்ளது. இந்த பிரச்னை போலீசாருக்கு பெரும் தலைவலியாக இருக்கிறது. இந்த பிரச்னையை சமாளிக்க பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.

இனி 16 வயது நிரம்பியவர்களுக்கும் பைக் ஓட்ட லைசன்ஸ் வழங்க அரசு முடிவு

இந்நிலையில் கடந்த சில மாதங்களாக முறையாக லைசன்ஸ் பெறாத 18 வயதிற்கு குறைவான சிறுவர்கள் பைக் ஓட்டினால் அவர்களது பெற்றோர்களுக்கு தண்டனை வழங்குவதற்காக சட்டம் மாற்றியமைக்கப்பட்டு நடைமுறையில் உள்ளது.

இனி 16 வயது நிரம்பியவர்களுக்கும் பைக் ஓட்ட லைசன்ஸ் வழங்க அரசு முடிவு

வட இந்தியாவில் இவ்வாறு பல பெற்றோர்கள் தண்டனைக்கு உள்ளானார்கள். தமிழகத்தில் கூட இது போன்ற இரண்டு சம்பவங்கள் நடந்துள்ளது. அதிலும் பெற்றோர்கள் மீதே வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதனால் சிறுவர்கள் வாகனம் ஓட்டுவது குறையும் என போலீசார் நம்புகின்றனர்.

இனி 16 வயது நிரம்பியவர்களுக்கும் பைக் ஓட்ட லைசன்ஸ் வழங்க அரசு முடிவு

இதற்கிடையில் இந்தியாவில் 16 வயதிற்கு மேற்பட்டவர்கள் 50 சிசிக்கும் குறைவான வாகனத்தை ஓட்ட லைசன்ஸ் வழங்கப்பட்டு வருகிறது. 16 வயதை கடந்த யார் வேண்டுமானாலும் அந்த லைசன்ஸை முறையாக விண்ணப்பித்து பெற முடியும்.

இனி 16 வயது நிரம்பியவர்களுக்கும் பைக் ஓட்ட லைசன்ஸ் வழங்க அரசு முடிவு

சமீபத்தில் ஆட்டோமொபைல் துறையின் பெரும் வளர்ச்சியில் 50 சிசிக்கு உட்பட்ட ஸ்கூட்டர்கள் தற்போது மிக குறைந்த அளவிலேயே விற்பனை செய்யப்படுகிறது. இதனால் அந்த 16 -18 வயதுடையவர்களுக்கான லைசன்ஸ்சிற்கு பலன் இல்லாமல் இருக்கிறது.

இனி 16 வயது நிரம்பியவர்களுக்கும் பைக் ஓட்ட லைசன்ஸ் வழங்க அரசு முடிவு

இதையடுத்து மத்திய சாலை போக்குவரத்து அமைச்சகம் சார்பில் இந்த சட்டம் குறித்த ஆய்வு நடத்தப்பட்டது. அதில் 16-18 வயதுகுட்படவர்கள் கியர் இல்லாத 100 சிசிக்கு உட்பட்ட வாகனங்களை ஓட்ட அனுமதி வழங்கலாம் என்ற முடிவுக்கு வந்தது.

இனி 16 வயது நிரம்பியவர்களுக்கும் பைக் ஓட்ட லைசன்ஸ் வழங்க அரசு முடிவு

இதையடுத்து அவர்கள் அரசிற்கு இந்த சட்டத்தை திருத்தம் செய்ய கேட்டு கொண்டுள்ளது. தற்போது இந்த சட்ட திருத்தம் பரிசீலனையில் உள்ளது விரைவில் இது செயல்பாட்டிற்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இனி 16 வயது நிரம்பியவர்களுக்கும் பைக் ஓட்ட லைசன்ஸ் வழங்க அரசு முடிவு

இது வரும் பட்சத்தில் 16 வயது நிரம்பியவர்களுக்கு பெற்றோர்கள் சிறிய ரக ஸ்கூட்டர்களை வாங்கி தருவர் என்றும் அதை ஓட்ட அவர்களுக்கும் சட்ட ரீதியிலான அனுமதி கிடைக்கும்.

இனி 16 வயது நிரம்பியவர்களுக்கும் பைக் ஓட்ட லைசன்ஸ் வழங்க அரசு முடிவு

கடந்த வாரம் மத்திய சாலை போக்குவரத்து அமைச்சகம் சார்பில் எலெட்ரானிக் வாகனங்களுக்கு பச்சை நிற நம்பர் பிளேட் பொருத்தி கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது. தற்போது எலெட்ரிக் கார்களை டாக்ஸிகளாக பயன்படுத்த அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.

இனி 16 வயது நிரம்பியவர்களுக்கும் பைக் ஓட்ட லைசன்ஸ் வழங்க அரசு முடிவு

மேலும் தற்போது செயல்பட்டு வரும் டாக்ஸி நிறுவனங்களில் எலெட்ரானிக் வாகனங்களை பயன்படுத்தி டாக்ஸி ஓட்டவும் அரசு அனுமதிக்கவுள்ளது. விரைவில் எலெட்ரானிக் வாகனத்தின் எண்ணிக்கை இந்தியாவில் பல மடங்கு அதிகரிக்கும்.

More from DriveSpark

Article Published On: Saturday, May 12, 2018, 11:19 [IST]
English summary
Now 16-18-year-olds to get licence to ride 100cc gearless bikes.Read in Tamil
மேலும்... #ஆஃப் பீட் #offbeat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+