புதிய பஜாஜ் பல்சர் 150 - 2018 பைக்கில் என்ன மாற்றம் செய்யப்பட்டுள்ளது தெரியுமா?
விரைவில் விற்பனைக்கு வரவுள்ள பஜாஜ் பல்சர் 150 - 2018 ரக பைக்குகளின் ஸ்பை படங்கள் ஆன்லைனில் வெளியாகியுள்ளது. இதன் மூலம் பைக்கில் மாற்றம் செய்யப்பட்ட பாகங்கள் குறித்த பல தகவல்கள் கிடைத்துள்ளன.
விரைவில் விற்பனைக்கு வரவுள்ள பஜாஜ் பல்சர் 150 - 2018 ரக பைக்குகளின் ஸ்பை படங்கள் ஆன்லைனில் வெளியாகியுள்ளது. இதன் மூலம் பைக்கில் மாற்றம் செய்யப்பட்ட பாகங்கள் குறித்த பல தகவல்கள் கிடைத்துள்ளன.

பஜாஜ் நிறுவனம் தனது பல்சர் 150 ரக பைக்குகளை கடந்த 17 ஆண்டுகளாக தயாரித்து வருகிறது. கடந்த 2010ம் ஆண்டு 4ம் தலைமுறை மாடல் பல்சர் பைக்குகளை அறிமுகப்படுத்திய பஜாஜ் தொடர்ந்து அந்த பைக்குகளில் மாற்றம் செய்து வெளியிட்டு வருகிறது.

இந்த ஸ்பை படங்கள் மூலம் பைக்கில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதை நம்மால் காணமுடிகிறது. பைக்கின் பெரும்பாலான விஷயங்கள் பழைய மாடலில் உள்ளதையே பயன்படுத்தியிருந்தாலும், புதிய மாடலில் சில முக்கிய மாற்றங்களை செய்துள்ளனர்

பைக்கில் புதிய கிராபிக் டிசைன்கள் கொடுக்கப்பட்டுள்ளது. பல்சர் 180 ல் இருப்பது போல பின் பக்க கைபிடி மாற்றியைமக்கப்பட்டுள்ளது. சைலன்சர் மற்றும் அதற்கான ஹீட் ஷீல்டு பகுதிகள் பல்சர் 180 ல் இருப்பது போல மாற்றியமைக்கப்பட்டுள்ளன. கால் வைக்கும் பெடலும் பழைய மாடலை விட சிறந்த பினிஷிங்கில் வந்திருக்கிறது.

புதிய மாடலில் பல்சர் 180 பைக்கில் உள்ள 37மி.மி., ஃபோக்ஸூடனும் முன்பக்கத்திலும், பின்பக்கத்தில் அதே பழைய மாடலில் உள்ள ஷாக் அப்சர்பரும் பொருத்தப்பட்டுள்ளது. முக்கிய மாற்றமாக பின் பக்க வீலிலும் டிஸ்க் பிரேக் வசதி கொடுக்கப்பட்டுள்ளது. எனினும் இதில் ஏ.பி.எஸ். வசதி வழங்கப்படவில்லை. அதே 17 இன்ச் அலாய் வீல்களுடன் வரும் வீலில் பின் பக்க டயர் மட்டும் இன்னும் பெரிதாக்கப்படாலம் என கூறப்படுகிறது.

இன்ஜினில் எந்த மாற்றமும் இல்லாமல் அதே 149 சிசி, ஒரு சிலிண்டர் இன்ஜினே பொறுத்தப்பட்டுள்ளது. இது 8,000 ஆர்.பி.எம்.இல். 13.8 பி.எச்.பி.,யும் 6,000 ஆர்.பி.எம்.இல் 13.4 என்.எம் டார்க் திறனையும் வெளிபடுத்தக்கூடியது. மார்கெட்டில் பல்சருக்கு பல போட்டிகள் வந்தாலும் தொடர்ந்து நல்ல விற்பனை நடந்து வருவதால் பைக் மாடலில் பெரிய அளவில் மாற்ற செய்யப்படவில்லை.

தற்போது ரூ73,626 க்கு (டில்லி எக்ஸ் ஷோரூம் விலைப்படி) விற்பனையாகி வருகிறது. புதிதாக வரும் பைக்கில் இதில் இருந்து ரூ 1500 - ரூ2000 வரை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனினும் அதிகாரபூர்வ அறிமுகத்தின் போதே அனைத்து தகவல்களும் உறுதி செய்யப்படும்.

ஏப்ரல் 1 முதல் வெளியாகும் பைக்களுக்கு ஏ.பி.எஸ் கட்டாயம் என அரசு அறிவித்துள்ள நிலையில் இந்த பைக்கில் ஏ.பி.எஸ் இல்லாததால் இது மார்ச் 31க்கு முன்பாகவே விற்பனைக்கு வந்து விடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்ட செய்திகள்:

Click it and Unblock the Notifications