அதிருப்தியில் உள்ள உரிமையாளர்களிடம் இருந்து பைக்குகளை திரும்ப பெற ராயல் என்பீல்டு திடீர் முடிவு?

ராயல் என்பீல்டு நிறுவனத்தின் நடவடிக்கைகளால் ஆத்திரமடைந்த உரிமையாளர்கள் சிலர், தங்கள் மோட்டார் சைக்கிள்களை குப்பையில் வீசினர்.

ராயல் என்பீல்டு நிறுவனத்தின் நடவடிக்கைகளால் ஆத்திரமடைந்த உரிமையாளர்கள் சிலர், தங்கள் மோட்டார் சைக்கிள்களை குப்பையில் வீசினர். எனவே கோபமாக உள்ள உரிமையாளர்களிடம் இருந்து, மோட்டார் சைக்கிள்களை ஒட்டுமொத்தமாக திரும்ப பெற ராயல் என்பீல்டு முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

கோபமாக உள்ள உரிமையாளர்களிடம் இருந்து பைக்குகளை திரும்ப பெற ராயல் என்பீல்டு திடீர் முடிவு?

இரண்டாம் உலக போர் நடைபெற்ற கால கட்டத்தில், WD/RE 125 என்ற மோட்டார் சைக்கிள்களை, ராயல் என்பீல்டு நிறுவனம் உற்பத்தி செய்தது. இந்த மோட்டார் சைக்கிள்களை, இங்கிலாந்து நாட்டு படை வீரர்கள், போர் முனையில் பயன்படுத்தினர்.

கோபமாக உள்ள உரிமையாளர்களிடம் இருந்து பைக்குகளை திரும்ப பெற ராயல் என்பீல்டு திடீர் முடிவு?

2ம் உலகப்போரில் பயன்படுத்தப்பட்ட WD/RE 125 மோட்டார் சைக்கிள்களை நினைவுபடுத்தும் வகையில், பெகாசஸ் 500 எடிசன் மோட்டார் சைக்கிள்களை, ராயல் என்பீல்டு நிறுவனம் உருவாக்கியது. எனவே பெகாசஸ் 500 எடிசனானது, உலகப்போர் எடிசன் மோட்டார் சைக்கிள்கள் எனவும் குறிப்பிடப்படுகின்றன.

கோபமாக உள்ள உரிமையாளர்களிடம் இருந்து பைக்குகளை திரும்ப பெற ராயல் என்பீல்டு திடீர் முடிவு?

ராயல் என்பீல்டு நிறுவனத்தின் மிகவும் விலை உயர்ந்த மோட்டார் சைக்கிள்களில் ஒன்றாக பெகாசஸ் 500 எடிசன் கருதப்படுகிறது. இதன் எக்ஸ்ஷோரூம் விலை ரூ.2.40 லட்சம். WD/RE 125 மோட்டார் சைக்கிளை அடிப்படையாக கொண்ட பாரம்பரிய டிசைன் அம்சங்கள், பெகாசஸ் 500 எடிசனில் இடம்பெற்றுள்ளன.

கோபமாக உள்ள உரிமையாளர்களிடம் இருந்து பைக்குகளை திரும்ப பெற ராயல் என்பீல்டு திடீர் முடிவு?

ஆனால் பெகாசஸ் 500 எடிசன் மோட்டார் சைக்கிள்களானது, லிமிடெட் எடிசன் மாடலாக மட்டுமே உருவாக்கப்பட்டது. அதாவது உலகம் முழுவதுக்கும் சேர்த்து ஒட்டுமொத்தமாக 1,000 பெகாசஸ் 500 எடிசன் மோட்டார் சைக்கிள்கள் மட்டுமே தயாரிக்கப்பட்டன.

கோபமாக உள்ள உரிமையாளர்களிடம் இருந்து பைக்குகளை திரும்ப பெற ராயல் என்பீல்டு திடீர் முடிவு?

இதில், இந்தியாவுக்கு என ஒதுக்கப்பட்டது வெறும் 250 மோட்டார் சைக்கிள்கள் மட்டும்தான். எனினும் இந்த மோட்டார் சைக்கிள்களின் தனித்துவமான அம்சங்கள் காரணமாக, வாடிக்கையாளர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு எழுந்தது.

கோபமாக உள்ள உரிமையாளர்களிடம் இருந்து பைக்குகளை திரும்ப பெற ராயல் என்பீல்டு திடீர் முடிவு?

இந்த சூழலில், பெகாசஸ் 500 எடிசன் மோட்டார் சைக்கிள்களுக்கான ஆன்லைன் முன்பதிவு, கடந்த ஜூலை மாத கடைசியில் நடைபெற்றது. அப்போது இந்தியாவுக்கு என ஒதுக்கப்பட்ட 250 மோட்டார் சைக்கிள்களும் வெறும் 178 வினாடிகளில் விற்பனையானது. இது ஒரு புதிய சாதனை என்பது குறிப்பிடத்தக்கது.

கோபமாக உள்ள உரிமையாளர்களிடம் இருந்து பைக்குகளை திரும்ப பெற ராயல் என்பீல்டு திடீர் முடிவு?

எனினும் இந்தியாவில் விற்பனை செய்யப்பட்ட பெகாசஸ் 500 எடிசன் மோட்டார் சைக்கிள்களில் ஏபிஎஸ் பிரேக் வசதி கிடையாது. ஆனால் வெளிநாடுகளில் விற்பனை செய்யப்பட்ட எஞ்சிய 750 பெகாசஸ் 500 எடிசன் மோட்டார் சைக்கிள்களில் டியூயல் சேனல் ஏபிஎஸ் வசதி வழங்கப்பட்டிருந்தது.

கோபமாக உள்ள உரிமையாளர்களிடம் இருந்து பைக்குகளை திரும்ப பெற ராயல் என்பீல்டு திடீர் முடிவு?

இருந்தாலும் இந்திய வாடிக்கையாளர்கள் அனைவரும் மகிழ்ச்சியுடன்தான், பெகாசஸ் 500 எடிசன் மோட்டார் சைக்கிள்களை ஏற்றுக்கொண்டனர். எனினும் ஆகஸ்ட் கடைசி வாரம் வரை மட்டுமே இந்த மகிழ்ச்சி நீடித்தது.

கோபமாக உள்ள உரிமையாளர்களிடம் இருந்து பைக்குகளை திரும்ப பெற ராயல் என்பீல்டு திடீர் முடிவு?

ஏனெனில் ராயல் என்பீல்டு நிறுவனமானது, ஆகஸ்ட் மாத கடைசி வாரத்தில், கிளாசிக் 350 சிக்னல்ஸ் மோட்டார் சைக்கிள்களை லான்ச் செய்தது. கிளாசிக் 350 சிக்னல்ஸ் மோட்டார் சைக்கிள்களானது, கிட்டத்தட்ட அப்படியே பெகாசஸ் 500 எடிசன் மோட்டார் சைக்கிள்களை போன்றே இருந்தது.

கோபமாக உள்ள உரிமையாளர்களிடம் இருந்து பைக்குகளை திரும்ப பெற ராயல் என்பீல்டு திடீர் முடிவு?

அத்துடன் கிளாசிக் 350 சிக்னல்ஸ் மோட்டார் சைக்கிள்களில் டியூயல் சேனல் ஏபிஎஸ் வசதி வேறு வழங்கப்பட்டிருந்தது. இந்தியாவில் ஏபிஎஸ் வசதியுடன் அறிமுகம் செய்யப்பட்ட முதல் ராயல் என்பீல்டு நிறுவன மோட்டார் சைக்கிள் என்ற பெருமையை கிளாசிக் 350 சிக்னல்ஸ் பெறுகிறது.

கோபமாக உள்ள உரிமையாளர்களிடம் இருந்து பைக்குகளை திரும்ப பெற ராயல் என்பீல்டு திடீர் முடிவு?

ஆனால் இந்தியாவில் விற்பனை செய்யப்பட்ட பெகாசஸ் 500 எடிசன் மோட்டார் சைக்கிள்களில் ஏபிஎஸ் வசதி கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் பெகாசஸ் 500 எடிசன் மோட்டார் சைக்கிள் உரிமையாளர்கள் ஆத்திரமடைந்தனர்.

கோபமாக உள்ள உரிமையாளர்களிடம் இருந்து பைக்குகளை திரும்ப பெற ராயல் என்பீல்டு திடீர் முடிவு?

இத்தனைக்கும் கிளாசிக் 350 சிக்னல்ஸ் மோட்டார் சைக்கிளின் எக்ஸ் ஷோரூம் விலை வெறும் ரூ.1.62 லட்சம் மட்டுமே. அதாவது பெகாசஸ் 500 எடிசன் மோட்டார் சைக்கிளுடன் (எக்ஸ் ஷோரூம் ரூ.2.40 லட்சம்) ஒப்பிடுகையில், கிளாசிக் 350 சிக்னல்ஸ் மோட்டார் சைக்கிளின் விலை சுமார் ரூ.80 ஆயிரம் குறைவு.

கோபமாக உள்ள உரிமையாளர்களிடம் இருந்து பைக்குகளை திரும்ப பெற ராயல் என்பீல்டு திடீர் முடிவு?

இதுதவிர கிளாசிக் 350 சிக்னல்ஸ் மோட்டார் சைக்கிள் லிமிடெட் எடிசன் மாடலும் கிடையாது. இதனால்தான் பெகாசஸ் 500 எடிசன் மோட்டார் சைக்கிள் உரிமையாளர்கள் ஆத்திரமடைந்தனர். ராயல் என்பீல்டு நிறுவனம் தங்களை ஏமாற்றி விட்டதாக புகார் தெரிவிக்க தொடங்கினர்.

கோபமாக உள்ள உரிமையாளர்களிடம் இருந்து பைக்குகளை திரும்ப பெற ராயல் என்பீல்டு திடீர் முடிவு?

இதன் உச்சகட்டமாக 2 பெகாசஸ் 500 எடிசன் உரிமையாளர்கள், தங்கள் மோட்டார் சைக்கிள்களை குப்பையில் வீசினர். இது தொடர்பான புகைப்படங்கள் சமூக வலை தளங்களில் வைரலாக பரவியது. இதனால் பாரம்பரியமான ராயல் என்பீல்டு நிறுவனத்திற்கு பெரும் தலைகுனிவு ஏற்பட்டது.

கோபமாக உள்ள உரிமையாளர்களிடம் இருந்து பைக்குகளை திரும்ப பெற ராயல் என்பீல்டு திடீர் முடிவு?

அதே நேரத்தில் அனைத்து பெகாசஸ் 500 எடிசன் உரிமையாளர்களும் கோபமாக இல்லை என்றும், ஒரு சிலர் மட்டுமே ஆத்திரத்தில் இருப்பதாகவும் கூறப்படுகிறது. எனினும் கோபமாக உள்ள பெகாசஸ் 500 எடிசன் உரிமையாளர்களை திருப்திபடுத்த ராயல் என்பீல்டு அதிரடியான ஒரு முடிவை எடுத்திருப்பதாக தெரிகிறது.

கோபமாக உள்ள உரிமையாளர்களிடம் இருந்து பைக்குகளை திரும்ப பெற ராயல் என்பீல்டு திடீர் முடிவு?

அதாவது பெகாசஸ் 500 எடிசன் மோட்டார் சைக்கிள்களை திரும்ப பெற ராயல் என்பீல்டு திட்டமிட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த வேலைகளை டீலர்ஷிப் அளவிலேயே செய்து முடிக்க, ராயல் என்பீல்டு முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது.

கோபமாக உள்ள உரிமையாளர்களிடம் இருந்து பைக்குகளை திரும்ப பெற ராயல் என்பீல்டு திடீர் முடிவு?

அதாவது பெகாசஸ் 500 எடிசன் மோட்டார் சைக்கிள்களை திரும்ப வழங்க விரும்பும் உரிமையாளர்கள், டீலர்களிடம் அதனை வழங்கலாம். டீலர்கள் அந்த மோட்டார் சைக்கிள்களை காட்சிக்கு வைத்து, விருப்பம் உள்ள புதிய வாடிக்கையாளர்களிடம் விற்பனை செய்து கொள்ளலாம் என கூறப்படுகிறது.

கோபமாக உள்ள உரிமையாளர்களிடம் இருந்து பைக்குகளை திரும்ப பெற ராயல் என்பீல்டு திடீர் முடிவு?

ஆனால் இதுகுறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் எதனையும் ராயல் என்பீல்டு நிறுவனம் தற்போது வரை வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் அதிகாரப்பூர்வமற்ற தகவல்கள் மட்டுமே உலா வந்து கொண்டிருக்கின்றன.

Most Read Articles

ராயல் என்பீல்டு நிறுவனம் திரும்ப பெற திட்டமிட்டுள்ளதாக கூறப்படும் பெகாசஸ் 500 எடிசன் மோட்டார் சைக்கிள்களின் புகைப்பட ஆல்பத்தை நீங்கள் இங்கே காணலாம்.

English summary
Royal Enfield May Withdraw Pegasus 500 From Unhappy Owners? Read in Tamil
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X