விரைவில் களமிறங்கும் ராயல் என்ஃபீல்டு புதிய தண்டர்பேர்டு 350 எக்ஸ் மற்றும் 500 எக்ஸ் பைக்..!!

விரைவில் களமிறங்கும் ராயல் என்ஃபீல்டு புதிய தண்டர்பேர்டு 350 எக்ஸ் மற்றும் 500 எக்ஸ் பைக்..!!

By Azhagar

ராயல் என்ஃபீல்டு நிறுவனத்தின் புதிய தயாரிப்புகள் ஒவ்வொரு முறை வெளியிடப்படும் போதும், இந்தியாவில் உள்ள பைக் ஆர்வலர்கள் அனைவருக்கும் ஒரு பரபரப்பு தொற்றிக்கொள்ளும்.

ராயல் என்ஃபீல்டு தண்டர்பேர்டு சிரீஸில் புதிய பைக்குகள்..!!

அதை வாங்குகிறமோ இல்லையோ, புதிய படம் திரைக்கு வருவது போல ஒரு சிறிய உள்ளார்த உற்சாக உணர்வுகள் ஒவ்வொரு ராயல் என்ஃபீல்டு ரசிகனுக்கும் இருக்கும்.

ராயல் என்ஃபீல்டு தண்டர்பேர்டு சிரீஸில் புதிய பைக்குகள்..!!

2018ம் ஆண்டு தொடங்கிய நாளிலிருந்தே, ராயல் என்ஃபீல்டு ரசிகர்கள் பலர் தண்டர்பேர்டு 350எஸ்க் மற்றும் தண்டர்பேர்டு 500எக்ஸ் பைக்குகளின் வெளியீட்டை வழி மேல் விழி வைத்து காத்திருக்கின்றனர்.

ராயல் என்ஃபீல்டு தண்டர்பேர்டு சிரீஸில் புதிய பைக்குகள்..!!

இதைப்பற்றி ஒவ்வொரு முறையும் அப்டேட்ஸ் செய்திகள் வெளிவரும் போது, இணையத்தில் அவை டிரென்டிங் அடிக்கும். இந்நிலையில் தண்டர்பேர்டு 350எஸ்க் மற்றும் தண்டர்பேர்டு 500எக்ஸ் பைக்குளின் விற்பனை குறித்த விவரங்கள் வெளிவந்துள்ளன.

ராயல் என்ஃபீல்டு தண்டர்பேர்டு சிரீஸில் புதிய பைக்குகள்..!!

வரும் பிப்ரவரி 28ம் தேதி இந்தியாவில் வெளியிடப்படவுள்ள இந்த இரு பைக்குகளும், 2017ம் ஆண்டிலேயே ராயல் என்ஃபீல்டுக்கான விற்பனையாளர்களிடம் சென்றடைந்துள்ளது.

Recommended Video

New Maruti Swift Launch: Price; Mileage; Specifications; Features; Changes
ராயல் என்ஃபீல்டு தண்டர்பேர்டு சிரீஸில் புதிய பைக்குகள்..!!

மெக்கானிக்கல் பாகங்களை கருப்பு நிறத்திலும், எரிவாயு டேங்க் பகுதியை பளீர் நிறம் கொண்டும் இதற்கான பூச்சு பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

சராசரியான தண்டர்பேர்டு பைக்குகளை விட இந்த புதிய தயாரிப்புகள், புத்தம் புதிய ஹேண்டில்பார் மற்றும் இருக்கை அமைப்புகளை பெற்றுள்ளன.

ராயல் என்ஃபீல்டு தண்டர்பேர்டு சிரீஸில் புதிய பைக்குகள்..!!

இவற்றில் புதிய கருப்பு நிற அலாய் சக்கரங்கள், எஞ்சின் பாகங்கள் மேட் பிளாக் நிற தேர்வில் தயாராகியுள்ளன.

ராயல் என்ஃபீல்டு தண்டர்பேர்டு சிரீஸில் புதிய பைக்குகள்..!!

எக்ஸ் சீரிஸ் கொண்ட இந்த தண்டர்பேர்டு பைக்குகளில் அதே பகல் நேர விளக்குடன் கூடிய எல்.இ.டி முகப்பு விளக்குகள் மற்றும் எல்.இ.டி திறன் பெற்ற டெயில் விளக்குகள் உள்ளன.

ராயல் என்ஃபீல்டு தண்டர்பேர்டு சிரீஸில் புதிய பைக்குகள்..!!

19 இஞ்ச் கருப்பு நிற அலாய் சக்கரங்களை பெற்றுள்ள இந்த பைக்குகளின் இருபக்க சக்கரங்களிலும் டிஸ்க் பிரேக் அமைப்பு வழங்கப்பட்டுள்ளது. இதற்கு ஏபிஎஸ் பாதுகாப்பு அம்சம் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

ராயல் என்ஃபீல்டு தண்டர்பேர்டு சிரீஸில் புதிய பைக்குகள்..!!

தண்டர்பேர்டு 350 எக்ஸ் மற்றும் 500 எக்ஸ் பைக்குகள் ஒரேவிதமான தோற்றப்பொலிவை பெற்றிருக்கின்றன. க்ரூஸர் ஸ்டைல் ஹேண்டில்பார்கள், செமி-டிஜிட்டல் ட்வின் பாட் இன்ஸ்ட்ரூமென்ட் கன்சோல் என அனைத்தும் ஒன்று போலவே உள்ளது.

ராயல் என்ஃபீல்டு தண்டர்பேர்டு சிரீஸில் புதிய பைக்குகள்..!!

தற்போதைய தண்டர்பேர்டு மாடலில் இருப்பது போன்று பிரிக்கப்பட்ட இருக்கையாக இல்லாமல், ஒரே இருக்கையாக வழங்கப்பட்டுள்ளது. பில்லியன் ரைடருக்கான பிடிமானம் இருக்கையுடன் ஒன்றிணைவது போல வழங்கப்பட்டுள்ளது.

ராயல் என்ஃபீல்டு தண்டர்பேர்டு சிரீஸில் புதிய பைக்குகள்..!!

பைக்கின் முன்பக்க டெலஸ்கோபிக் ஃபோர்க்ஸ் மேட் பிளாக் நிறத்திலும், பின்பக்க சக்கரத்திற்கான டூயல் ஷாக் அப்ஸபர்கள் அதே நிறத்திலும் வழங்கப்பட்டுள்ளன.

ராயல் என்ஃபீல்டு தண்டர்பேர்டு சிரீஸில் புதிய பைக்குகள்..!!

ராயல் என்ஃபீல்டு தண்டர்பேர்டு 350 எக்ஸ் பைக் சிவப்பு, வெள்ளை போன்ற நிறங்களில் வெளிவருகிறது. அதேபோல தண்டர்பேர்டு 500எக்ஸ் மஞ்சள் மற்றும் நீலம் ஆகிய நிறங்களில் வெளிவருகிறது.

ராயல் என்ஃபீல்டு தண்டர்பேர்டு சிரீஸில் புதிய பைக்குகள்..!!

தற்போதைய மாடலை விட இந்த புதிய தண்டர்பேர்டு 350 எக்ஸ் மற்றும் 500எக்ஸ் மாடல் பைக்குகளுக்கு ரூ. 5000 முதல் ரூ. 8000 வரை விலை அதிகமாக நிர்ணயம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

ராயல் என்ஃபீல்டு தண்டர்பேர்டு சிரீஸில் புதிய பைக்குகள்..!!

இளைய தலைமுறை வாடிக்கையாளர்களை குறிவைத்து ராயல் என்ஃபீல்டு களமிறக்கும் இந்த இரு பைக்குகளும் ஸ்போர்டு மற்றும் நவீன கட்டமைப்புகளை உள்ளடக்கியதாக உள்ளது.

ராயல் என்ஃபீல்டு தண்டர்பேர்டு சிரீஸில் புதிய பைக்குகள்..!!

மேலும் இந்தியாவில் க்ரூஸர் ரக பைக்குகளுக்கு ஏற்பட்டுள்ள புதிய மார்கெட் காரணமாக, ராயல் என்ஃபீல்டு தன்னுடைய பிரபல தயாரிப்புகளை மேம்படுத்தி வெளியிடுவதற்கான கட்டாயத்தில் உள்ளதும் குறிப்பிடத்தக்கது.

More from DriveSpark

Article Published On: Saturday, February 24, 2018, 16:08 [IST]
English summary
Read in Tamil: Royal Enfield Thunderbird 350X And 500X Launch Date Expected Price, Specifications & Features. Click for Details...
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+