இந்த பைக்கை யாராவது ரோட்டில் பார்த்தீர்களா? விபரீத முடிவால் அவமானப்பட்ட வேர்ல்டு நம்பர்-1 ஹீரோ..

Karizma ZMR பைக்கை ரீ லான்ச் செய்வது என்ற விபரீத முடிவை எடுத்ததன் மூலம் தனது தலையில் தானே மண்ணை வாரி போட்டு கொண்டுள்ளது ஹீரோ.

Karizma ZMR பைக்கை ரீ லான்ச் செய்வது என்ற விபரீத முடிவை எடுத்ததன் மூலம் தனது தலையில் தானே மண்ணை வாரி போட்டு கொண்டுள்ளது ஹீரோ. உலகின் நம்பர்-1 நிறுவனமான ஹீரோவுக்கு புதிய Karizma ZMR பைக் பெருத்த அவமானத்தை உண்டாக்கியுள்ளது.

இந்த பைக்கை யாராவது ரோட்டில் பார்த்தீங்களா? விபரீத முடிவால் அவமானப்பட்ட வேர்ல்டு நம்பர்-1 ஹீரோ..

இந்தியாவை சேர்ந்த முன்னணி இரு சக்கர வாகன உற்பத்தி நிறுவனமான ஹீரோ மோட்டோகார்ப், கடந்த பிப்ரவரி மாதம் கிரேட்டர் நொய்டாவில் நடைபெற்ற 2018 ஆட்டோ எக்ஸ்போவில், புதிய கரிஷ்மா இஸட்எம்ஆர் (Karizma ZMR) பைக்கை காட்சிக்கு வைத்திருந்தது.

இந்த பைக்கை யாராவது ரோட்டில் பார்த்தீங்களா? விபரீத முடிவால் அவமானப்பட்ட வேர்ல்டு நம்பர்-1 ஹீரோ..

அதற்கு அடுத்த சில மாதங்களில் புதிய Karizma ZMR பைக்கை ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகமும் செய்து விட்டது. ஆனால் வழக்கம் போல இம்முறையும் விற்பனையில் சோபிக்க தவறியுள்ளது புதிய Karizma ZMR.

இந்த பைக்கை யாராவது ரோட்டில் பார்த்தீங்களா? விபரீத முடிவால் அவமானப்பட்ட வேர்ல்டு நம்பர்-1 ஹீரோ..

Karizma ZMR பைக் புதிய அவதாரம் எடுத்து வந்ததால் ஹீரோ மோட்டோகார்ப் பெரிய அளவிலான எதிர்பார்ப்புகளுடன் பல மனக்கோட்டைகளை கட்டி இருந்தது. ஆனால் ஹீரோ மோட்டோகார்ப் எதிர்பார்த்த அளவை காட்டிலும் மிகவும் குறைவான எண்ணிக்கையில்தான் புதிய Karizma ZMR விற்பனையாகிறது.

இந்த பைக்கை யாராவது ரோட்டில் பார்த்தீங்களா? விபரீத முடிவால் அவமானப்பட்ட வேர்ல்டு நம்பர்-1 ஹீரோ..

போதிய வரவேற்பு மற்றும் விற்பனை இல்லாததால் Karizma ZMR பைக்கின் விற்பனையை ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் கடந்த 2016ம் ஆண்டில் நிறுத்தியது. ஆனால் அதற்கு அடுத்த சுமார் ஒன்றரை ஆண்டுகளில் புதிய Karizma ZMR பைக்கை ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் மீண்டும் ரீ லான்ச் செய்தது.

இந்த பைக்கை யாராவது ரோட்டில் பார்த்தீங்களா? விபரீத முடிவால் அவமானப்பட்ட வேர்ல்டு நம்பர்-1 ஹீரோ..

இது யாரும் எதிர்பார்க்காத மற்றும் மிகவும் ஆச்சரியமான ஓர் முடிவுதான். ஒருவேளை 200 சிசி பைக் செக்மெண்ட் வளர்ச்சி அடைந்து வந்ததால், ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் இந்த முடிவை துணிந்து எடுத்திருக்க கூடும் என ஆட்டோமொபைல் துறை வல்லுனர்கள் தெரிவிக்கின்றனர்.

இந்த பைக்கை யாராவது ரோட்டில் பார்த்தீங்களா? விபரீத முடிவால் அவமானப்பட்ட வேர்ல்டு நம்பர்-1 ஹீரோ..

ஏனெனில் இந்த செக்மெண்ட்டில் உள்ள மற்ற நிறுவனங்களின் 200 சிசி பைக்குகள் விற்பனையில் வளர்ச்சியை காட்டின. இந்த ஆர்வத்தினால்தான் Karizma ZMR பைக்கை மீண்டும் ஒரு முறை ரீ லான்ச் செய்து விடுவது என்ற முடிவை ஹீரோ மோட்டோகார்ப் எடுத்திருக்க கூடும் என்பது அவர்களின் வாதம்.

இந்த பைக்கை யாராவது ரோட்டில் பார்த்தீங்களா? விபரீத முடிவால் அவமானப்பட்ட வேர்ல்டு நம்பர்-1 ஹீரோ..

புதிய அவதாரம் என்றாலும், பழைய மாடலுடன் ஒப்பிடுகையில் டிசைனில் சிறிய அளவிலான மாற்றங்களை மட்டுமே புதிய Karizma ZMR பைக் சந்தித்துள்ளது. ஸ்டாண்டர்டு மற்றும் ட்யூயல் டோன் என்ற 2 வேரியண்ட்களில் புதிய Karizma ZMR பைக் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

இந்த பைக்கை யாராவது ரோட்டில் பார்த்தீங்களா? விபரீத முடிவால் அவமானப்பட்ட வேர்ல்டு நம்பர்-1 ஹீரோ..

இதில், ஸ்டாண்டர்டு வேரியண்ட்டின் விலை 1.08 லட்ச ரூபாய். அதே சமயம் ட்யூயல் டோன் வேரியண்ட்டின் விலை 1.10 லட்ச ரூபாய். இவை அனைத்தும் டெல்லி எக்ஸ் ஷோரூம் விலை மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த பைக்கை யாராவது ரோட்டில் பார்த்தீங்களா? விபரீத முடிவால் அவமானப்பட்ட வேர்ல்டு நம்பர்-1 ஹீரோ..

ஆனால் மேலே கூறியுள்ளபடி இம்முறையும் விற்பனையில் சோடை போயுள்ளது புதிய Karizma ZMR பைக். அதாவது கடந்த மே மாதத்தில் வெறும் 17 புதிய Karizma ZMR பைக்குகளை மட்டுமே ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் விற்பனை செய்தது.

இந்த பைக்கை யாராவது ரோட்டில் பார்த்தீங்களா? விபரீத முடிவால் அவமானப்பட்ட வேர்ல்டு நம்பர்-1 ஹீரோ..

இந்த எண்ணிக்கையானது ஜூன் மாதத்தில் 12ஆக குறைந்தது. அதன்பின் வந்த ஜூலை மாதத்தில் 14 புதிய Karizma ZMR பைக்குகள் மட்டுமே விற்பனையாயின. இதனால் புதிய Karizma ZMR பைக் மீது ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்திற்கு இருந்த கொஞ்ச நஞ்ச நம்பிக்கையும் சுத்தமாக தகர்ந்து போனது.

இந்த பைக்கை யாராவது ரோட்டில் பார்த்தீங்களா? விபரீத முடிவால் அவமானப்பட்ட வேர்ல்டு நம்பர்-1 ஹீரோ..

இந்த சூழலில் கடந்த ஆகஸ்ட் மாதத்தில் வெறும் 10 புதிய Karizma ZMR பைக்குகளையும், கடந்த செப்டம்பர் மாதத்தில் வெறும் 11 Karizma ZMR பைக்குகளையும் மட்டுமே ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தால் விற்பனை செய்ய முடிந்துள்ளது.

இந்த பைக்கை யாராவது ரோட்டில் பார்த்தீங்களா? விபரீத முடிவால் அவமானப்பட்ட வேர்ல்டு நம்பர்-1 ஹீரோ..

ஆக மொத்தத்தில் கடந்த மே முதல் செப்டம்பர் வரையிலான 5 மாத கால கட்டத்தில் வெறும் 64 புதிய Karizma ZMR பைக்குகளை மட்டுமே ஹீரோ மோட்டோகார்ப் விற்பனை செய்துள்ளது. புதிய Karizma ZMR பைக்கானது ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் காலை மொத்தமாக வாரிவிட்டுள்ளது.

இந்த பைக்கை யாராவது ரோட்டில் பார்த்தீங்களா? விபரீத முடிவால் அவமானப்பட்ட வேர்ல்டு நம்பர்-1 ஹீரோ..

இல்லை.. இல்லை.. Karizma ZMR பைக்கை மீண்டும் ரீ லான்ச் செய்வது என்ற விபரீதமான முடிவை எடுத்ததன் மூலம் தனது தலையில் தானே மண்ணை வாரி போட்டு கொண்டுள்ளது ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம்.

இந்த பைக்கை யாராவது ரோட்டில் பார்த்தீங்களா? விபரீத முடிவால் அவமானப்பட்ட வேர்ல்டு நம்பர்-1 ஹீரோ..

புதிய Karizma ZMR பைக்கின் விலையில் உள்ள அதன் போட்டி பைக்குகள் ஒரு மாதத்திற்கு 5 இலக்க எண்ணிக்கையில் விற்பனையாகி கொண்டுள்ளன. ஆனால் 5 மாதங்களை சேர்த்து கூட்டினாலும் புதிய Karizma ZMR பைக்கால் 2 இலக்க எண்ணிக்கையை தாண்ட முடியவில்லை.

இந்த பைக்கை யாராவது ரோட்டில் பார்த்தீங்களா? விபரீத முடிவால் அவமானப்பட்ட வேர்ல்டு நம்பர்-1 ஹீரோ..

புதிய Karizma ZMR பைக்கில் 223 சிசி, சிங்கிள் சிலிண்டர், ஆயில் கூல்டு, ப்யூயல் இன்ஜெக்டட் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் 8,000 ஆர்பிஎம்மில் 20 பிஎச்பி பவரையும், 6,500 ஆர்பிஎம்மில் 19.7 என்எம் டார்க் திறனையும் வழங்கக்கூடியது.

இந்த பைக்கை யாராவது ரோட்டில் பார்த்தீங்களா? விபரீத முடிவால் அவமானப்பட்ட வேர்ல்டு நம்பர்-1 ஹீரோ..

பஜாஜ் பல்சர் ஆர்எஸ் 200 பைக்குடன் போட்டியிட்டு வரும் புதிய Karizma ZMR பைக்கின் டாப் ஸ்பீடு என்ன தெரியுமா? மணிக்கு 129 கிலோ மீட்டர்கள் மட்டுமே. அதே சமயம் பஜாஜ் பல்சர் ஆர்எஸ் 200 பைக்கின் டாப் ஸ்பீடு மணிக்கு 140.8 கிலோ மீட்டர்கள்.

இந்த பைக்கை யாராவது ரோட்டில் பார்த்தீங்களா? விபரீத முடிவால் அவமானப்பட்ட வேர்ல்டு நம்பர்-1 ஹீரோ..

இதுதவிர புதிய Karizma ZMR பைக்கில் ஏபிஎஸ் பிரேக் வசதியும் இல்லை. ஆனால் 125 சிசிக்கும் அதிகமான இன்ஜின் திறன் கொண்ட அனைத்து பைக்குகளிலும், வரும் 2019ம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் ஏபிஎஸ் வசதி கட்டாயம் இடம்பெற வேண்டும் என மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்த பைக்கை யாராவது ரோட்டில் பார்த்தீங்களா? விபரீத முடிவால் அவமானப்பட்ட வேர்ல்டு நம்பர்-1 ஹீரோ..

உலகின் நம்பர்-1 இரு சக்கர வாகன உற்பத்தி நிறுவனமாக திகழ்வது ஹீரோ மோட்டோகார்ப்தான். கடந்த செப்டம்பர் மாதத்தில் மட்டும் மொத்தம் 7,69,138 இரு சக்கர வாகனங்களை ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் விற்பனை செய்துள்ளது.

இந்த பைக்கை யாராவது ரோட்டில் பார்த்தீங்களா? விபரீத முடிவால் அவமானப்பட்ட வேர்ல்டு நம்பர்-1 ஹீரோ..

உலகில் வேறு எந்த நிறுவனமும் ஒரே மாதத்தில் இவ்வளவு அதிக இரு சக்கர வாகனங்களை இதுவரை விற்பனை செய்தது கிடையாது. வரலாற்றில் முதல் முறையாக ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம்தான் ஒரே மாதத்தில் இவ்வளவு அதிக இரு சக்கர வாகனங்களை விற்பனை செய்துள்ளது. ஆனால் புதிய Karizma ZMR பைக்கில் மட்டும் கோட்டை விட்டு விட்டது ஹீரோ மோட்டோகார்ப்.

Most Read Articles

ஹீரோ எக்ஸ்ட்ரீம் 200ஆர் பைக்கின் புகைப்பட ஆல்பத்தை நீங்கள் இங்கே காணலாம்.

English summary
Only 64 Units Of New Hero Karizma ZMR Bikes Sold Since May. Read in Tamil
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X