பைக்கை விற்பனை செய்ய ராயல் என்பீல்டு நிறுவனம் செய்யும் செயலை பாருங்கள்..!
ராயல் என்பீல்டு நிறுவனம் சமீபத்தில் வெளியிட்ட தங்களது பைக்ககளை விற்பனை செய்யகோவாவில் ரைடர் மேனியா என்ற நிகழ்ச்சியை நடந்துகிறது. இந்த நிகழ்ச்சியில் பார்வையாளர்களை கவர பல்வேறு சாகச நிகழ்ச்சிகள் நடத்தப்
ராயல் என்பீல்டு நிறுவனம் சமீபத்தில் வெளியிட்ட தங்களது பைக்ககளை விற்பனை செய்யகோவாவில் ரைடர் மேனியா என்ற நிகழ்ச்சியை நடந்துகிறது. இந்த நிகழ்ச்சியில் பார்வையாளர்களை கவர பல்வேறு சாகச நிகழ்ச்சிகள் நடத்தப்படுகிறது. இதில் குறிப்பாக சிறு வயதில் நாம் கண்ட மரணக்கிணறு நிகழ்ச்சியும் நடத்தப்படுகிறது. இது குறித்த விரிவான செய்தியை கீழே காணுங்கள்.

ராயல் என்பீல்டு நிறுவனம் ஆண்டு தோறும் ரைடர்ஸ் மேனியா என்ற நிகழ்ச்சியை கோவாவில் நடத்துகிறது. இதில் இந்தியாவில் முழுவதிலும் இருந்து ராயல் என்பீல்டு பைக் வைத்திருக்கும் ஓனர்கள் கலந்து கொள்வார்கள். இங்கு ராயல் என்பீல்டு ஓனர்களுக்கு தங்கள் பைக்களை வைத்து சிறு சிறு போட்டிகள் நடத்தப்படும்.

அதற்கான பரிசுகள் வழங்கப்படும். மேலும் இந்த நிகழ்ச்சியில் இந்தியாவில் பல்வேறு பகுதிகளில் இருந்து ராயல் என்பீல்டு ரசிகர்கள் கலந்து கொள்வதால் அங்கு பல விதமாக மாடிஃபிகேஷன் செய்யப்பட்ட பைக்குகளை காண முடியும்.

இதற்காகவே இங்கு பைக் ரசிகர்கள் எல்லாம் கூடி விடுவார்கள். இந்த விழா கடந்த 2003ம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் நடந்து வருகிறது. இந்தாண்டிற்கான விழா இன்று கோவாவில் நடக்கிறது. இன்று முதல் ஞாயிறு வரை நடக்கும் இந்த விழாவில் ஏராளமான ரைடர்கள் கலந்துகொள்கின்றனர்.

இந்தாண்டு நடக்கும் இந்த விழாவில் புதிதாக ஒரு விஷயத்தை அறிமுகப்படுத்துகிறது ராயல் என்பீல்டு நிறுவனம். அந்த நிகழ்ச்சியில் புதிதாக மரணக்கிணறு நிகழ்ச்சியை நடத்த அந்நிறுவனம் ஏற்பாடு செய்துள்ளது.

மரணக்கிணறு இந்த வார்த்தையை எங்கே கேள்வி பட்டிருக்கிறீர்களா? ஆம் நாம் சிறு வயதில் இருக்கும் போது நம் ஊரில் போடும் சர்க்கஸ், பொருட்காட்சிகளில் இந்த மரணக்கிணறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டிருக்கும் சிறு வயதில் இந்த நிகழ்ச்சியை பார்க்காதவர்களே இருந்திருக்க முடியாது.

கிணறு போன்ற உயரமான ஒரு வடிவமைப்பை அமைத்து அதில் பைக் ரைடர்கள் அந்த சுவரின் உட்புறமாக பைக்கை ஓட்டுவார்கள். அது மட்டும் அல்லது பைக்கை ஓட்டும் போது பெரும் சாகசத்திலும் ஈடுபடுவார்கள். இதை பார்வையாளர்கள் இந்த கிணறு போன்ற அமைப்பின் மேல இருந்து பார்ப்பார்கள்.

பைக் சாகசகார்களின் இந்த நிகழ்ச்சி பார்ப்பவர்களை மெய்சிலிர்க்க வைத்து விடும் அந்த வகையில் அவர்கள் செய்யும் சாகசம் இருக்கும்.

இந்த மாதிரியான சாகத்திற்கு பொதுவாக இரண்டு ஸ்டோக் பைக்குகளான யமஹா ஆர்எக்ஸ் 100 மற்றும் சுசூகி ஷோகன் ஆகிய பைக்குகள் தான் பயன்படுத்தப்படும். ஆனால் இந்த நிகழ்ச்சியில் 6 ரைடர்கள் ராயல் என்பீல்டு பைக்கை இதில் பயன்படுத்தவுள்ளர். அவர்கள் எல்லாம் இதில் ஏற்கனவே ராயல் என்பீல்டை பயன்படுத்தி பயிற்சி பெற்றவர்கள் என் கூறப்படுகிறது.

இந்த சாகசம் அறிவியலின் படி மையவிலக்கு விலக்கு விசை என்று அழைக்கப்படக்கூடிய சென்ட்ரிஃபியூகல் ஃபோர்ஸ் கோட்பாட்டை பின்பற்றி இது செயல்படுகிறது. இதனால் இதில் பலர் குறைந்த எடை கொண்ட வாகனங்களை பயன்படுத்துவார்கள், அதிக எடை கொண்ட வாகனங்களை கொண்டு இதை செய்வது கொஞ்சம் ரிஸ்க் தான்.

ஆனால் இதை நன்கு பயிற்றுவிற்க்கப்பட்ட ஊழியர்களை கொண்டே இது நடத்தப்படுவதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது. ஆனால் இன்று முதல் ரைடர் மேனியாவில் கலந்து கொள்ளும் ஒவ்வொருவரும் பெரும் விருந்து காத்திருக்கிறது.

இந்த மரணக்கிணறு மட்டும் இல்லை இந்த ரைடர் மேனியாவில் தங்கள் ராயல் என்பீல்டுபைக்குடன் செல்லும் அனைவரும் கலந்து கொள்ளும் வகையில் ஸ்லோ ரேஸ், சகதிகளில் பயணிக்கூடிய ட்ரிட் ரேஸ் ஆகிய போட்டிகளும் இங்கு நடக்கும்.

இந்த அத்தனை நிகழ்வுகளும் எதர்காக என்றால் ராயல் என்பீல்டு ரசிகர்கள் மத்தயில் தங்களது புதிய தயாரிப்பான ராயல் என்பீல்டு 650 டுவின்ஸ் என்று அழைக்கப்படக்கூடிய இரண்டு 650 சிசி ரக பைக்குகளையும் அறிமுகப்படுத்துவதே ஆகும்.

ராயல் என்பீல்டு நிறுவனம் இந்த இரண்டு பைக்களை கடந்த 2 நாட்களுக்கு முன்பு அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தியது. இந்த பைக்குகளை நேரடியக ராயல் என்பீல்டு ரசிகர்கள் மத்தியில் கொண்டு சேர்க்க இந்த நிகழ்ச்சி நடத்தப்படுகிறது.

இந்த இரண்டு ராயல் என்பீல்டு இன்டர்செப்டர் 650 மற்றும் கான்டினென்டல் ஜிடி 650 ஆகிய பைக்குகள் நடக்கும் ரைடர் மேனியா நிகழ்ச்சியில் டெஸ்ட் டிரைவிற்காக நிறுத்தப்பட்ருக்கும் அதை விரும்புபவர்கள் அதை டெஸ்ட் டிரைவ் செய்யலாம்.
இது போன்ற செய்திகளை உடனுக்குடன் பெற இங்கே கிளிக் செய்யுங்கள்..!
தற்போது இந்த பைக்கிற்கான புக்கிங் டீலர்ஷிப்களில் துவக்கப்பட்டுள்ளது. ரூ 2.34 லட்சம் என்ற எக்ஸ் ஷோரூம் விலையில் விற்பனை செய்யப்படும் இந்த பைக்குகள் 2019ம் ஆண்டின் துவக்கத்தில் டெலிவரி செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications








