ஒகினவா ரிட்ஜ் ப்ளஸ் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் விற்பனைக்கு அறிமுகம்!

ரிட்ஜ் ஸ்கூட்டரில் லித்தியம் அயான் பேட்டரி பொருத்தப்பட்ட மாடலை இப்போது விற்பனைக்கு களமிறக்கி இருக்கிறது ஒகினவா நிறுவனம். ரிட்ஜ் ப்ளஸ் என்ற பெயரில் வந்துள்ள இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் தண்ணீர் புகாத

ஒகினவா ரிட்ஜ் ப்ளஸ் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. கூடுதல் விபரங்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

ஒகினவா ரிட்ஜ் ப்ளஸ் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் விற்பனைக்கு அறிமுகம்!

ஜப்பானை சேர்ந்த ஒகினவா நிறுவனம் இந்தியாவில் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மார்க்கெட்டில் வலுவான சந்தை பங்களிப்பை பெறுவதற்கான முயற்சிகளை தீவிரப்படுத்தி இருக்கிறது. ஏற்கனவே, விற்பனையில் இருக்கும் ஒகினவா ரிட்ஜ் ஸ்கூட்டர் லீட் ஆசிட் பேட்டரியில் கிடைக்கிறது.

ஒகினவா ரிட்ஜ் ப்ளஸ் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் விற்பனைக்கு அறிமுகம்!

இந்த நிலையில், ரிட்ஜ் ஸ்கூட்டரில் லித்தியம் அயான் பேட்டரி பொருத்தப்பட்ட மாடலை இப்போது விற்பனைக்கு களமிறக்கி இருக்கிறது. ரிட்ஜ் ப்ளஸ் என்ற பெயரில் வந்துள்ள இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் தண்ணீர் புகாத அம்சம் கொண்ட 800 வாட் மின் மோட்டார் பொருத்தப்பட்டு இருக்கிறது.

ஒகினவா ரிட்ஜ் ப்ளஸ் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் விற்பனைக்கு அறிமுகம்!

மேலும், இந்த ஸ்கூட்டரில் லித்தியம் அயான் பேட்டரியை தனியாக கழற்றி மாட்டும் வசதியையும் அளிக்கிறது. இதன்மூலமாக, பேட்டரியை வீட்டிற்குள் எடுத்துச் சென்று எளிதாக சார்ஜ் செய்ய இயலும்.

ஒகினவா ரிட்ஜ் ப்ளஸ் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் விற்பனைக்கு அறிமுகம்!

புதிய ஒகினவா ரிட்ஜ் ப்ளஸ் ஸ்கூட்டரின் பேட்டரியை முழுமையாக சார்ஜ் செய்தால் 120 கிமீ தூரம் வரை பயணிக்க முடியும். மணிக்கு 55 கிமீ வேகத்தில் செல்லும் திறன் பெற்றது. இந்த ஸ்கூட்டரின் மற்றொரு முக்கிய அம்சம் 150 கிலோ வரை எடை சுமந்து செல்லும் திறன் பெற்றிருக்கிறது.

ஒகினவா ரிட்ஜ் ப்ளஸ் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் விற்பனைக்கு அறிமுகம்!

நகர்புறங்களில் எளிதாக ஓட்டுவதற்கு ஏற்ப மிகச் சிறந்த கையாளுமை கொண்ட ஸ்கூட்டர் மாடலாக தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. இந்த ஸ்கூட்டரில் கார்களில் இருப்பது போன்று, சென்ட்ரல் லாக்கிங் வசதி, திருட்டு முயற்சி குறித்து எச்சரிக்கும் வசதி, கீ லெஸ் என்ட்ரி உள்ளிட்ட தொழில்நுட்ப வசதிகள் உள்ளன.

ஒகினவா ரிட்ஜ் ப்ளஸ் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் விற்பனைக்கு அறிமுகம்!

இந்த புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் இரண்டு சக்கரங்களிலும் டிரம் பிரேக்குகள் பொருத்தப்பட்டுள்ளன. மேலும், மின்னணு கட்டுப்பாட்டு முறையில் செயல்படும் எலக்ட்ரானிக் அசிஸ்டட் பிரேக்கிங் சிஸ்டம் தொழில்நுட்பமும் இருக்கிறது.

ஒகினவா ரிட்ஜ் ப்ளஸ் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் விற்பனைக்கு அறிமுகம்!

இந்த ஸ்கூட்டரில் ரீஜெனரேட்டிவ் எனர்ஜி சிஸ்டம் மற்றும் பெரிய பார்க்கிங் வளாகங்களில் நிறுத்தும்போது எளிதாக கண்டுபிடிப்பதற்கான ரிமோட் லோக்கேட் வசதிகளும் உள்ளன. இந்த புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் லூசென்ட் ஆரஞ்ச் மற்றும் மேக்னா கிரே ஆகிய இரட்டை வண்ணத்திலும், மைல்டு நைட் புளூ என்ற வண்ணத்திலும் கிடைக்கும்.

ஒகினவா ரிட்ஜ் ப்ளஸ் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் விற்பனைக்கு அறிமுகம்!

ரூ.64,988 எக்ஸ்ஷோரூம் விலையில் புதிய ஒகினவா ரிட்ஜ் ப்ளஸ் ஸ்கூட்டர் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. லீட் ஆசிட் பேட்டரி பொருத்தப்பட்ட ஒகினவா ரிட்ஜ் மாடலைவிட ரிட்ஜ் ப்ளஸ் ஸ்கூட்டர் ரூ.21,000 கூடுதல் விலையில் வந்துள்ளது.

ஒகினவா ரிட்ஜ் ப்ளஸ் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் விற்பனைக்கு அறிமுகம்!

இந்தியாவில் ஒகினவா நிறுவனத்தின் மூன்றாவது எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடலாக ஒகினவா ரிட்ஜ் ப்ளஸ் வந்துள்ளது. பிரெய்ஸ் மற்றும் ஒகினவா ரிட்ஜ் ஆகிய மேலும் இரண்டு எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடல்களை அந்நிறுவனம் விற்பனை செய்து வருகிறது. இந்திய வாடிக்கையாளர்களுக்கு மிகச் சிறந்த தயாரிப்பை வழங்கும் விதத்தில் இந்த மாடலை களமிறக்கி இருப்பதாக ஒகினவா நிறுவனம் பெருமிதம் தெரிவித்துள்ளது.

More from DriveSpark

Article Published On: Thursday, October 11, 2018, 11:19 [IST]
English summary
Okinawa Ridge+ electric scooter launched in India: Okinawa Scooters, India's fastest growing electric two-wheeler manufacturer has launched the Ridge+ electric scooter in the country. The Okinawa Ridge+ is priced at Rs 64,988 ex-showroom (India).
மேலும்... #ஒகினவா
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+