ராயல் என்பீல்டு ஏமாற்றிவிட்டது.. பைக்குகளை குப்பை அள்ளும் பணிக்கு வழங்க உரிமையாளர்கள் முடிவு..

ராயல் என்பீல்டு நிறுவனத்தின் நடவடிக்கைகள், பெகாசஸ் 500 எடிசன் மோட்டார் சைக்கிள் உரிமையாளர்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

By Arun

ராயல் என்பீல்டு நிறுவனத்தின் நடவடிக்கைகள், பெகாசஸ் 500 எடிசன் மோட்டார் சைக்கிள் உரிமையாளர்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இதனால் பெகாசஸ் 500 எடிசன் மோட்டார் சைக்கிளை குப்பை அள்ளும் பணிக்கு வழங்க சிலர் முடிவு எடுத்துள்ளனர். இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

ராயல் என்பீல்டு ஏமாற்றிவிட்டது.. பைக்குகளை குப்பை அள்ளும் பணிக்கு வழங்க உரிமையாளர்கள் முடிவு..

ராயல் என்பீல்டு கிளாசிக் 350 சிக்னல்ஸ் எடிசன் மோட்டார் சைக்கிள், கடந்த வாரம் லான்ச் செய்யப்பட்டது. இந்திய ராணுவத்துடனான ராயல் என்பீல்டு நிறுவனத்தின் நீண்ட கால உறவை போற்றும் வகையிலும், முப்படையினருக்கு பெருமை சேர்க்கும் வகையிலும் இந்த மோட்டார் சைக்கிள்கள் உருவாக்கப்பட்டுள்ளன.

ராயல் என்பீல்டு ஏமாற்றிவிட்டது.. பைக்குகளை குப்பை அள்ளும் பணிக்கு வழங்க உரிமையாளர்கள் முடிவு..

ராயல் என்பீல்டு கிளாசிக் 350 சிக்னல்ஸ் எடிசன் மோட்டார் சைக்கிள், ஏர்போர்ன் ப்ளூ, ஸ்டோர்ம்ரைடர் சேண்ட் என்ற 2 புதிய விசேஷ வண்ணங்களை பெற்றுள்ளது. இதுதவிர இந்த மோட்டார் சைக்கிள்களில், ஆண்டி லாக் பிரேக்கிங் சிஸ்டம் எனப்படும் ஏபிஎஸ் வசதி ஸ்டாண்டர்டாக வழங்கப்பட்டுள்ளது.

ராயல் என்பீல்டு ஏமாற்றிவிட்டது.. பைக்குகளை குப்பை அள்ளும் பணிக்கு வழங்க உரிமையாளர்கள் முடிவு..

ஏபிஎஸ் பிரேக் வசதியுடன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்ட முதல் ராயல் என்பீல்டு மோட்டார் சைக்கிள் என்ற பெருமையை கிளாசிக் 350 சிக்னல்ஸ் எடிசன் பெற்றுள்ளது. அத்துடன் பல்வேறு அட்டகாசமான வசதிகளும், ராயல் என்பீல்டு கிளாசிக் 350 சிக்னல்ஸ் எடிசன் மோட்டார் சைக்கிள்களில் வழங்கப்பட்டுள்ளன.

ராயல் என்பீல்டு ஏமாற்றிவிட்டது.. பைக்குகளை குப்பை அள்ளும் பணிக்கு வழங்க உரிமையாளர்கள் முடிவு..

ராயல் என்பீல்டு கிளாசிக் 350 சிக்னல்ஸ் எடிசன் மோட்டார் சைக்கிளின் எக்ஸ் ஷோரூம் விலை 1.62 லட்ச ரூபாயாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இது ஸ்டாண்டர்டு கிளாசிக் 350 மோட்டார் சைக்கிளின் எக்ஸ் ஷோரூம் விலையை காட்டிலும் சுமார் 15 ஆயிரம் ரூபாய்தான் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.

ராயல் என்பீல்டு ஏமாற்றிவிட்டது.. பைக்குகளை குப்பை அள்ளும் பணிக்கு வழங்க உரிமையாளர்கள் முடிவு..

இந்த சூழ்நிலையில் அறிமுகம் செய்யப்பட்ட ஒரு வார காலத்திற்கு உள்ளாகவே கிளாசிக் 350 சிக்னல்ஸ் எடிசன் மோட்டார் சைக்கிள்களை வாடிக்கையாளர்களுக்கு டெலிவரி செய்யும் பணிகளை ராயல் என்பீல்டு நிறுவனம் தொடங்கி விட்டது.

ராயல் என்பீல்டு ஏமாற்றிவிட்டது.. பைக்குகளை குப்பை அள்ளும் பணிக்கு வழங்க உரிமையாளர்கள் முடிவு..

இது ராயல் என்பீல்டு பெகாசஸ் 500 மோட்டார் சைக்கிள் உரிமையாளர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. 'பிரத்யேகம்' என்ற பெயரில் ராயல் என்பீல்டு நிறுவனம் தங்களை ஏமாற்றி விட்டதாக பெகாசஸ் 500 மோட்டார் சைக்கிள் உரிமையாளர்கள் கருதுகின்றனர்.

ராயல் என்பீல்டு ஏமாற்றிவிட்டது.. பைக்குகளை குப்பை அள்ளும் பணிக்கு வழங்க உரிமையாளர்கள் முடிவு..

கடந்த ஜூலை மாத கடைசியில், பெகாசஸ் 500 லிமிடெட் எடிசன் மாடலை, ராயல் என்பீல்டு அறிமுகம் செய்தது. இந்தியாவிற்கு 250 மோட்டார் சைக்கிள்கள் மட்டுமே ஒதுக்கப்பட்டன. இதனால் ஆன்லைனின் முன்பதிவு தொடங்கிய வெறும் 178 வினாடிகளில் அனைத்து மோட்டார் சைக்கிள்களும் விற்று தீர்ந்தன.

ராயல் என்பீல்டு ஏமாற்றிவிட்டது.. பைக்குகளை குப்பை அள்ளும் பணிக்கு வழங்க உரிமையாளர்கள் முடிவு..

பெகாசஸ் 500 லிமிடெட் எடிசன் மாடலின் ஆன் ரோடு விலை சுமார் 2.65 லட்ச ரூபாய். எனினும் பிரத்யேகமான பல வசதிகள் இருந்ததால், அதிகமான விலை குறித்த புகார் எதனையும், அப்போது உரிமையாளர்கள் தெரிவிக்கவில்லை.

ராயல் என்பீல்டு ஏமாற்றிவிட்டது.. பைக்குகளை குப்பை அள்ளும் பணிக்கு வழங்க உரிமையாளர்கள் முடிவு..

ஆனால் பெகாசஸ் 500 லிமிடெட் எடிசன் மாடலை அறிமுகம் செய்த ஒரு சில வாரங்களிலேயே, கிளாசிக் 350 சிக்னல்ஸ் எடிசன் மோட்டார் சைக்கிளை ராயல் என்பீல்டு நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. இதுதான் பெகாசன் 500 மோட்டார் சைக்கிள் உரிமையாளர்கள் மத்தியில் ஆத்திரத்தை ஏற்படுத்தியுள்ளது.

ராயல் என்பீல்டு ஏமாற்றிவிட்டது.. பைக்குகளை குப்பை அள்ளும் பணிக்கு வழங்க உரிமையாளர்கள் முடிவு..

ஏனெனில் கிளாசிக் 350 சிக்னல்ஸ் எடிசன் மோட்டார் சைக்கிளின் விலை குறைவு என்பதுடன் அந்த மோட்டார் சைக்கிளில் ஏபிஎஸ் வசதி வேறு வழங்கப்பட்டுள்ளது. அத்துடன் பெகாசஸ் 500 மோட்டார் சைக்கிளை போல் அது லிமிடெட் எடிசன் மாடலும் கிடையாது.

Recommended Video

ஏபிஎஸ் வசதியுடன் கூடிய முதல் ராயல் என்ஃபீல்டு பைக்காக கிளாசிக் 350 சிக்னல்ஸ் மாடல்கள் அறிமுகமானது.
ராயல் என்பீல்டு ஏமாற்றிவிட்டது.. பைக்குகளை குப்பை அள்ளும் பணிக்கு வழங்க உரிமையாளர்கள் முடிவு..

எனவேதான் பெகாசஸ் 500 உரிமையாளர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். ராயல் என்பீல்டு நிறுவனத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக, தங்களின் பெகாசஸ் 500 மோட்டார் சைக்கிளை உள்ளூர் நகராட்சி அமைப்புகளின் குப்பை அள்ளும் பணிக்கு வழங்க சிலர் முடிவு செய்திருப்பதாகவும் கூறப்படுகிறது.

ராயல் என்பீல்டு ஏமாற்றிவிட்டது.. பைக்குகளை குப்பை அள்ளும் பணிக்கு வழங்க உரிமையாளர்கள் முடிவு..

ராயல் என்பீல்டு கிளாசிக் 350 சிக்னல்ஸ் எடிசன் மோட்டார் சைக்கிளானது கிட்டத்தட்ட பெகாசஸ் 500 எடிசன் மோட்டார் சைக்கிளை போன்றே இருப்பதாக பெகாசஸ் 500 எடிசன் உரிமையாளர்கள் கருதுகின்றனர். ஆனால் கிளாசிக் 350 சிக்னல்ஸ் எடிசன் விலை மட்டும் குறைவாக உள்ளது. எனவேதான் பெகாசஸ் 500 எடிசன் உரிமையாளர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.

{document1}

English summary
Royal Enfield Pegasus 500 Owners Upset. Here is Why? Read in Tamil
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X