ராயல் என்ஃபீல்டு கிளாசிக் 500 பெகாசஸ் எடிசனுக்கு ஆன்லைன் முன்பதிவு இன்று துவங்குகிறது!!

கடந்த மாதம் ராயல் என்ஃபீல்டு கிளாசிக் 500 பைக்கின் அடிப்படையிலான பெகாசஸ் எடிசன் அறிமுகப்படுத்தப்பட்டது. உலக அளவில் 1,000 கிளாசிக் 500 பெகாசஸ் எடிசன் மோட்டார்சைக்கிள்கள் விற்பனை செய்யப்படும் என்றும்,

By Saravana Rajan

ராயல் என்ஃபீல்டு கிளாசிக் 500 பெகாசஸ் எடிசன் மோட்டார்சைக்கிளுக்கு இன்று பிற்பகல் 2 மணிக்கு ஆன்லைனில் முன்பதிவு துவங்குகிறது.

ராயல் என்ஃபீல்டு கிளாசிக் 500 பெகாசஸ் எடிசனுக்கு ஆன்லைன் முன்பதிவு இன்று துவங்குகிறது!!

கடந்த ஜூன் 1ந் தேதி ராயல் என்ஃபீல்டு நிறுவனம் கிளாசிக் 500 பைக்கின் அடிப்படையிலான புதிய ஸ்பெஷல் எடிசன் மாடலை அறிவித்தது. உலக அளவில் 1,000 கிளாசிக் 500 பெகாசஸ் எடிசன் மோட்டார்சைக்கிள்கள் விற்பனை செய்யப்படும் என்றும், இதில் 250 மோட்டார்சைக்கிள்கள் இந்தியாவுக்கு ஒதுக்கீடு செய்யப்படுவதாகவும் தெரிவித்தது.

ராயல் என்ஃபீல்டு கிளாசிக் 500 பெகாசஸ் எடிசனுக்கு ஆன்லைன் முன்பதிவு இன்று துவங்குகிறது!!

இந்த நிலையில், இந்த விசேஷ அம்சங்கள் கொண்ட மோட்டார்சைக்கிளுக்கு இன்று பிற்பகல் 2 மணிக்கு ஆன்லைனில் முன்பதிவு துவங்குகிறது. இந்த மோட்டார்சைக்கிளை முன்பதிவு செய்வோர் தயாராக இருப்பது அவசியம்.

ராயல் என்ஃபீல்டு கிளாசிக் 500 பெகாசஸ் எடிசனுக்கு ஆன்லைன் முன்பதிவு இன்று துவங்குகிறது!!

இந்த மோட்டார்சைக்கிள் ஓலிவ் டிராப் க்ரீன் மற்றும் சர்வீஸ் பிரவுன் ஆகிய இரண்டு வண்ணங்களில் அறிமுகம் செய்யப்பட்டது. அதில், இந்தியாவில் சர்வீஸ் பிரவுன் மட்டுமே ஒதுக்கீடு செய்யப்பட்டு இருக்கிறது. பெட்ரோல் டேங்க்கில் நீலம் மற்றும் இளஞ்சிவப்பு வண்ணத்திலான பெகாசஸ் குதிரை சின்னம் கொடுக்கப்பட்டு இருக்கிறது. ஒவ்வொரு மோட்டார்சைக்கிளும் குறிப்பிட்ட வரிசை எண் கொடுக்கப்பட்டிருக்கும்.

ராயல் என்ஃபீல்டு கிளாசிக் 500 பெகாசஸ் எடிசனுக்கு ஆன்லைன் முன்பதிவு இன்று துவங்குகிறது!!

இந்த புதிய பெகாசஸ் எடிசன் மோட்டார்சைக்கிளானது, இரண்டாம் உலகப்போரின்போது இங்கிலாந்து வான் படையினர் பயன்படுத்திய ராயல் என்ஃபீல்டு WD/RE என்ற 125 மோட்டார்சைக்கிளின் அம்சங்களின் அடிப்படையில் உருவாக்கப்பட்டு இருக்கிறது. போர் நடக்கும் பகுதிகளில் விமானத்திலிருந்து இந்த மோட்டார்சைக்கிளை கீழே இறக்கி படை வீரர்கள் பயன்படுத்தினர்.

ராயல் என்ஃபீல்டு கிளாசிக் 500 பெகாசஸ் எடிசனுக்கு ஆன்லைன் முன்பதிவு இன்று துவங்குகிறது!!

மேலும், இரண்டாம் உலகப்போரில் இங்கிலாந்து வான்படையினரின் பாரசூட்டுகளில் கிரேக்க புராணக் கதைகளில் வீராதி வீரனான பெல்லரோபான், பறக்கும் குதிரை மீது அமர்ந்திருக்கும் படம் சின்னமாக பயன்படுத்தப்பட்டது. இதே சின்னம் தற்போது வந்திருக்கும் கிளாசிஸ் 500 பெகாசஸ் எடிசன் மோட்டார்சைக்கிளும் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது.

ராயல் என்ஃபீல்டு கிளாசிக் 500 பெகாசஸ் எடிசனுக்கு ஆன்லைன் முன்பதிவு இன்று துவங்குகிறது!!

ராணுவ மோட்டார்சைக்கிளில் பயன்படுத்துவது போன்றே, கேன்வாஸ் துணியால் ஆன பயனீர் பைகள் மற்றும் பித்தளை பக்கிள்ஸ் கொண்ட பெல்ட்டுகளுடன் மிகவும் தனித்துவமாக தயாரிக்கப்பட்டு இருக்கிறது.

ராயல் என்ஃபீல்டு கிளாசிக் 500 பெகாசஸ் எடிசனுக்கு ஆன்லைன் முன்பதிவு இன்று துவங்குகிறது!!

புதிய ராயல் என்ஃபீல்டு கிளாசிக் 500 பெகாசஸ் எடிசன் மோட்டார்சைக்கிளில் 499சிசி சிங்கிள் சிலிண்டர் எஞ்சின் பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 27.2 பிஎச்பி பவரையும், 41.3 என்எம் டார்க் திறனையும் வழங்க வல்லது. 5 ஸ்பீடு கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டு இருக்கிறது.

ராயல் என்ஃபீல்டு கிளாசிக் 500 பெகாசஸ் எடிசனுக்கு ஆன்லைன் முன்பதிவு இன்று துவங்குகிறது!!

புதிய ராயல் என்ஃபீல்டு கிளாசிக் 500 பெகாசஸ் எடிசன் மோட்டார்சைக்கிளுக்கு ரூ.2.49 லட்சம் மும்பை ஆன்ரோடு விலையாக அறிவிக்கப்பட்டு இருக்கிறது. ராயல் என்ஃபீல்டு நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதள பக்கத்தில் முன்பதிவு செய்து கொள்ளலாம்.

Most Read Articles
English summary
Royal Enfield Classic 500 Pegasus Online booking Starts at Today 2 PM.
Story first published: Tuesday, July 10, 2018, 11:35 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X