ராயல் என்பீல்டை கண்டு போட்டியாளர்கள் நடுங்க காரணம் இதுதான்..

ராயல் என்பீல்டு நிறுவன மோட்டார் சைக்கிள்களின் விற்பனை அதிகரித்துள்ளது. தற்போது வெளியாகியுள்ள சேல்ஸ் ரிப்போர்ட்டின் மூலம் இது உறுதி செய்யப்பட்டுள்ளது.

By Arun

ராயல் என்பீல்டு நிறுவன மோட்டார் சைக்கிள்களின் விற்பனை அதிகரித்துள்ளது. தற்போது வெளியாகியுள்ள சேல்ஸ் ரிப்போர்ட்டின் மூலம் இது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

ராயல் என்பீல்டு மோட்டார் சைக்கிள்களின் விற்பனை அதிகரிப்பு.. போட்டியாளர்கள் கலக்கம்..

ஆகஸ்ட் மாதம் முடிவடைந்து, செப்டம்பர் பிறந்துள்ளது. இந்த நேரத்தில், ஆகஸ்ட் மாதம் விற்பனையான கார் மற்றும் பைக்குகள் குறித்த சேல்ஸ் ரிப்போர்ட் வரிசையாக வெளியாகி வருகிறது. இதன்படி வெளியான சேல்ஸ் ரிப்போர்ட்டின் மூலம், ராயல் என்பீல்டு நிறுவனம் வளர்ச்சியடைந்திருப்பது தெரியவந்துள்ளது.

ராயல் என்பீல்டு மோட்டார் சைக்கிள்களின் விற்பனை அதிகரிப்பு.. போட்டியாளர்கள் கலக்கம்..

கடந்த ஆகஸ்ட் மாதத்தில் மட்டும் ராயல் என்பீல்டு நிறுவனம் மொத்தம் 69,377 மோட்டார் சைக்கிள்களை விற்பனை செய்துள்ளது. இது கடந்த 2017ம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்துடன் ஒப்பிடுகையில், 2 சதவீத வளர்ச்சி என்பது குறிப்பிடத்தக்கது.

ராயல் என்பீல்டு மோட்டார் சைக்கிள்களின் விற்பனை அதிகரிப்பு.. போட்டியாளர்கள் கலக்கம்..

ஏனெனில் கடந்த 2017ம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் ராயல் என்பீல்டு நிறுவனம் 67,977 மோட்டார் சைக்கிள்களை மட்டுமே விற்பனை செய்திருந்தது. ஆனால் 2018ம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் மொத்தம் 69,377 மோட்டார் சைக்கிள்களை விற்பனை செய்து, ராயல் என்பீல்டு நிறுவனம் சாதனை படைத்துள்ளது.

ராயல் என்பீல்டு மோட்டார் சைக்கிள்களின் விற்பனை அதிகரிப்பு.. போட்டியாளர்கள் கலக்கம்..

கடந்த 2018ம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் உள்நாட்டில் மட்டும் மொத்தம் 68,014 மோட்டார் சைக்கிள்களை ராயல் என்பீல்டு நிறுவனம் விற்பனை செய்துள்ளது. கடந்த 2017ம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்துடனான உள்நாட்டு விற்பனையில் ஒப்பிட்டாலும் இது 2 சதவீத வளர்ச்சியாகும்.

ராயல் என்பீல்டு மோட்டார் சைக்கிள்களின் விற்பனை அதிகரிப்பு.. போட்டியாளர்கள் கலக்கம்..

ஏனெனில் கடந்த 2017ம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் ராயல் என்பீல்டு நிறுவனம் மொத்தம் 66,872 மோட்டார் சைக்கிள்களை மட்டுமே உள்நாட்டில் விற்பனை செய்திருந்தது. அது 2018ம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில், 68,014 மோட்டார் சைக்கிள்களாக அதிகரித்துள்ளது.

ராயல் என்பீல்டு மோட்டார் சைக்கிள்களின் விற்பனை அதிகரிப்பு.. போட்டியாளர்கள் கலக்கம்..

அதே நேரத்தில் ராயல் என்பீல்டு நிறுவனத்தின் ஏற்றுமதியானது 23 சதவீத வளர்ச்சியை சந்தித்திருக்கிறது. 2018ம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் 1,363 மோட்டார் சைக்கிள்களை ராயல் என்பீல்டு நிறுவனம் ஏற்றுமதி செய்துள்ளது.

ராயல் என்பீல்டு மோட்டார் சைக்கிள்களின் விற்பனை அதிகரிப்பு.. போட்டியாளர்கள் கலக்கம்..

ஆனால் 2017ம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் ராயல் என்பீல்டு நிறுவனம் வெறும் 1,105 மோட்டார் சைக்கிள்களை மட்டுமே விற்பனை செய்திருந்தது. இது தற்போது 1,363 மோட்டார் சைக்கிள்களாக அதிகரித்துள்ளது.

ராயல் என்பீல்டு மோட்டார் சைக்கிள்களின் விற்பனை அதிகரிப்பு.. போட்டியாளர்கள் கலக்கம்..

இதுதவிர 2018ம் ஆண்டு ஏப்ரல் முதல் ஆகஸ்ட் வரையிலான காலகட்டத்தில் ராயல் என்பீல்டு நிறுவனம் ஒட்டுமொத்தமாக 3,63,801 மோட்டார் சைக்கிள்களை விற்பனை செய்துள்ளது. ஆனால் 2017ம் ஆண்டு ஏப்ரல்-ஆகஸ்ட் காலகட்டத்தில் வெறும் 3,16,434 மோட்டர் சைக்கிள்களை மட்டுமே விற்பனை செய்திருந்தது.

ராயல் என்பீல்டு மோட்டார் சைக்கிள்களின் விற்பனை அதிகரிப்பு.. போட்டியாளர்கள் கலக்கம்..

இந்த வகையில் பார்த்தாலும் ராயல் என்பீல்டு நிறுவனம் 15 சதவீத வளர்ச்சியை சந்தித்துள்ளது. வருங்காலத்தில் இன்டர்செப்டார் 650 மற்றும் கான்டினென்டல் ஜிடி 650 ஆகிய 2 மோட்டார் சைக்கிள்களை ராயல் என்பீல்டு நிறுவனம் லான்ச் செய்யவுள்ளது.

ராயல் என்பீல்டு மோட்டார் சைக்கிள்களின் விற்பனை அதிகரிப்பு.. போட்டியாளர்கள் கலக்கம்..

இந்த 2 மோட்டார் சைக்கிள்களும் வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளன. எனவே வருங்காலத்தில் ராயல் என்பீல்டு நிறுவன மோட்டார் சைக்கிள்களின் விற்பனை எண்ணிக்கை இன்னும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

{document1}

English summary
Royal Enfield Posts Strong Growth In August 2018. Read in Tamil
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X