ராயல் என்ஃபீல்டு பெகாசஸ் எடிசனுக்கு முண்டியடித்த கூட்டம்... இணையப் பக்கம் செயலிழந்தது!!

ராயல் என்ஃபீல்டு கிளாசிக் 500 பெகாசஸ் எடிசன் மோட்டார்சைக்கிளுக்கு ஆன்லைனில் முன்பதிவு செய்ய வாடிக்கையாளர்கள் முண்டியடித்ததால், அந்த இணையப் பக்கம் செயலிழந்தது. கூடுதல் விபரங்களை தொடர்ந்து காணலாம்.

By Saravana Rajan

ராயல் என்ஃபீல்டு கிளாசிக் 500 மோட்டார்சைக்கிளின் கூடுதல் சிறப்பம்சங்கள் கொண்ட பெகாசஸ் எடிசனுக்கு இன்று பிற்பகல் 2 மணிக்கு ஆன்லைனில் முன்பதிவு துவங்க இருப்பதாக அறிவிக்கப்பட்டு இருந்தது. உலக அளவில் மொத்தமாக 1,000 மோட்டார்சைக்கிள்களும், அதில் 250 பெகாசஸ் எடிசன் மோட்டார்சைக்கிள்கள் இந்தியாவில் விற்பனை செய்யப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது.

ராயல் என்ஃபீல்டு பெகாசஸ் எடிசனுக்கு முண்டியடித்த கூட்டம்... இணையப் பக்கம் செயலிழந்தது!!

இதையடுத்து, இந்த சிறப்பு பதிப்பு ராயல் என்ஃபீல்டு மோட்டார்சைக்கிளை முன்பதிவு செய்ய வாடிக்கையாளர்கள் தயாராக காத்திருந்தனர். இன்று மதியம் 2 மணி ஆனதும், வாடிக்கையாளர்கள் முண்டியடுத்து இந்த மாடலை முன்பதிவு செய்ய முயன்றனர்.

ராயல் என்ஃபீல்டு பெகாசஸ் எடிசனுக்கு முண்டியடித்த கூட்டம்... இணையப் பக்கம் செயலிழந்தது!!

ஒரே நேரத்தில் ஆயிரக்கணக்கானோர் இந்த இணைய பக்கத்தில் நுழைய முயன்றதால், அந்த இணையப் பக்கம் செயலிழந்தது. இதனால், இந்த மோட்டார்சைக்கிளை முன்பதிவு செய்ய இருந்தவர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.

ராயல் என்ஃபீல்டு பெகாசஸ் எடிசனுக்கு முண்டியடித்த கூட்டம்... இணையப் பக்கம் செயலிழந்தது!!

இந்த நிலையில், ராயல் என்ஃபீல்டு டிவிட்டர் பக்கத்தில், பெகாசஸ் எடிசன் முன்பதிவு செய்வதற்கான இணையப் பக்கம் செயலிழந்தது குறித்து ராயல் என்ஃபீல்டு வாடிக்கையாளர் ஒருவர் கேட்ட கேள்விக்கு ராயல் என்ஃபீல்டு நிறுவனம் பதில் கொடுத்துள்ளது.

ராயல் என்ஃபீல்டு பெகாசஸ் எடிசனுக்கு முண்டியடித்த கூட்டம்... இணையப் பக்கம் செயலிழந்தது!!

அதில், தொழில்நுட்பக் கோளாறு காரணமாக, அந்த இணையப்பக்கம் செயல் இழந்து இருப்பதாகவும், பிரச்னை விரைவில் சரிசெய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. மேலும், கிளாசிக் 500 பெகாசஸ் எடிசனுக்கு இன்று இரவு 8.30 மணிக்கு முன்பதிவு துவங்கும் என்றும் தெரிவிக்கப்பட்டு இருந்தது.

ராயல் என்ஃபீல்டு பெகாசஸ் எடிசனுக்கு முண்டியடித்த கூட்டம்... இணையப் பக்கம் செயலிழந்தது!!

எப்படியாவது இந்த சிறப்பு பதிப்பு மாடலை முன்பதிவு செய்துவிட வேண்டும் என்ற ஆவலில் வாடிக்கையாளர்கள் மீண்டும் ஆயத்தமாகினர். இந்த நிலையில், தொழில்நுட்பக் கோளாறு தொடர்வதால், ஆன்லைன் முன்பதிவு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. புதிய தேதி விரைவில் அறிவிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

ராயல் என்ஃபீல்டு பெகாசஸ் எடிசனுக்கு முண்டியடித்த கூட்டம்... இணையப் பக்கம் செயலிழந்தது!!

புதிய ராயல் என்ஃபீல்டு கிளாசிக் 500 பெகாசஸ் எடிசன் சிறப்பம்சங்கள் குறித்து இன்று காலை வெளியிட்ட செய்தியை படித்து தெரிந்து கொள்ளலாம். சாதாரண ராயல் என்ஃபீல்டு கிளாசிக் 500 மோட்டார்சைக்கிள் ரூ.2.14 லட்சம் மும்பை ஆன்ரோடு விலையில் விற்கப்படுகிறது. இந்த நிலையில், பெகாசஸ் எடிசனுக்கு ரூ.2.49 லட்சம் மும்பை ஆன்ரோடு விலை நிர்ணயிக்கப்பட்டு இருக்கிறது.

Source: Rushlane

More from DriveSpark

Article Published On: Tuesday, July 10, 2018, 17:18 [IST]
English summary
Royal Enfield website crashes during online sale of Pegasus Edition
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+