சென்னை நிறுவனத்தின் கைவண்ணத்தில் உருமாறிய ராயல் என்ஃபீல்டு!
சென்னையை சேர்ந்த கேஆர் கஸ்டம் நிறுவனம் ராயல் என்ஃபீல்டு மோட்டார்சைக்கிளை பாபர் ஸ்டைலில் மாற்றி அசத்தி இருக்கிறது.
சென்னையை சேர்ந்த கேஆர் கஸ்டமஸ் நிறுவனம் ராயல் என்ஃபீல்டு மோட்டார்சைக்கிளை பாபர் ஸ்டைலில் மிக நேர்த்தியாக மாற்றி காட்டி அசத்தி இருக்கிறது.

மோட்டார்சைக்கிள்களை உருமாற்றி பயன்படுத்தும் கலையில் அமெரிக்கர்கள் அதிக ஈடுபாடு கொண்டவர்கள். அவ்வாறு, 1920 முதல் 1990 வரை அவர்களது கஸ்டமைஸ் பாரம்பரியத்தை தழுவி வந்த கஸ்டமைஸ் மோட்டார்சைக்கிள் ரகங்களில் ஒன்று பாபர்.

சாதாரண மோட்டார்சைக்கிளில் சில முக்கிய பாகங்களை கழற்றிவிட்டு மிக எளிமையான உடல் அமைப்பு மற்றும் மிக ஸ்டைலாகவும் மாற்றுவதுதான் பாபர் ரக கஸ்டமைஸ் மோட்டார்சைக்கிள். இந்த ரகத்தில் மோட்டார்சைக்கிளை மாற்றுவதற்கு சில கலா ரசனையும், நுணுக்கங்களும் வேண்டும்.

அவ்வாறான நுணுக்கங்களுடன் ராயல் என்ஃபீல்டு மோட்டார்சைக்கிளை சென்னையை சேர்ந்த கேஆர் கஸ்டமைஸ் நிறுவனம் மாற்றி அசத்தி இருக்கிறது. ராயல் என்ஃபீல்டு க்ளாசிக் 500 மோட்டார்சைக்கிளில் மாற்றங்களை செய்து பாபர் ஸ்டைலில் மாற்றி இருக்கின்றனர்.

ராயல் என்ஃபீல்டு க்ளாசிக் 500 மோட்டார்சைக்கிளின் சப் - ப்ரேம் மற்றும் பெட்ரோல் டேங்க்கை வைத்துக் கொண்டு சுற்றி சுழன்று பாபர் ரகமாக மாற்றி இருக்கின்றனர். சிறிய வட்ட வடிவிலான ஹெட்லைட், புதிய ஹேண்டில்பார் அமைப்பு கொடுக்கப்பட்டு இருக்கிிறது.

அடுத்து, இருக்கை கழற்றப்பட்டு ஒற்றை இருக்கை பொருத்தப்பட்டு இருக்கிறது. அந்ந இருக்கைக்கு 4 அங்குலம் கூடுதல் நீளத்துடன் உருவாக்கப்பட்ட ஸ்விங் ஆர்மில் ஒற்றை ஸ்பிரிங் ஷாக் அப்சார்பரை சாய்வாக கொடுத்துள்ளனர்.

அதேபோன்று, இருக்கைக்கு கீழே பேட்டரி படுக்கை வாட்டில் லித்தியம் அயான் பேட்டரி பொருத்தப்பட்டு இருக்கிறது.

பாபர் தோற்றத்தை தரும் பெரிய அளவிலான டயர்கள் மற்றும் கருப்பு வண்ணம் தீட்டப்பட்ட புதிய சைலென்சர் போன்றவையும் முக்கிய மாற்றங்கள். பொதுவாக, பாபர் மோட்டார்சைக்கிள்களில் முன்புறத்தில் மட்கார்டு இருக்காது. ஆனால், இதில் சிறிய அளவிலான மட்கார்டு உள்ளது.

தகவல் தொழில்நுட்பத் துறையில் பணிபுரியும் க்ரிஷ் ராஜன் என்பவருக்கு சொந்தமான கேஆர் கஸ்டம் நிறுவனம் துவங்கப்பட்ட சில ஆண்டுகளில் இதுவரை 4 கஸ்டமைஸ் மோட்டார்சைக்கிள்களை உருவாக்கி இருக்கிறது.

தற்போது உருவாக்கப்பட்டு இருக்கும் இந்த புதிய பாபர் ரக மோட்டார்சைக்கிள் மைசூரை சேர்ந்த விகாஷ் என்பவருக்காக உருவாக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.
Photo Credit: KR Customs
பார்ப்பதற்கு பாபர் ஸ்டைல் போலவே இருக்கும் இந்த பைக் எது தெரியுமா..?? அசரடிக்கும் ஒரு மாடிஃபிகேஷன்..!

இரவில் யாருமே இல்லாத சாலையில் ஒற்றை ஆளாக ஒரு க்ரூஸரோ அல்லது பாபர் ரக பைக்கிலோ நிதானமான ஒரு ரைட் செல்வதில் பலருக்கும் ஆவலாக இருக்கலாம்.

பைக்கில் செல்லும் போது இரவில் ஒளிரும் தெருவிளக்குகளை ஒவ்வொன்றாக கடக்கும் போது ஏற்படும் சிலிர்ப்பு எதற்குமே ஈடாகாது.

இந்த அனுபவத்தை பைக்கில் நிதானமாக செல்லும் போதுதான் முழுமையாக பெற முடியும். நிதானமான ரைடிங்கிற்கு வேண்டி இந்தியாவில் பல வாகன ஆர்வலர்கள் க்ரூஸர் ரக பைக்குகளை தேடி செல்வது தான் வழக்கம்.

ஆனால் இன்றைய வாகன ஆர்வலர்கள் பலர் பாபர் ரக பைக்குகள் மீது பெரிய மோகம் கொண்டுள்ளனர். இந்த ரக பைக்குகளை வாங்குவது அவ்வளவு எளிதான காரியமல்ல.

குறிப்பிட்ட நாடுகளுக்காகவும் மற்றும் எண்ணிக்கையில் மட்டும் தான் பாபர் ரக பைக் மாடல்களை பெரும்பாலான நிறுவனங்கள் தயாரித்து வழங்குகின்றன.

பாபர் ரக பைக்குகள் ஏற்கனவே முன்பதிவு செய்து விற்பனைக்கு வருவதால் இந்தியாவில் விரல்விட்டு எண்ணக்கூடியவர்கள் தான் பாபர் ரக பைக்குகள் வைத்துள்ளனர்.

இப்படியொரு குறையை போக்க புல்லட்டீர் கஸ்டமஸ் என்ற நிறுவனம், ராயல் என்ஃபீல்டு பைக் மாடல் ஒன்றில் பிளாக்-அவுட் என்ற கஸ்டமஸ் பாபர் ரக பைக்கை உருவாக்கியுள்ளது.

யுஎஸ்டி ஃபோர்க்ஸ், நவீன ரப்பர் பொருத்தப்பட்ட டயர்கள், ஃபிளஷ் ஃபிட்டிங் ஃபென்டர் மற்றும் எல்.இ.டி திறன் கொண்ட விளக்கு அமைப்புகள் என ஒரு புதிய ரக பாபர் மாடலாகவே பிளாக்-அவுட் இருக்கிறது.

சிங்கிள் பாட் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர் கொண்ட இந்த பைக்கில், ராயல் என்ஃபீல்டு தயாரிப்புகளில் இருக்கும் ஓ.ஆர்.வி.எம் அப்படியே உள்ளது. ஆனால் இந்த பைக்கின் செயல்திறன் அதிகளவில் கொண்டுவர அதற்கு ஏற்றவாறான கட்டமைப்புகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

பைக்கின் எஞ்சின், ஃபிரேம் உள்ளிட்ட அனைத்து கட்டமைப்புகளும் புதிய தோற்றத்தை தருகின்றன. சேடில் வகை இருக்கை பின்பகுதிக்கான கேஸ்-சார்ஜிடு ரியர் ஸ்பிரிங்குடன் இணைக்கப்பட்டுள்ளது.

தவிர, ஒற்றை பகுதியில் சிறியளவிலான ஃபாக்ஸ் யூனிட் எக்ஸாஸ்ட் பைப்பின் அமைப்பை கொண்டு இந்த பிளாக்அவுட் பாபர் பைக்கின் கஸ்டமைஸ் அம்சங்களை கணித்துவிடலாம்.

ஆனால் அந்த கஸ்டமைஸ் பணிகள் எந்த பைக் மாடலிலிருந்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது என்பதை அறிய ராயல் என்ஃபீல்டு தயாரிப்புகளின் தீவிர ரசிகாராக இருத்தல் அவசியம்.

கஸ்டமைஸ் செய்யப்பட்ட ஸ்விங்ஆர்ம் பைக்கின் சக்கரங்களோடு இணைக்கப்பட்டுள்ளது. ஸ்விங்ஆர்ம் நீண்டு பிரம்மாண்டமான அந்த சக்கரங்களோடு இணைவதை பார்க்கும் நமக்கு மூர்ச்சை வந்துவிடுகிறது.

பைக்கின் பின்பகுதிக்குரிய விளக்குகள், ஒரு மெல்லிய பட்டையில் எல்.இ.டி திறனில் கொடுக்கப்பட்டுள்ளது. அது சேடில் இருக்கையுடன் பொருத்தப்பட்டு உள்ளது பார்க்க புதிய ஸ்டைலாக உள்ளது.

புல்லட்டீர் கஸ்டம்ஸ் நிறுவனம் பிளாக்-அவுட் கஸ்டமைஸ் பைக்கிற்கான புகைப்படங்கள் மற்றும் தகவல்களை பகிர்ந்த கொண்டபின், உடனே அது இணையதளங்களில் வைரலாகி உள்ளது.

ட்வின் மோட்டார் திறன் பெற்ற இந்த பாபர் ரக கஸ்டமைஸ் பைக்கை எங்களது சாலைக்கு எடுத்து வாருங்கள், நாங்கள் செல்ஃபி எடுத்து கொள்கிறோம் என புல்லட்டீர் கஸ்டம்ஸ் நிறுவனத்திற்கு பலரிடமிருந்து கோரிக்கைகள் கிடைக்கப்பெற்று வருகின்றன.
Picture credit: Bulleteer Customs


Click it and Unblock the Notifications








