ரூ. 1.56 லட்சம் ஆரம்ப விலையில் ராயல் என்ஃபீல்டு தண்டர்பேர்டு 350எக்ஸ் & 500எக்ஸ் பைக் அறிமுகம்
ரூ. 1.56 லட்சம் ஆரம்ப விலையில் ராயல் என்ஃபீல்டு தண்டர்பேர்டு 350எக்ஸ் & 500எக்ஸ் பைக் விற்பனைக்கு அறிமுகம்..!!
ராயல் என்ஃபீல்டு நிறுவனம் புதிய தண்டர்பேர்டு 350 எக்ஸ் மற்றும் 500 எக்ஸ் மோட்டார் சைக்கிளை முறையே எக்ஸ்-ஷோரூம் டெல்லி மதிப்பில் ரூ. 1.56 லட்சம் மற்றும் ரூ. 1.98 லட்சம் விலையில் விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ளது.

சராசரியான தண்டர்பேர்டு கட்டமைப்பை தழுவி உருவாக்கப்பட்டுள்ள புதிய தண்டர்பேர்டு எக்ஸ் ரேஞ்ச், பழைய தண்டர்பேட் பைக்கின் எஞ்சினையே பெற்றுள்ளது.
தண்டர்பேர்டு 350எக்ஸ் பைக்கில் 346சிசி திறன் பெற்ற சிங்கிள்-சிலிண்டர் ஏர் கூல்டு கொண்ட எஞ்சின் உள்ளது. இது 19 பிஎச்பி பவர் மற்றும் 28 என்.எம் டார்க் திறனை வழங்கும்.

அதேபோல தண்டர்பேர்டு 500எக்ஸ் பைக்கில் உள்ள 499சிசி சிங்கிள் சிலிண்டர் ஏர் கூல்டு எஞ்சின் 27 பிஎச்பி பவர் மற்றும் 41.3 என்.எம் டார்க் திறனை வழங்கும்.
இரண்டு புதிய தண்டர்பேர்டு சிரீஸின் பைக்குகளில் ராயல் என்ஃபீல்டு 5 ஸ்பீடு கியர்பாக்ஸ் தேவையை வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

ராயல் என்ஃபீல்டு தண்டர்பேர்டு 350 எக்ஸ் மற்றும் 500 எக்ஸ் பைக்கில் சாராசரியான தண்டர்பேர்டு பைக்கிற்குரிய தனித்துவம் பெற்ற டிசைன் வடிவமைப்புகள் உள்ளன.
அவற்றுடன் வட்டமைப்பிலான ப்ரொஜக்டருடன் கூடிய முகப்பு விளக்குகள், எல்.இ.டி பகல்நேர விளக்குகள் ஆகியவை வழங்கப்பட்டுள்ளன.

பைக்கின் எரிவாயு டேங் பழைய வடிவமைப்பை பெற்றிருந்தாலும், அதற்கு கண்ணை பறிக்கும் நிறப்பூச்சு வழங்கப்பட்டுள்ளது. ஒரே துண்டிலான இருக்கை, அலாய் சக்கரங்கள், ரிம் ஸ்டிக்கர்கள் உள்ளன. பைக்கின் பின் சக்கரத்தில் எல்.இ.டி டெயில் விளக்குகள் வழங்கப்பட்டுள்ளன.

ராயல் என்ஃபீல்டு தண்டர்பேர்டு 350 எக்ஸ் மற்றும் 500 எக்ஸ் பைக்குகள் டிரிஃப்டர் ப்ளூ, கெட்வே ஆரஞ்சு, ரோவிங் ரெட் மற்றும் விம்ஸிக்கில் வைட் போன்ற நிறங்களில் வெளிவருகிறது.

தொடர்ந்து பைக்கின் முன்பக்க மட்கார்டு, சைடு பேனல்கள், பேனல் ஃபெண்டர், முன்பக்க ஃபோர்க்ஸ், சஸ்பென்ஷன், எக்ஸாஸ்ட் மற்றும் எஞ்சின் போன்ற பாகங்களுக்கு கருப்பு நிறபூச்சு வழங்கப்பட்டுள்ளது.

முன்பக்க சக்கரத்தில் டெலஸ்கோபிக் ஃபோர்க்ஸ் மற்றும் பின்சக்கரத்தில் ட்வின் ஷாக் அப்ஸபர்கள் இந்த பைக்குகளுக்கான சஸ்பென்ஷன் தேவையை பூர்த்தி செய்கின்றன.

இரண்டு பக்க சக்கரங்களிலும் டிஸ்க் பிரேக் பொருத்தப்பட்டுள்ளன. தவிர இந்த பைக்கில் அனலாக்-டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர் மற்றும் சிறியளவிலான ஹேண்டில்பார் வழங்கப்பட்டுள்ளது.

ராயல் என்ஃபீல்டு பைக்குகளில் முதன்முதலாக 9 ஸ்போக் அலாய் சக்கரங்களை கொண்ட எம்.ஆர்.எஃப் நைலோகிரிப் ஜேப்பர் டூப்லெஸ் டயர்கள் இந்த பொருத்தப்பட்டுள்ளது ஆச்சர்யத்தை தருகிறது.

பெரிய எதிர்பார்ப்பிற்கு மத்தியில் வெளியான ராயல் என்ஃபீல்டு தண்டர்பேர்டு 350 எக்ஸ் மற்றும் 500 எக்ஸ் பைக்குகளின் வடிவமைப்பு தத்துவம் ரெட்ரோ தோற்ற மோட்டார்சைக்கிள் லைன்-அப்பின் கீழ் தயாராகியுள்ளது.

புதிய தண்டர்பேர்டு எக்ஸ் சீரிஸ் பைக்கில் வழங்கப்பட்டுள்ள சிறப்பம்சங்கள் இளைய தலைமுறையினரை ஈர்க்கும் வகையில் தயாராகியுள்ளது.

சராசரியான தண்டர்பேர்டு பைக்கை விட இந்த புதிய எக்ஸ் சிரீஸ் தண்டர்பேர்டு பைக் ரூ. 8000 விலை அதிகமாக பெற்றுள்ளது. பைக்கின் வடிவமைப்பு மற்றும் கட்டமைப்பிற்கு இந்த விலை சரியானதாகவே கருதப்படுகிறது.


Click it and Unblock the Notifications








