ஏபிஎஸ் வசதியுடன் புதிய ராயல் என்ஃபீல்டு கிளாசிக் 350 மாடல்கள் அறிமுகம்!!
பிரத்யேக அம்சங்களுடன் கூடிய புதிய ராயல் என்ஃபீல்டு கிளாசிக் 350 மோட்டார்சைக்கிள் மாடல்கள் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது.
பிரத்யேக அம்சங்களுடன் கூடிய புதிய ராயல் என்ஃபீல்டு கிளாசிக் 350 மோட்டார்சைக்கிள் மாடல்கள் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. இந்த புதிய மாடலின் சிறப்பம்சங்கள் மற்றும் விலை விபரத்தை இந்த செய்தியில் காணலாம்.

ராயல் என்ஃபீல்டு கிளாசிக் சிக்னல்ஸ் 350 எடிசன் என்ற பெயரில் இந்த புதிய மாடல்கள் விற்பனைக்கு வந்துள்ளது. இந்திய ராணுவத்துடனான நீண்ட கால உறவை போற்றும் விதத்திலும், முப்படையினரின் சேவைக்கு பெருமை சேர்க்கும் விதத்திலும் இந்த ஸ்பெஷல் எடிசன் மாடல்கள் உருவாக்கப்பட்டுள்ளன.

ராணுவ மோட்டார்சைக்கிள்களை பிரதிபலிக்கும் விதத்தில், 40 விதமான கூடுதல் ஆக்சஸெரீகள் மற்றும் இரண்டு விசேஷ வண்ணங்களில் இந்த மாடல்கள் அறிமுகமாகி இருக்கின்றன.

எல்லையோர பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருக்கும் வீரர்கள் சேவையை பிரதிபலிக்கும் விதத்தில், ஸ்டோர்ம்ரைடர் சேண்ட் என்ற விசேஷ வண்ண மாடலும், விமானப்படையை பிரதிபலிக்கும் விதத்தில், ஏர்போர்ன் புளூ என்ற விசேஷ நீல வண்ணத்திலும் இந்த மோட்டார்சைக்கிள் இரண்டு மாடல்களில் கிடைக்கும்.

இந்த இரண்டு புதிய கிளாசிக் 350 மாடல்களிலும் முன்புறத்தில் விண்ட்ஷீல்டு கண்ணாடி பொருத்தப்பட்டு இருக்கிறது. ராணுவத்தில் பயன்படுத்தப்படும் நீர் புகாத அம்சம் கொணட பேனியர் பைகள் இந்த மோட்டார்சைக்கிள்களில் கொடுக்கப்படுகின்றன. ராணுவ வீரர்கள் மற்றும் விமானப்படை வீரர்களின் உடைகளை பிரதிபலிக்கும் உடைகளும் விற்பனைக்கு கிடைக்கும்.

இந்த மோட்டார்சைக்கிள் மாடல்களில் டேன் வண்ண ஒற்றை இருக்கை, எஞ்சின், ஃப்ரேம், சக்கரங்கள், புகைப்போக்கி, ஹேண்டில்பார் உள்ளிட்டவை கருப்பு வண்ணத்திலும் கொடுக்கப்பட்டு இருப்பது முக்கிய அம்சமாக இருக்கிறது.

ஒவ்வொரு மோட்டார்சைக்கிளிலும் தனி வரிசை எண் இடம்பெற இருப்பதும் வாடிக்கையாளர்களை கவரும் முக்கிய விஷயமாக இருக்கும். இந்த இரண்டு மாடல்களிலும் டியூவல் சேனல் ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம் நிரந்தர பாதுகாப்பு அம்சமாக கொடுக்கப்பட்டு இருக்கிறது. ஏபிஎஸ் வசதியுடன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கும் முதல் ராயல் என்ஃபீல்டு மாடலாகவும் குறிப்பிடப்படுகிறது.

ராயல் என்ஃபீல்டு கிளாசிக் 350 மோட்டார்சைக்கிளின் அடிப்படையிலான இந்த மாடலில் 346சிசி சிங்கிள் சிலிண்டர் எஞ்சின் உள்ளது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 19 பிஎச்பி பவரையும், 28 என்எம் டார்க் திறனையும் வழங்கும். 5 ஸ்பீடு கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டு இருக்கிறது.

முன்புறத்தில் 35மிமீ டெலிஸ்கோப்பிக் ஃபோர்க்குகள் கொண்ட சஸ்பென்ஷனும், பின்புறத்தில் கேஸ் சார்ஜ்டு ஷாக் அப்சார்பரும் பொருத்தப்பட்டுள்லன. அதேபோன்று, முன்புறத்தில் 280மிமீ சிங்கிள் டிஸ்க் பிரேக்கும், பின்புறத்தில் 240மிமீ டிஸ்க் பிரேக்கும் உள்ளன.

ராயல் என்ஃபீல்டு கிளாசிக் 350 மாடல் ரூ.1.39 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையில் விற்பனை செய்யப்படும் நிலையில், இந்த புதிய மாடல்களுக்கு ரூ.1.62 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலை நிர்ணயிக்கப்பட்டு இருக்கிறது. இந்த புதிய மாடல் ரூ.20,000 கூடுதல் விலையில் பல்வேறு கூடுதல் சிறப்பம்சங்களுடன் வந்திருப்பது ராயல் என்ஃபீல்டு ரசிகர்களுக்கு சரியான தேர்வாக இருக்கும்.

இதனிடையே, ராயல் என்ஃபீல்டு கிளாசிக் சிக்னல்ஸ் 350 மாடல்களை தொடர்ந்து தமது பிற மோட்டார்சைக்கிள் மாடல்களிலும் ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டத்தை வழங்க இருப்பதாக ராயல் என்ஃபீல்டு நிறுவனம் தெரிவித்துள்ளது. வரும் 2019ம் ஆண்டு பிப்ரவரியில் தமது அனைத்து மோட்டார்சைக்கிள் மாடல்களிலும் ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டத்துடன் அறிமுகம் செய்ய இருப்பதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
{document1}


Click it and Unblock the Notifications