பைக்கை ஏலம் விட்டு கேரள மக்களுக்கு நிதி திரட்டும் ஆர்எக்ஸ் 100 படக்குழு.. திரையுலகில் நெகிழ்ச்சி..

ஆர்எக்ஸ் 100 படத்தில் வரும் பிரபலமான பைக்கை ஏலம் விட்டு, கேரள மக்களுக்கு நிதி திரட்டும் பணி நடைபெற்று வருகிறது. இந்த பணியில் ஆர்எக்ஸ் 100 படக்குழுவினர் ஈடுபட்டுள்ளனர்.

By Arun

ஆர்எக்ஸ் 100 படத்தில் வரும் பிரபலமான பைக்கை ஏலம் விட்டு, கேரள மக்களுக்கு நிதி திரட்டும் பணி நடைபெற்று வருகிறது. இந்த பணியில் ஆர்எக்ஸ் 100 படக்குழுவினர் ஈடுபட்டுள்ளனர். இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

பைக்கை ஏலம் விட்டு கேரள மக்களுக்கு நிதி திரட்டும் ஆர்எக்ஸ் 100 படக்குழு..

வரலாறு காணாத வகையில் பெய்த கனமழையின் காரணமாக ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு, கேரள மாநிலத்தில் பேரழிவை உண்டாக்கியிருக்கிறது. கடந்த 100 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு, மிக மோசமானதொரு வெள்ள பாதிப்பை சந்தித்துள்ளது கேரள மாநிலம்.

பைக்கை ஏலம் விட்டு கேரள மக்களுக்கு நிதி திரட்டும் ஆர்எக்ஸ் 100 படக்குழு..

கேரள மாநிலத்தில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக 350க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். பல்லாயிரக்கணக்கான கோடி ரூபாய் மதிப்புடைய பொருட்கள் சேதமடைந்துள்ளன. பலர் தங்களின் வீடுகளையும், உடைமைகளையும் இழந்து செய்வதறியாது தவித்து வருகின்றனர்.

பைக்கை ஏலம் விட்டு கேரள மக்களுக்கு நிதி திரட்டும் ஆர்எக்ஸ் 100 படக்குழு..

எனவே கேரள மக்களுக்கு உதவும் வகையில், பல்வேறு இடங்களில் இருந்தும் நிவாரண நிதி குவிந்து வருகிறது. திரையுலக நடிகர், நடிகைகள், அரசியல் கட்சியினர், தொழிலதிபர்கள் மட்டுமல்லாது, சாதாரண மக்களும் தங்களால் இயன்ற அளவு, கேரள மக்களுக்கு நன்கொடைகளை வழங்கி வருகின்றனர்.

பைக்கை ஏலம் விட்டு கேரள மக்களுக்கு நிதி திரட்டும் ஆர்எக்ஸ் 100 படக்குழு..

இந்தியாவின் பல்வேறு மாநில அரசுகளும், கேரளாவிற்கு நிவாரண நிதி அறிவித்துள்ளன. இந்தியா மட்டுல்ல. ஐக்கிய அரபு எமிரேட்ஸ் உள்பட உலகம் முழுவதும் உள்ள பல்வேறு நாடுகளில் இருந்தும் கேரள மக்களுக்கு உதவிக்கரம் நீட்டப்பட்டுள்ளது.

பைக்கை ஏலம் விட்டு கேரள மக்களுக்கு நிதி திரட்டும் ஆர்எக்ஸ் 100 படக்குழு..

இந்த சூழலில் குறைந்த பொருட்செலவில் எடுக்கப்பட்டு வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் பெரும் வெற்றி பெற்ற ஆர்எக்ஸ் 100 படத்தில் பயன்படுத்தப்பட்ட ஆர்எக்ஸ் 100 பைக்கை ஏலம் விட, அப்படக்குழுவினர் முடிவு செய்துள்ளனர். இதன்மூலம் கிடைக்கும் தொகை கேரளாவிற்கு வழங்கப்படும்.

பைக்கை ஏலம் விட்டு கேரள மக்களுக்கு நிதி திரட்டும் ஆர்எக்ஸ் 100 படக்குழு..

அஜய் பூபதி இயக்கத்தில், கார்த்திகேயா நடிப்பில் சமீபத்தில் வெளியாகி, சக்கை போடு போட்ட தெலுங்கு படம் ஆர்எக்ஸ் 100. இந்த படத்தின் மொத்த பட்ஜெட் வெறும் 4.2 கோடி ரூபாய்தான். ஆனால் பாக்ஸ் ஆபீஸில் 21 கோடி ரூபாய் வசூலை வாரி குவித்தது ஆர்எக்ஸ் 100.

பைக்கை ஏலம் விட்டு கேரள மக்களுக்கு நிதி திரட்டும் ஆர்எக்ஸ் 100 படக்குழு..

இந்த படத்தில் பயன்படுத்தப்பட்ட ஆர்எக்ஸ் 100 பைக்கை ஏலம் விடதான் படக்குழுவினர் முடிவு செய்துள்ளனர். இதன்மூலம் திரட்டப்படும் தொகையை, கேரள வெள்ள நிவாரண நிதிக்கு வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

பைக்கை ஏலம் விட்டு கேரள மக்களுக்கு நிதி திரட்டும் ஆர்எக்ஸ் 100 படக்குழு..

இந்த ஏலம் தொடர்பான விபரங்களை, ஆர்எக்ஸ் 100 படத்தின் ஹீரோ கார்த்திகேயா, டிவிட்டரில் வெளியிட்டுள்ளார். ஏலம் எடுக்க விரும்புபவர்கள் தங்களின் விபரங்கள் மற்றும் ஏலத்தொகையை [email protected] அல்லது 9100445588 என்ற வாட்ஸ் அப் எண்ணிற்கு அனுப்பலாம்.

பைக்கை ஏலம் விட்டு கேரள மக்களுக்கு நிதி திரட்டும் ஆர்எக்ஸ் 100 படக்குழு..

குறைந்தபட்ச ஏலத்தொகை 50,000 ரூபாய். ஒரு நல்ல காரியத்திற்காக, அதிக அளவு நன்கொடையை வழங்கும்படியும் கார்த்திகேயா கேட்டு கொண்டுள்ளார். இது தொடர்பாக டிவிட்டரில் அவர் வெளியிட்டுள்ள வீடியோவை நீங்கள் கீழே காணலாம்.

ஆர்எக்ஸ் 100 படம் விரைவில் தமிழில் ரீமேக் செய்யப்படும் என தகவல்கள் வெளியாகியுள்ளன. முன்னதாக கேரள முதல் அமைச்சரின் நிவாரண நிதிக்கு, டிவிஎஸ் குழுமம் 1 கோடி ரூபாய் நன்கொடை வழங்கியது குறிப்பிடத்தக்கது. அதற்கான காசோலை கேரள முதல்வர் பினராய் விஜயனிடம் வழங்கப்பட்டது.

பைக்கை ஏலம் விட்டு கேரள மக்களுக்கு நிதி திரட்டும் ஆர்எக்ஸ் 100 படக்குழு..

கேரள மாநிலத்தில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால், பல ஆயிரக்கணக்கான டூவீலர்களும், கார்களும் பாதிக்கப்பட்டுள்ளன. எனவே அவற்றை பழுது பார்ப்பதற்காக, சிறப்பு முகாம்களை நடத்த முன்னணி வாகன உற்பத்தி நிறுவனங்கள் முன்வந்துள்ளன.

டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்ட செய்திகள்

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
RX100 Movie Bike will be Auctioned for Kerala Flood Relief Fund. Read in Tamil
Story first published: Wednesday, August 22, 2018, 16:00 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X