ராயல் என்பீல்டு உலகப்போர் எடிசன் பைக்குகள் வெறும் 3 நிமிடங்களில் விற்று தீர்ந்தன.. இமாலய சாதனை

ராயல் என்பீல்டு கிளாசிக் 500 பெகாசஸ் எடிசன் பைக்குகள், ஆன்லைன் முன்பதிவு தொடங்கிய 3 நிமிடங்களுக்கு உள்ளாகவே (178 வினாடிகள்) விற்று தீர்ந்தன.

By Arun

ராயல் என்பீல்டு கிளாசிக் 500 பெகாசஸ் எடிசன் பைக்குகள், ஆன்லைன் முன்பதிவு தொடங்கிய 3 நிமிடங்களுக்கு உள்ளாகவே (178 வினாடிகள்) விற்று தீர்ந்தன. இதன்மூலம் புதிய சாதனையை ராயல் என்பீல்டு நிறுவனம் படைத்துள்ளது. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

ராயல் என்பீல்டு உலகப்போர் எடிசன் பைக்.. வெறும் 3 நிமிடங்களில் விற்று தீர்ந்து இமாலய சாதனை..

ராயல் என்பீல்டு கிளாசிக் 500 பைக்கின் ஸ்பெஷல் எடிசன் குறித்த விபரங்கள் கடந்த சில வாரங்களுக்கு முன் வெளியிடப்பட்டன. பெகாசஸ் எடிசன் என்ற பெயரில், கூடுதல் சிறப்பம்சங்களுடன் இந்த பைக் விற்பனை செய்யப்படும் எனவும், இதன் எக்ஸ் ஷோரூம் விலை ரூ.2.40 லட்சம் எனவும் அறிவிக்கப்பட்டது.

ராயல் என்பீல்டு உலகப்போர் எடிசன் பைக்.. வெறும் 3 நிமிடங்களில் விற்று தீர்ந்து இமாலய சாதனை..

ஆனால் ராயல் என்பீல்டு கிளாசிக் 500 பெகாசஸ் எடிசன் லிமிடட் எடிசன் மாடலாக மட்டுமே உலகம் முழுவதும் விற்பனை செய்யப்படவுள்ளது. உலகம் முழுவதும் 1,000 பைக்குகள் விற்பனை செய்யப்படவுள்ள நிலையில், அதிகபட்சமாக இந்தியாவுக்கு 250 பைக்குகள் ஒதுக்கப்பட்டுள்ளன.

ராயல் என்பீல்டு உலகப்போர் எடிசன் பைக்.. வெறும் 3 நிமிடங்களில் விற்று தீர்ந்து இமாலய சாதனை..

ராயல் என்பீல்டு கிளாசிக் 500 பெகாசன் எடிசன் பைக்கிற்கான ஆன்லைன் முன்பதிவு கடந்த ஜூலை 10ம் தேதி நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் ஒரே நேரத்தில் ஆயிரக்கணக்கானோர் முன்பதிவு செய்ய முண்டியடித்ததால், ராயல் என்பீல்டு நிறுவனத்தின் சர்வர் முடங்கி இணைய பக்கமே செயலிழந்து போனது.

ராயல் என்பீல்டு உலகப்போர் எடிசன் பைக்.. வெறும் 3 நிமிடங்களில் விற்று தீர்ந்து இமாலய சாதனை..

இதன் காரணமாக ராயல் என்பீல்டு கிளாசிக் 500 பெகாசஸ் எடிசனுக்கான ஆன்லைன் முன்பதிவு, தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்பட்டது. இந்த சூழலில், ராயல் என்பீல்டு கிளாசிக் 500 பெகாசஸ் எடிசனுக்கான ஆன்லைன் முன்பதிவு நேற்று (ஜூலை 25ம் தேதி) நடைபெற்றது.

ராயல் என்பீல்டு உலகப்போர் எடிசன் பைக்.. வெறும் 3 நிமிடங்களில் விற்று தீர்ந்து இமாலய சாதனை..

எப்படியாவது இந்த பைக்கை முன்பதிவு செய்து விட வேண்டும் என்ற ஆர்வத்தில், வழக்கம் போல வாடிக்கையாளர்கள் முண்டியடித்தனர். இதனால் ஆன்லைன் முன்பதிவு தொடங்கிய 3 நிமிடங்களுக்கு உள்ளாகவே அனைத்து பைக்குகளும் விற்று தீர்ந்தன.

ராயல் என்பீல்டு உலகப்போர் எடிசன் பைக்.. வெறும் 3 நிமிடங்களில் விற்று தீர்ந்து இமாலய சாதனை..

சரியாக நேற்று மாலை 4 மணியளவில், ராயல் என்பீல்டு நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில், ஆன்லைன் முன்பதிவு தொடங்கியது. ஆனால் ஆன்லைன் முன்பதிவு தொடங்கிய வெறும் 178 வினாடிகளில், இந்தியாவுக்கு என ஒதுக்கப்பட்ட அனைத்து பைக்குகளும் விற்பனையாகி விட்டன.

ராயல் என்பீல்டு உலகப்போர் எடிசன் பைக்.. வெறும் 3 நிமிடங்களில் விற்று தீர்ந்து இமாலய சாதனை..

பைக் விற்பனையில் இது ஒரு புதிய சாதனையாகும். ராயல் என்பீல்டு கிளாசிக் 500 பெகாசஸ் எடிசனை சொந்தமாக்கி விட வேண்டும் என்ற வாடிக்கையாளரின் பேராவலே இதற்கு காரணம். தற்போது பெகாசஸ் எடிசனின் உரிமையாளர்களாக மாறியுள்ளவர்களுக்கு ராயல் என்பீல்டு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளது.

ராயல் என்பீல்டு உலகப்போர் எடிசன் பைக்.. வெறும் 3 நிமிடங்களில் விற்று தீர்ந்து இமாலய சாதனை..

இரண்டாம் உலக போர் சமயத்தில், இங்கிலாந்து நாட்டிற்காக, WD/RE 125 என்ற பைக்கை ராயல் என்பீல்டு நிறுவனம் தயாரித்தது. இதில், WD என்பது War Department என்பதை குறிக்கிறது. ப்ளையிங் ப்ளா எனவும் அழைக்கப்படும் இந்த பைக் மிகவும் லைட்வெயிட் ஆக இருக்கும்.

ராயல் என்பீல்டு உலகப்போர் எடிசன் பைக்.. வெறும் 3 நிமிடங்களில் விற்று தீர்ந்து இமாலய சாதனை..

இங்கிலாந்து நாட்டு படை வீரர்கள், போர் முனையில், WD/RE 125 பைக்கை பயன்படுத்தினர். இந்த பைக்கை நினைவுபடுத்தும் வகையில்தான், பெகாசஸ் எடிசன் உருவாக்கப்பட்டுள்ளது. WD/RE 125 பைக் அடிப்படையிலான பாரம்பரிய டிசைன் அம்சங்கள் பெகாசஸ் எடிசனில் இடம்பெற்றுள்ளன.

ராயல் என்பீல்டு உலகப்போர் எடிசன் பைக்.. வெறும் 3 நிமிடங்களில் விற்று தீர்ந்து இமாலய சாதனை..

அத்துடன் அந்த பைக்கில் இருந்த முத்திரை, கேன்வாஸ் துணி பை உள்ளிட்ட இதர அம்சங்களும், ராயல் என்பீல்டு கிளாசிக் 500 பெகாசஸ் எடிசனில் வழங்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு பைக்கின் ப்யூயல் டேங்கிலும் பிரத்யேக சீரியல் எண் கொடுக்கப்பட்டுள்ளது. இதனால் ஒவ்வொரு பைக்கும் தனித்துவமாக தெரியும்.

ராயல் என்பீல்டு உலகப்போர் எடிசன் பைக்.. வெறும் 3 நிமிடங்களில் விற்று தீர்ந்து இமாலய சாதனை..

சர்வதேச மார்க்கெட்டில் சர்வீஸ் பிரவுன், ஆலிவ் டிராப் க்ரீன் என 2 நிறங்களில், பெகாசஸ் எடிசன் விற்பனை செய்யப்படும். ஆனால் இந்தியாவில் ஆலிவ் வண்ணத்தை சாதாரண பொதுமக்கள் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. ஏனெனில் இது ராணுவத்தினரால் பயன்படுத்தப்பட்டு வருவதே இதற்கு காரணம்.

ராயல் என்பீல்டு உலகப்போர் எடிசன் பைக்.. வெறும் 3 நிமிடங்களில் விற்று தீர்ந்து இமாலய சாதனை..

எனவே இந்தியாவில் சர்வீஸ் பிரவுன் நிறத்தில் மட்டுமே, ராயல் என்பீல்டு கிளாசிக் 500 பெகாசஸ் எடிசன் பைக் விற்பனை செய்யப்படும். 2ம் உலகப்போரில் இங்கிலாந்து வீரர்கள் பயன்படுத்திய WD/RE 125 லைட்வெயிட்டாக இருந்தாலும், ராயல் என்பீல்டு கிளாசிக் 500 பெகாசஸ் எடிசன் லைட்வெயிட் கிடையாது.

ராயல் என்பீல்டு உலகப்போர் எடிசன் பைக்.. வெறும் 3 நிமிடங்களில் விற்று தீர்ந்து இமாலய சாதனை..

வழக்கமான கிளாசிக் 500 என்ன எடையில் இருக்குமோ, கிட்டத்தட்ட அதே எடையில்தான் பெகாசஸ் எடிசன் பைக்கும் உள்ளது. வழக்கமான கிளாசிக் 500 பைக்குடன் ஒப்பிடுகையில் விஸூவலாக சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ள பெகாசஸ் எடிசன் பைக்கின் எடை சுமார் 180 கிலோ.

ராயல் என்பீல்டு உலகப்போர் எடிசன் பைக்.. வெறும் 3 நிமிடங்களில் விற்று தீர்ந்து இமாலய சாதனை..

வழக்கமான கிளாசிக் 500 பைக்குடன் ஒப்பிடுகையில், பெகாசஸ் எடிசனில் விஸூவலாக சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. ஆனால் மெக்கானிக்கலாக பார்த்தால், பெகாசஸ் எடிசன் அப்படியேதான் உள்ளது. இந்த பைக்கில், சிங்கிள் சிலிண்டர், ஏர் கூல்டு, 499 சிசி இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது.

ராயல் என்பீல்டு உலகப்போர் எடிசன் பைக்.. வெறும் 3 நிமிடங்களில் விற்று தீர்ந்து இமாலய சாதனை..

இந்த இன்ஜின் 5,250 ஆர்பிஎம்மில் 27.2 பிஎச்பி பவரையும், 4,000 ஆர்பிஎம்மில் 41.3 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தக்கூடிய சக்தி வாய்ந்தது. 5 ஸ்பீடு மேனுவல் கியர் பாக்ஸ் உடன் இந்த இன்ஜின் இணைக்கப்பட்டுள்ளது. சேஸிஸ், பிரேக் உள்ளிட்ட இதர அம்சங்கள், ரெகுலர் மாடலை போலவே உள்ளன.

ராயல் என்பீல்டு உலகப்போர் எடிசன் பைக்.. வெறும் 3 நிமிடங்களில் விற்று தீர்ந்து இமாலய சாதனை..

எனினும் ராயல் என்பீல்டு கிளாசிக் 500 பைக்கிற்கான டெலிவரி எப்போது தொடங்கும்? என்பது குறித்த உறுதியான தகவல் எதுவும் வெளியாகவில்லை. எனினும் முன்பதிவு செய்துள்ளவர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில், விரைவில் டெலிவரி தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

More from DriveSpark

Article Published On: Thursday, July 26, 2018, 12:08 [IST]
English summary
Royal Enfield Classic 500 Pegasus Edition Creats History. Read in Tamil
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+