ரூ.68,000 விலையில் புதிய சுஸுகி பர்க்மேன் ஸ்கூட்டர் விற்பனைக்கு அறிமுகம்!

மேக்ஸி ரக ஸ்டைலில் வடிவமைக்கப்பட்ட புதிய சுஸுகி பர்க்மேன் ஸ்ட்ரீட் 125 ஸ்கூட்டர் இன்று இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. தனித்துவமான இந்த ஸ்கூட்டரில் 8.5 பிஎச்பி பவரை வெளிப்படுத்தும

By Saravana Rajan

மேக்ஸி ரக ஸ்டைலில் வடிவமைக்கப்பட்ட புதிய சுஸுகி பர்க்மேன் ஸ்ட்ரீட் 125 ஸ்கூட்டர் இன்று இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த ஸ்கூட்டரின் விலை உள்ளிட்ட முக்கிய விபரங்களை இந்த செய்தியில் காணலாம்.

ரூ.68,000 விலையில் புதிய சுஸுகி பர்க்மேன் ஸ்கூட்டர் விற்பனைக்கு அறிமுகம்!

ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிக்கு வைக்கப்பட்டு இருந்த மேக்ஸி ரக ஸ்கூட்டர் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது. மேலும், சுஸுகி நிறுவனத்தின் பர்க்மேன் ஸ்ட்ரீட் வரிசையிலான மேக்ஸி ரக ஸ்கூட்டர்களில் விலை குறைவான மாடால்தான் இந்தியாவில் விற்பனைக்கு வந்துள்ளது.

ரூ.68,000 விலையில் புதிய சுஸுகி பர்க்மேன் ஸ்கூட்டர் விற்பனைக்கு அறிமுகம்!

ஐரோப்பிய நாடுகளில் பிரபலமான மேக்ஸி என்ற பிரம்மாண்டமான தோற்றத்திலான ஸ்கூட்டர்களை போன்று இந்த ஸ்கூட்டர் வடிவமைக்கப்பட்டு இருக்கிறது. குறிப்பாக, முன்புற அப்ரான் பகுதி பிரம்மாண்டமாகவும், மிரட்டலாகவும் இருக்கிறது. இந்த ஸ்கூட்டரில் எல்இடி ஹெட்லைட், எல்இடி டெயில் லைட்டுகள் கொடுக்கப்பட்டு இருக்கின்றன.

ரூ.68,000 விலையில் புதிய சுஸுகி பர்க்மேன் ஸ்கூட்டர் விற்பனைக்கு அறிமுகம்!

சுஸுகி இன்ட்ரூடெர் 150 க்ரூஸர் பைக்கில் இருப்பது போன்ற ஹேண்டில்பார் இடம்பெற்றுள்ளது. இருக்கை அகலமாகவும், அமர்ந்து செல்ல வசதியாகவும் இருக்கும். அதேபோன்று, ஃபுட்போர்டும் ஓட்டுனருக்கு சவுகரியமான அனுபவத்தை வழங்கும்.

ரூ.68,000 விலையில் புதிய சுஸுகி பர்க்மேன் ஸ்கூட்டர் விற்பனைக்கு அறிமுகம்!

சுஸுகி அக்செஸ் 125 ஸ்கூட்டரில் பயன்படுத்தப்படும் அதே 124.3சிசி எஞ்சின்தான் இந்த ஸ்கூட்டரிலும் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 8.5 பிஎச்பி பவரையும், 10.2 என்எம் டார்க் திறனையும் வழங்கும். சுஸுகி அக்செஸ் போன்றே இந்த ஸ்கூட்டரும் செயல்திறனில் சிறப்பாக இருக்கும் என்று ஆணித்தரமாக நம்பலாம்.

ரூ.68,000 விலையில் புதிய சுஸுகி பர்க்மேன் ஸ்கூட்டர் விற்பனைக்கு அறிமுகம்!

சுஸுகி ஜிக்ஸெர் பைக்கில் இருக்கும் அதே டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர் இந்த ஸ்கூட்டரில் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது. மொபைல் சார்ஜர், மல்டி ஃபங்ஷன் கீ ஸ்லாட் அமைப்பு ஆகியவை முக்கிய அம்சங்கள்.

ரூ.68,000 விலையில் புதிய சுஸுகி பர்க்மேன் ஸ்கூட்டர் விற்பனைக்கு அறிமுகம்!

இந்த ஸ்கூட்டரில் முன்புறத்தில் 12 அங்குல சக்கரமும், 10 அங்குல சக்கரமும் பொருத்தப்பட்டுள்ளன. இருசக்கரங்களிலும் ட்யூப்லெஸ் டயர்கள் பொருத்தப்பட்டு இருப்பது கூடுதல் பாதுகாப்பு அம்சமாக கூறலாம்.

ரூ.68,000 விலையில் புதிய சுஸுகி பர்க்மேன் ஸ்கூட்டர் விற்பனைக்கு அறிமுகம்!

முன்புறத்தில் டெலிஸ்கோப்பிக் ஃபோர்க்குகளும், பின்புறத்தில் மோனோ ஷாக் அப்சார்பரும் பொருத்தப்பட்டு இருக்கின்றன. அதேபோன்று, முன்சக்கரத்தில் டிஸ்க் பிரேக்கும், பின்சக்கரத்தில் டிரம் பிரேக்கும் பொருத்தப்பட்டுள்ளன.

ரூ.68,000 விலையில் புதிய சுஸுகி பர்க்மேன் ஸ்கூட்டர் விற்பனைக்கு அறிமுகம்!

இந்த ஸ்கூட்டர் 108 கிலோ எடை கொண்டது. இதில், 5.6 லிட்டர் கொள்திறன் கொண்ட பெட்ரோல் டேங்க் பொருத்தப்பட்டுள்ளது. மெயின்டனென்ஸ் ஃப்ரீ பேட்டரி கொடுக்கப்பட்டு இருக்கிறது. இந்த ஸ்கூட்டர் கருப்பு, வெள்ளை மற்றும் சாம்பல் வண்ணங்களில் கிடைக்கும்.

ரூ.68,000 விலையில் புதிய சுஸுகி பர்க்மேன் ஸ்கூட்டர் விற்பனைக்கு அறிமுகம்!

ரூ.68,000 டெல்லி எக்ஸ்ஷோரூம் விலையில் புதிய சுஸுகி பர்க்மேன் ஸ்ட்ரீட் ஸ்கூட்டர் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. கல்லூரி மாணவர்கள், இளம் பணியாளர்களை இலக்காக கொண்டு விற்பனைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. மேலும், 125 சிசி மார்க்கெட்டில் சற்றே பிரிமியம் அம்சங்களை பெற்ற மாடலாகவும் இருக்கிறது.

ரூ.68,000 விலையில் புதிய சுஸுகி பர்க்மேன் ஸ்கூட்டர் விற்பனைக்கு அறிமுகம்!

புதிய சுஸுகி பர்க்மேன் ஸ்ட்ரீட் 125 ஸ்கூட்டர் இந்தியாவில் டிவிஎஸ் என்டார்க் 125, ஹோண்டா க்ரேஸியா உள்ளிட்ட ஸ்கூட்டர் மாடல்களுடன் போட்டி போடும். ஸ்கூட்டரின் ஒட்டுமொத்த டிசைனும் வித்தியாசமாகவும், இந்திய மார்க்கெட்டிற்கு சற்று புதுமையாகவும் இருக்கிறது. இந்தியாவிலிருந்து 30 வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்பட இருக்கிறது.

More from DriveSpark

Article Published On: Thursday, July 19, 2018, 13:24 [IST]
English summary
All new Suzuki burgman street 125 scooter launched in India.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+