புதிய சுஸுகி பர்க்மேன் ஸ்ட்ரீட் அறிமுக தேதி விபரம் வெளியானது!
கடந்த பிப்ரவரியில் நடந்த சர்வதேச ஆட்டோ எக்ஸ்போவில் சுஸுகி பர்க்மேன் ஸ்ட்ரீட் என்ற மேக்ஸி ரக ஸ்கூட்டர் மாடல் காட்சிப்படுத்தப்பட்டது. ஐரோப்பிய நாடுகளில் பிரபலமான மேக்ஸி என்ற வித்தியாசமான ஸ்டைலில் வடிவமை
மேக்ஸி ரக ஸ்கூட்டர் ஸ்டைலில் வரும் புதிய சுஸுகி பர்க்மேன் ஸ்ட்ரீட் ஸ்கூட்டர் அறிமுக தேதி விபரம் வெளியாகி இருக்கிறது. அதன் விபரங்களை இந்த செய்தியில் காணலாம்.

கடந்த பிப்ரவரியில் நடந்த சர்வதேச ஆட்டோ எக்ஸ்போவில் சுஸுகி பர்க்மேன் ஸ்ட்ரீட் என்ற மேக்ஸி ரக ஸ்கூட்டர் மாடல் காட்சிப்படுத்தப்பட்டது. ஐரோப்பிய நாடுகளில் பிரபலமான மேக்ஸி என்ற வித்தியாசமான ஸ்டைலில் வடிவமைக்கப்பட்ட இந்த ஸ்கூட்டர் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது.

மேலும், எப்போது விற்பனைக்கு வரும் என்ற எதிர்பார்ப்பும் அதிகரித்தது. இந்த நிலையில், வரும் 19ந் தேதி புதிய சுஸுகி பர்க்மேன் ஸ்ட்ரீட் ஸ்கூட்டர் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

மேக்ஸி ரகத்திற்கு ஏற்றவாறு முன்புறம் மிக பிரம்மாண்டமாக இருக்கிறது. எல்இடி ஹெட்லைட், தனித்துவமான ஹேண்டில்பார் அமைப்பு கொடுக்கப்பட்டு இருக்கிறது. இந்த புதிய ஸ்கூட்டரில் பிரம்மாண்டத்திற்கு இணையாக வசதியான அகலமான இருக்கை அமைப்பு இருக்கிறது.

பின் இருக்கை பயணி பிடித்துக் கொள்வதற்கு வசதியாக, சிறப்பான கிராப் ரெயில் கைப்பிடி கொடுக்கப்பட்டு இருக்கிறது. இந்த ஸ்கூட்டரில் எல்இடி டெயில் லைட்டுகள் உள்ளன. மொத்தத்தில் வசீகரமான மாடலாக இருக்கும்.

இந்த ஸ்கூட்டரில் முழுவதும் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர் இடம்பெற்றுள்ளது. சுஸுகி ஜிக்ஸெர் பைக்கில் இடம்பெற்றிருக்கும் அதே டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர்தான் இது. இருக்கைக்கு கீழே அதிக இடவசதியுடன் ஸ்டோரேஜ் வசதி உள்ளது. மொபைல் சார்ஜர், சுஸுகி ஜிக்ஸெர் பைக்கில் இருப்பது போன்ற புகைப்போக்கி குழாய் அமைப்பு ஆகியவை முக்கிய அம்சங்கள்.

வெளிநாடுகளில் சுஸுகி பர்க்மேன் ஸ்கூட்டர் 125சிசி எஞ்சின் முதல் 600சிசி திறன் வரையிலான எஞ்சின் ஆப்ஷன்களில் மிக சக்திவாய்ந்த ஸ்கூட்டர் மாடலாக விற்பனை செய்யப்படுகிறது. இந்தியாவில் 125சிசி ரக மாடலாக வருகிறது. இந்த ஸ்கூட்டரில் இருக்கும் எஞ்சின் 124.3சிசி அதிகபட்சமாக 8.5 பிஎச்பி பவரையும், 10.2 என்எம் டார்க் திறனையும் வழங்கும்.

புதிய சுஸுகி பர்க்மேன் ஸ்ட்ரீட் ஸ்கூட்டரில் முன்புறத்தில் டெலிஸ்கோப்பிக் ஃபோர்க்குகளும், பின்புறத்தில் மோனோ ஷாக் அப்சார்பரும் பொருத்தப்பட்டு இருக்கின்றன. 10 அங்குல அராய் வீல்கள் இடம்பெற்றுள்ளன. முன்புறத்தில் டிஸ்க் பிரேக் சிஸ்டமும், பின்புறத்தில் டிரம் பிரேக் சிஸ்டமும் பொருத்தப்பட்டு இருக்கின்றன.

ஐரோப்பாவின் மேக்ஸி ரக ஸ்கூட்டர்களின் டிசைன் அம்சங்களை தழுவி, புதிய சுஸுகி பர்க்மேன் ஸ்ட்ரீட் ஸ்கூட்டர் இந்தியாவுக்காக பிரத்யேக அம்சங்களுடன் வடிவமைக்கப்பட்டு இருக்கிறது. எனவே, இந்திய வாடிக்கையாளர்களின் கவனத்தை ஈர்க்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

புதிய சுஸுகி பர்க்மேன் ஸ்ட்ரீட் ஸ்கூட்டர் ரூ.65,000 முதல் ரூ.70,000 எக்ஸ்ஷோரூம் ஆரம்ப விலையில் எதிர்பார்க்கப்படுகிறது. ஹோண்டா கிரேஸியா, ஏப்ரிலியா எஸ்ஆர்125 மற்றும் டிவிஎஸ் என்டார்க் 125 ஸ்கூட்டர் மாடல்களுடன் போட்டி போடும்.


Click it and Unblock the Notifications








