ராயல் என்ஃபீல்டு பெகாசஸ் எடிசனுக்கு நாளை முன்பதிவு துவங்குகிறது!

தொழில்நுட்ப பிரச்னையால் ஒத்திவைக்கப்பட்ட ராயல் என்ஃபீல்டு பெகாசஸ் எடிசன் மோட்டார்சைக்கிளுக்கான ஆன்லைன் முன்பதிவு நாளை துவங்குகிறது.

By Saravana Rajan

தொழில்நுட்ப பிரச்னையால் ஒத்திவைக்கப்பட்ட ராயல் என்ஃபீல்டு பெகாசஸ் எடிசன் மோட்டார்சைக்கிளுக்கான ஆன்லைன் முன்பதிவு நாளை துவங்க இருக்கிறது. இந்த மோட்டார்சைக்கிளை முன்பதிவு செய்ய ஆவலோடு காத்திருப்பவர்களுக்கான தகவல்கள் இந்த செய்தியில் கொடுக்கப்பட்டு இருக்கிறது.

ராயல் என்ஃபீல்டு பெகாசஸ் எடிசனுக்கு நாளை முன்பதிவு துவங்குகிறது!

கடந்த மாதம் ராயல் என்ஃபீல்டு கிளாசிக் 500 மோட்டார்சைக்கிளின் ஸ்பெஷல் எடிசன் விபரங்கள் வெளியிடப்பட்டன. பெகாசஸ் எடிசன் என்ற பெயரில் வெளியிடப்பட்ட இந்த மோட்டார்சைக்கிள் குறிப்பிட்ட எண்ணிக்கையில் மட்டுமே லிமிடேட் எடிசன் மாடலாக உலக அளவில் விற்பனை செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

ராயல் என்ஃபீல்டு பெகாசஸ் எடிசனுக்கு நாளை முன்பதிவு துவங்குகிறது!

இந்தியாவுக்கு 250 பெகாசஸ் எடிசன் மோட்டார்சைக்கிள்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டன. இரண்டாம் உலகப்போரின்போது இங்கிலாந்து வான்படை வீரர்கள் தகவல் பரிமாற்றத்திற்காக போர் முனையில் பயன்படுத்திய RE/WB 125 என்ற 2 ஸ்ட்ரோக் மோட்டார்சைக்கிள் அடிப்படையிலான பாரம்பரிய டிசைன் அம்சங்கள் பெகாசஸ் எடிசனில் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது.

ராயல் என்ஃபீல்டு பெகாசஸ் எடிசனுக்கு நாளை முன்பதிவு துவங்குகிறது!

மேலும், அந்த மோட்டார்சைக்கிளில் இருந்த முத்திரைகள், கேன்வாஸ் துணி பைகள் மற்றும் இதர அம்சங்களும் இடம்பெற்றிருந்ததுடன், ஒவ்வொரு மோட்டார்சைக்கிளுக்கும் பிரத்யேக வரிசை எண் மட்டுமின்றி இரண்டு விசேஷ வண்ணங்களில் அறிமுகம் செய்யப்பட்டது.

ராயல் என்ஃபீல்டு பெகாசஸ் எடிசனுக்கு நாளை முன்பதிவு துவங்குகிறது!

ஹெட்லைட், எஞ்சின், புகைப்போக்கி அமைப்பு மற்றும் சக்கரங்கள் கருப்பு வண்ண பூச்சு கொடுக்கப்பட்டு வேறுபடுத்தப்பட்டு இருக்கிறது. சர்வீஸ் பிரவுன் மற்றும் ஆலிவ் டிராப் க்ரீன் ஆகிய இரண்டு வண்ணக் கலவைகளில் வந்தன. இதில், சர்வீஸ் பிரவுன் என்ற வண்ணம் இந்தியாவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

ராயல் என்ஃபீல்டு பெகாசஸ் எடிசனுக்கு நாளை முன்பதிவு துவங்குகிறது!

இந்த மோட்டார்சைக்கிளில் சாதாரண கிளாசிக் 500 மோட்டார்சைக்கிளில் பயன்படுத்தப்பட்டு இருக்கும் அதே 499சிசி எஞ்சின்தான் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 27.2 பிஎச்பி பவரையும், 41.3 என்எம் டார்க் திறனையும் வழங்க வல்லதாக இருக்கிறது. 5 ஸ்பீடு கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டு இருக்கிறது.

ராயல் என்ஃபீல்டு பெகாசஸ் எடிசனுக்கு நாளை முன்பதிவு துவங்குகிறது!

இந்த விசேஷ மோட்டார்சைக்கிளுக்கு கடந்த 10ந் தேதி பிற்பகல் 2 மணிக்கு ஆன்லைனில் முன்பதிவு துவங்க இருப்பதாக ராயல் என்ஃபீல்டு நிறுவனம் அறிவித்திருந்தது. ஆனால், இந்த விசேஷ மோட்டார்சைக்கிளை ஆன்லைனில் முன்பதிவு செய்ய ஆயிரக்கணக்கான வாடிக்கையாளர்கள் ராயல் என்ஃபீல்டு இணையதளத்தை முற்றுகையிட்டதால், தொழில்நுட்ப பிரச்னை ஏற்பட்டது.

ராயல் என்ஃபீல்டு பெகாசஸ் எடிசனுக்கு நாளை முன்பதிவு துவங்குகிறது!

இதையடுத்து, ஆன்லைன் முன்பதிவு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்படுவதாக ராயல் என்ஃபீல்டு அறிவித்தது. இந்த நிலையில், ராயல் என்ஃபீல்டு பெகாசஸ் எடிசனுக்கு நாளை [ஜூலை 25]முன்பதிவு துவங்கப்பட இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

More from DriveSpark

Article Published On: Tuesday, July 24, 2018, 13:32 [IST]
English summary
Recently, Royal Enfield cancelled the online sale of the Classic 500 Pegasus due to the website crashing. The reason behind the crashing of the website is the high demand for the limited edition motorcycle. Now, on July 25, 2018, the Royal Enfield Classic 500 Pegasus will be sold online.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+