ஒகினவா ஐ- பிரெய்ஸ் எலெக்ட்ரிக் ஸ்கூட்டருக்கு புக்கிங் துவங்கியது!
ஒகினவா நிறுவனத்தின் ஐ- பிரெயஸ் மின்சார ஸ்கூட்டர் வரும் ஜனவரியில் விற்பனைக்கு கொண்டு வரப்பட இருக்கிறது.
ஒகினவா ஐ- பிரெய்ஸ் எலெக்ட்ரிக் ஸ்கூட்டருக்கு முன்பதிவு துவங்கப்பட்டு இருக்கிறது. கூடுதல் விபரங்களை இந்த செய்தியில் காணலாம்.

ஒகினவா நிறுவனத்தின் ஐ- பிரெயஸ் மின்சார ஸ்கூட்டர் வரும் ஜனவரியில் விற்பனைக்கு கொண்டு வரப்பட இருக்கிறது. ஸ்மார்ட் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் என்று குறிப்பிடப்படும் இந்த நவீன தொழில்நுட்ப அம்சங்கள் ஸ்கூட்டருக்கு முன்பதிவு துவங்கப்பட்டுள்ளது.

நாடுமுழுவதும் உள்ள 200க்கும் மேற்பட்ட அங்கீகரிக்கப்பட்ட ஒகினவா ஸ்கூட்டர் டீலர்களில் ரூ.5,000 முன்பணத்துடன் முன்பதிவு செய்யப்படுகிறது. முதல் கட்டமாக 500 ஸ்கூட்டர்களுக்கு முன்பதிவு ஏற்கப்பட இருக்கிறது. இவை அனைத்தையுமே ஜனவரியிலேயே டெலிவிரி கொடுத்துவிடுவதற்கும் ஒகினவா திட்டமிட்டுள்ளது.

இந்த ஸ்கூட்டரில் முக்கிய அம்சமாக, பேட்டரியை கழற்றி மாட்டும் வசதி இருக்கிறது. இதனால், சார்ஜ் செய்வது எளிது என்பதுடன், பராமரிப்பும் குறைவாக தேவைப்படும்.

ஒகினவா ஸ்கூட்டர்களிலேயே மிக குறைவான நேரத்தில் பேட்டரியை முழுமையாக சார்ஜ் செய்யும் வசதியுடன் ஐ- பிரெய்ஸ் ஸ்கூட்டர் வர இருக்கிறது. இந்த ஸ்கூட்டரில் இருக்கும் லித்தியம் அயான் பேட்டரியை 3 மணிநேரத்திற்கும் உள்ளாகவே சார்ஜ் செய்துவிட முடியும்.

இந்த பேட்டரி மூலமாக ஸ்கூட்டரின் எடையும் 40 சதவீதம் வரை குறைவாக தெரிவிக்கப்படுகிறது. முழுமையாக சார்ஜ் செய்யும்பட்சத்தில், 160 முதல் 180 கிமீ தூரம் வரை பயணிக்க முடியும்.

இந்த புதிய ஸ்கூட்டரில் 1 kW மின் மோட்டார் பொருத்தப்பட்டு இருக்கிறது. அதிகபட்சமாக இந்த ஸ்கூட்டடர் மணிக்கு 75 கிமீ வேகம் வரை செல்லும் திறன் வாய்ந்தது.

இந்த ஸ்கூட்டரில் எல்இடி பகல்நேர விளக்குகள், இ- ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம், யுஎஸ்பி போர்ட் மற்றும் ஆன்ட்டி தெஃப்ட் அலாரம் ஆகியவை இடம்பெற்றுள்ளது.

ஒகினவா ஐ- பிரெய்ஸ் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் ரூ.71,000 எக்ஸ்ஷோரூம் விலையில் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனை புத்திசாலி ஸ்கூட்டர் என்று ஒகினவா குறிப்பிடுகிறது.


Click it and Unblock the Notifications








