ஜனாதிபதியின் பாதுகாப்பிற்காக ஏகே 47 துப்பாக்கி நிறுவனம் தயாரித்த புதிய பிரம்மாண்ட பைக்..

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினின் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்துவதற்காக, புதிய பிரம்மாண்டமான மோட்டார் சைக்கிள் வாங்கப்படவுள்ளது. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

By Arun

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினின் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்துவதற்காக, புதிய பிரம்மாண்டமான மோட்டார் சைக்கிள் வாங்கப்படவுள்ளது. ஏகே 47 துப்பாக்கியை தயாரித்த நிறுவனம்தான், இந்த மோட்டார் சைக்கிளை உற்பத்தி செய்கிறது. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

ஜனாதிபதியின் பாதுகாப்பிற்காக ஏகே 47 துப்பாக்கி நிறுவனம் தயாரித்த புதிய பிரம்மாண்ட பைக்..

உலகின் சக்தி வாய்ந்த மற்றும் செல்வாக்கு மிக்க மனிதர்களில் ஒருவர், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின். அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்புக்கு நிகரானவர் என்பதால், எப்போதும் உச்சகட்ட பாதுகாப்பின் கீழ்தான் விளாடிமிர் புதின் இருப்பார்.

ஜனாதிபதியின் பாதுகாப்பிற்காக ஏகே 47 துப்பாக்கி நிறுவனம் தயாரித்த புதிய பிரம்மாண்ட பைக்..

பல்வேறு பாதுகாப்பு அம்சங்கள் பொருந்திய எஸ்யூவி மற்றும் செடான் வகை கார்கள், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினிடம் உள்ளன. அவை அனைத்தும் மிகவும் விலை உயர்ந்தவை. என்றாலும் மோட்டார் சைக்கிள்கள் என்றால்தான் விளாடிமிர் புதினுக்கு கொள்ளை பிரியம்.

ஜனாதிபதியின் பாதுகாப்பிற்காக ஏகே 47 துப்பாக்கி நிறுவனம் தயாரித்த புதிய பிரம்மாண்ட பைக்..

பிஎம்டபிள்யூ, யுரல் உள்ளிட்ட மோட்டார் சைக்கிள்கள், விளாடிமிர் புதினின் எஸ்கார்ட் வாகனங்களாக தற்போது பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இந்த சூழ்நிலையில் விளாடிமிர் புதினின் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்துவதற்காக, புதிய பைக் வாங்கப்படவுள்ளது.

ஜனாதிபதியின் பாதுகாப்பிற்காக ஏகே 47 துப்பாக்கி நிறுவனம் தயாரித்த புதிய பிரம்மாண்ட பைக்..

விளாடிமிர் புதினின் எஸ்கார்ட் வாகனமாக பயன்படுத்தப்படவுள்ள இந்த மோட்டார் சைக்கிளின் பெயர் கோர்டெஜ். ரெட்ரோ, மாடர்ன் லுக் கலந்த கலவையாக கோர்டெஜ் உருவாக்கப்பட்டுள்ளது. இதன் பாடி பேனல்கள் அனைத்தும் கருப்பு நிறத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளன.

ஜனாதிபதியின் பாதுகாப்பிற்காக ஏகே 47 துப்பாக்கி நிறுவனம் தயாரித்த புதிய பிரம்மாண்ட பைக்..

கோர்டெஜ் பைக்கின் மொத்த எடை சுமார் 500 கிலோ. இதன் இன்ஜின் 150 எச்பி பவரை வெளிப்படுத்தும் சக்தி வாய்ந்தது. கோர்டெஜ் மோட்டார் சைக்கிளின் டாப் ஸ்பீடு மணிக்கு 113 கிலோ மீட்டர்கள். பூஜ்ஜியத்தில் இருந்து 100 கிலோ மீட்டர்கள் என்ற வேகத்தை வெறும் 3.5 வினாடிகளில், கோர்டெஜ் எட்டிவிடும்.

ஜனாதிபதியின் பாதுகாப்பிற்காக ஏகே 47 துப்பாக்கி நிறுவனம் தயாரித்த புதிய பிரம்மாண்ட பைக்..

இந்த மோட்டார் சைக்கிளில் மற்றொரு சிறப்பம்சமும் அடங்கியிருக்கிறது. மிகவும் பிரபலமான ஏகே-47 (AK-47) துப்பாக்கி உற்பத்தி நிறுவனமான கலாசினிகோவ் குழுமம்தான், கோர்டெஜ் மோட்டார் சைக்கிளையும் உற்பத்தி செய்கிறது.

ஜனாதிபதியின் பாதுகாப்பிற்காக ஏகே 47 துப்பாக்கி நிறுவனம் தயாரித்த புதிய பிரம்மாண்ட பைக்..

ரஷ்ய நாட்டை சேர்ந்த கலாசினிகோவ் நிறுவனம், துப்பாக்கி உள்ளிட்ட பல்வேறு பாதுகாப்பு ஆயுதங்களை உற்பத்தி செய்யும் நிறுவனமாகும். இதன் துணை நிறுவனங்களுள் ஒன்றுதான், கோர்டெஜ் மோட்டார் சைக்கிளை தயாரிக்கிறது.

எனினும் கோர்டெஜ் மோட்டார் சைக்கிளின் விலை குறித்த விபரங்கள் இன்னும் வெளியிடப்படவில்லை. ஆனால் ப்ரோட்டோடைப் (prototype) உடன் ஒப்பிடுகையில், உற்பத்தி செய்யப்படவுள்ள மோட்டார் சைக்கிள் சற்று வித்தியாசமாகதான் இருக்கும்.

ஜனாதிபதியின் பாதுகாப்பிற்காக ஏகே 47 துப்பாக்கி நிறுவனம் தயாரித்த புதிய பிரம்மாண்ட பைக்..

கோர்டெஜ் மோட்டார் சைக்கிளின் உற்பத்தி, அடுத்த ஆண்டில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனிடையே அமெரிக்க மார்க்கெட்டிலும், கோர்டெஜ் மோட்டார் சைக்கிள் விற்பனை செய்யப்படும் என கூறப்பட்டு வருகிறது.

டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்ட செய்திகள்

Most Read Articles
English summary
Russian President Vladimir Putin's New Escort Vehicle. Read in Tamil
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X