பல்சர் சிட்டிக்கு போகலாம் வாங்க! 1 கோடி பல்சர் பைக்குகள் விற்பனையானதை வித்தியாசமாக கொண்டாடும் பஜாஜ்!

1 கோடி பல்சர் பைக்குகளை விற்பனை செய்து சாதனை படைத்ததை பஜாஜ் நிறுவனம் கொண்டாடி வருகிறது. இதற்காக புதிய டிவிசி ஒன்றை பஜாஜ் நிறுவனம் வெளியிட்டுள்ளது.

By Arun

1 கோடி பல்சர் பைக்குகளை விற்பனை செய்து சாதனை படைத்ததை பஜாஜ் நிறுவனம் கொண்டாடி வருகிறது. இதற்காக புதிய டிவிசி ஒன்றை பஜாஜ் நிறுவனம் வெளியிட்டுள்ளது. இதுகுறித்த விரிவான தகவல்களை பின்வரும் ஸ்லைடர்களில் காணலாம்.

பல்சர் சிட்டிக்கு போகலாம் வாங்க! 1 கோடி பல்சர் பைக்குகள் விற்பனையானதை வித்தியாசமாக கொண்டாடும் பஜாஜ்!

2001ம் ஆண்டு தொடங்கி இன்று வரை பைக் ஆர்வலர்களை சுண்டியிழுத்து வரும் மந்திர சொல் 'பல்சர்'. இந்தியாவின் புனே நகரை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வரும் பஜாஜ் நிறுவனம் அந்த ஆண்டில்தான், பல்சர் பைக்கை முதல் முறையாக மார்க்கெட்டில் லான்ச் செய்தது.

பல்சர் சிட்டிக்கு போகலாம் வாங்க! 1 கோடி பல்சர் பைக்குகள் விற்பனையானதை வித்தியாசமாக கொண்டாடும் பஜாஜ்!

இந்தியர்களுடன் பல்சர் பைக், இந்த அளவிற்கு பின்னி பிணையும் என பஜாஜ் நிறுவனம் நினைத்திருக்குமா? என்பது கூட சந்தேகமே. ஆம், இந்தியாவில் இன்று 1 கோடி பல்சர் பைக்குகளை விற்பனை செய்து சாதனை படைத்திருக்கிறது பஜாஜ் நிறுவனம்.

பல்சர் சிட்டிக்கு போகலாம் வாங்க! 1 கோடி பல்சர் பைக்குகள் விற்பனையானதை வித்தியாசமாக கொண்டாடும் பஜாஜ்!

இந்தியாவின் 1 கோடி குடும்பங்களை பல்சர் பைக் சென்றடைந்துள்ளதை கொண்டாடும் விதமாக, புதிய டிவிசி (TVC) வீடியோ ஒன்றை பஜாஜ் நிறுவனம் தற்போது ரிலீஸ் செய்துள்ளது. பஜாஜ் வெளியிட்டுள்ள இந்த டிவிசி-யில் இடம்பெற்றுள்ள ஸ்டண்ட்கள், பார்ப்பவர்களை மிரள செய்கின்றன.

பல்சர் சிட்டிக்கு போகலாம் வாங்க! 1 கோடி பல்சர் பைக்குகள் விற்பனையானதை வித்தியாசமாக கொண்டாடும் பஜாஜ்!

பல்சர் சிட்டி என்று பெயரிடப்பட்ட ஒரு நகரில், பல்சர் பைக்குகள் மூலம், ரேஸர்கள் பலர் பல்வேறு விதமான ஸ்டண்ட்களை செய்கின்றனர். செங்குத்தான வெர்டிக்கல் பார்க்கிங், லூப் ரைடிங் என ரேஸர்கள் செய்யும் ஸ்டண்ட்கள் அடங்கிய அந்த டிவிசி-யை நீங்கள் கீழே காணலாம்.

பல்சர் பைக்குகளில் பல்வேறு புதிய புதிய மாடல்களை பஜாஜ் நிறுவனம் தொடர்ச்சியாக அறிமுகப்படுத்தி கொண்டே வருகிறது. தற்போது 135 எல்எஸ், 150, 180, 220, என்எஸ் 160, என்எஸ் 200 மற்றும் ஆர்எஸ் 200 என பல்சர் பைக்கில் மொத்தம் 7 மாடல்களை பஜாஜ் விற்பனை செய்து வருகிறது.

பல்சர் சிட்டிக்கு போகலாம் வாங்க! 1 கோடி பல்சர் பைக்குகள் விற்பனையானதை வித்தியாசமாக கொண்டாடும் பஜாஜ்!

பல்சர் பைக்குகளின் பெரும்பாலான மாடல்கள் இந்தியாவில் பிரபலமானவை. குறிப்பாக இளைஞர்கள் மத்தியில் மிக மிக பிரபலமானவை. ஷார்ப் ஸ்டைலிங், சிறப்பான பெர்பார்மன்ஸை வழங்கும் மோட்டார்கள், மலிவான விலை ஆகியவையே இதற்கு முக்கிய காரணங்களாக கருதப்படுகிறது.

பல்சர் சிட்டிக்கு போகலாம் வாங்க! 1 கோடி பல்சர் பைக்குகள் விற்பனையானதை வித்தியாசமாக கொண்டாடும் பஜாஜ்!

ஸ்போர்ட்ஸ் மாடலில் பைக் வேண்டும், பராமரிக்க எளிதாக இருக்க வேண்டும் என எதிர்பார்ப்பவர்களின் முதல் சாய்ஸ் பல்சர். இந்தியாவில் தற்போது விற்பனையாகி வரும் அதிக விலை கொண்ட பல்சர் மாடல் பைக் ஆர்எஸ் 200தான்.

பல்சர் சிட்டிக்கு போகலாம் வாங்க! 1 கோடி பல்சர் பைக்குகள் விற்பனையானதை வித்தியாசமாக கொண்டாடும் பஜாஜ்!

பஜாஜ் பல்சர் ஆர்எஸ் 200 பைக், ரூ.1.24 லட்சம் முதல் ரூ.1.44 லட்சம் வரையிலான எக்ஸ் ஷோரூம் விலையில் கிடைக்கிறது. இந்த பைக்கில் 199.5 சிசி, சிங்கிள் சிலிண்டர், ப்யூயல் இன்ஜெக்டட் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது.

பல்சர் சிட்டிக்கு போகலாம் வாங்க! 1 கோடி பல்சர் பைக்குகள் விற்பனையானதை வித்தியாசமாக கொண்டாடும் பஜாஜ்!

இந்த இன்ஜின் அதிகபட்சமாக 9,750 ஆர்பிஎம்மில் 24.5 பிஎஸ் பவரை வழங்கவல்லது. 6 ஸ்பீடு டிரான்ஸ்மிஷன் உடன் பல்சர் ஆர்எஸ் 200 பைக் விற்பனைக்கு வருகிறது. மிகவும் விலை குறைவான பல்சர் மாடல் 135 எல்எஸ். இதன் விலை சுமார் 64 ஆயிரம் ரூபாய மட்டுமே.

பல்சர் சிட்டிக்கு போகலாம் வாங்க! 1 கோடி பல்சர் பைக்குகள் விற்பனையானதை வித்தியாசமாக கொண்டாடும் பஜாஜ்!

இந்த பைக்கில் 134.66 சிசி, சிங்கிள் சிலிண்டர் மோட்டார் பொருத்தப்பட்டுள்ளது. இது அதிகபட்சமாக 9,000 ஆர்பிஎம்மில் 14 பிஎஸ் பவரை வெளிப்படுத்தும். 5 ஸ்பீடு டிரான்ஸ்மிஷன் உடன் பல்சர் 135 எல்எஸ் பைக் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

பல்சர் சிட்டிக்கு போகலாம் வாங்க! 1 கோடி பல்சர் பைக்குகள் விற்பனையானதை வித்தியாசமாக கொண்டாடும் பஜாஜ்!

ஆனால் பல்சர் பைக்கின் மற்ற மாடல்களை போல், 135 எல்எஸ் அதிகம் பிரபலமாகவில்லை. இடையில் ஒரு சில ஆண்டுகள் பல்சர் பைக்கின் விற்பனை திடீரென சரிவை சந்தித்திருந்தது. எனினும் தற்போது அதன் விற்பனை மீண்டும் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது.

பல்சர் சிட்டிக்கு போகலாம் வாங்க! 1 கோடி பல்சர் பைக்குகள் விற்பனையானதை வித்தியாசமாக கொண்டாடும் பஜாஜ்!

இந்த வகையில் கடந்த 2018ம் ஆண்டு மே மாதத்தில் மட்டும் 70 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பஜாஜ் பல்சர் பிரீமியம் மற்றும் என்ட்ரி லெவல் ஸ்போர்ட்ஸ் பைக்குகள் விற்பனையாகி சாதனை படைத்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்ட செய்திகள்

English summary
Pulsar bikes reached 10 million homes in india: Bajaj auto ltd released new tvc to celebrate. Read in tamil
Story first published: Monday, July 2, 2018, 13:43 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X