போனியாகலை... ராயல் என்ஃபீல்டு ஜிடி மோட்டார்சைக்கிள் விற்பனை நிறுத்தப்படுகிறது!!
ராயல் என்ஃபீல்டு கான்டினென்டர் ஜிடி 535 மோட்டார்சைக்கிள் விற்பனை உலக அளவில் நிறுத்தப்பட இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. ஆனால், ஆரம்பத்தில் இருந்தே இந்த மோட்டார்சைக்கிள் எதிர்பார்த்த அளவு வரவேற்பை
ராயல் என்ஃபீல்டு கான்டினென்டர் ஜிடி 535 மோட்டார்சைக்கிள் விற்பனை உலக அளவில் நிறுத்தப்பட இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. அதன் விபரங்களை இந்த செய்தியில் காணலாம்.

பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் ராயல் என்ஃபீல்டு நிறுவனம் கான்டினென்டல் ஜிடி 535 என்ற புத்தம் புதிய மோட்டார்சைக்கிளை அறிமுகம் செய்தது. ராயல் என்ஃபீல்டு நிறுவனத்தின் தயாரிப்புகளில் இருந்து முற்றிலும் மாறுபட்ட கஃபே ரேஸர் ரக மாடலாக களமிறக்கப்பட்டது.

ஆனால், ஆரம்பத்தில் இருந்தே இந்த மோட்டார்சைக்கிள் எதிர்பார்த்த அளவு வரவேற்பை பெறவில்லை. பிற மோட்டார்சைக்கிள்களின் வர்த்தகம் சிறப்பாக இருப்பதால், கான்டினென்டல் ஜிடி 535 மோட்டார்சைக்கிளுக்கான முதலீடும், உற்பத்தி செலவீனத்தையும் ராயல் என்ஃபீல்டு சமாளித்து வருகிறது.

இந்த நிலையில், அடுத்த ஆண்டு ராயல் என்ஃபீல்டு ஜிடி 535 மோட்டார்சைக்கிள் விற்பனையை இந்தியா உள்பட உலக அளவில் நிறுத்துவதற்கு ராயல் என்ஃபீல்டு நிறுவனம் முடிவு செய்துள்ளது. இதனால், உற்பத்தியும் நிறுத்தப்பட இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. டீலர்களில் இருப்பு உள்ள மோட்டார்சைக்கிள்களை விற்று தீர்த்தவுடன் இதற்கான அறிவிப்பை ராயல் என்ஃபீல்டு முறைப்படி வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ராயல் என்ஃபீல்டு கான்டினென்டல் ஜிடி 535 மோட்டார்சைக்கிள் உற்பத்தி நிறுத்தப்படுவதற்கு விற்பனை மட்டும் காரணமாக இல்லை. விரைவில் களமிறக்கப்பட இருக்கும் கான்டினென்டல் ஜிடி 650 மோட்டார்சைக்கிள் உற்பத்திக்கு வழிவிடும் வகையில், இந்த ஜிடி 535 மோட்டார்சைக்கிள் உற்பத்தி நிறுத்தப்பட இருப்பதாக தகவல்கள் கூறுகின்றன.

ஜிடி 650 மோட்டார்சைக்கிளுடன் இன்டர்செப்டார் 650 என்ற புதிய மோட்டார்சைக்கிளையும் ராயல் என்ஃபீல்டு அறிமுகம் செய்ய இருக்கிறது. இந்த இரண்டு புதிய 650 சிசி ரக மோட்டார்சைக்கிள்களிலும் 648சிசி திறன் கொண்ட பேரலல் ட்வின் சிலிண்டர் அமைப்புடைய எஞ்சின் பொருத்தப்பட்டு இருக்கிறது.

இந்த எஞ்சின் அதிகபட்சமாக 47 பிஎச்பி பவரையும், 52 என்எம் டார்க் திறனையும் வழங்க வல்லது. 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் மற்றும் ஸ்லிப்பர் க்ளட்ச் வசதியுடன் வர இருக்கிறது. மேலும், இந்த இரண்டு புதிய மோட்டார்சைக்கிள்களிலும் டியூவல் டிஸ்க் பிரேக் சிஸ்டம், டியூவல் சேனல் ஏபிஎஸ் பிரேக் சிஸ்டமும் இடம்பெற இருக்கிறது.

கான்டினென்டல் ஜிடி 650 மற்றும் இன்டர்செப்டார் 650 மோட்டார்சைக்கிள் மாடல்கள் ரூ.3.25 லட்சம் என்ற எக்ஸ்ஷோரூம் விலையில் எதிர்பார்க்கப்படுகிறது. 650சிசி ரக பிரிமியம் மோட்டார்சைக்கிள் மார்க்கெட்டில் மிக சவாலான விலையில் இந்த இரண்டு புதிய ராயல் என்ஃபீல்டு மோட்டார்சைக்கிள் மாடல்களும் விரைவில் களமிறக்க இருக்கின்றன.


Click it and Unblock the Notifications








