புதிய சுஸுகி பர்க்மேன் 125 ஸ்கூட்டர் அறிமுக விபரம் வெளியானது!!
பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கும் சுஸுகி பர்க்மேன் 125 ஸ்கூட்டர், வரும் மே மாத இறுதியில் அல்லது ஜூன் மாத துவக்கத்தில் இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வரப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்க
பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கும் சுஸுகி பர்க்மேன் 125 மேக்ஸி ரக ஸ்கூட்டரின் அறிமுக விபரம் குறித்து தகவல் வெளியாகி இருக்கிறது.

ஆட்டோ எக்ஸ்போவிற்கு வந்த பார்வையாளர்கள் மட்டுமின்றி, இந்திய அளவில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. ஏனெனில், மேக்ஸி ரக தோற்றம் போன்று வடிவமைக்கப்பட்ட வித்தியாசமான ஸ்கூட்டர் என்பதே காரணம்.

இந்த நிலையில், இந்த ஸ்கூட்டர் வரும் மே மாத இறுதியில் அல்லது ஜூன் மாத துவக்கத்தில் இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வரப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.

சுஸுகி பர்க்மேன் ஸ்கூட்டரில் 124.3சிசி எஞ்சின் பொருத்தப்பட்டு இருக்கிறது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 8.5 பிஎச்பி பவரையும், 10.2 என்எம் டார்க் திறனையும் வழங்க வல்லது. ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் கொண்டது. சுஸுகி ஆக்செஸ் ஸ்கூட்டர் போன்று செயல்திறனிலும் சிறப்பாக இருக்கும்.

எல்இடி ஹெட்லைட்டுகள், டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர், எல்இடி டெயில் லைட் க்ளஸ்ட்டர், தனித்துவமான முன்பக்க வடிவமைப்பு, பெரிய இருக்கை போன்றவை இந்த ஸ்கூட்டரின் முக்கிய அம்சங்களாக இருக்கும்.

முன்சக்கரத்தில் டிஸ்க் பிரேக், வெளிப்புறத்தில் புகைபோக்கி அமைப்பு, வசதியான புட்ரெஸ்ட் அமைப்பு ஆகியவையும் இதனை வேறுபடுத்துகிறது. இந்த ஸ்கூட்டரில் முன்புறத்தில் டெலிஸ்கோப்பிக் ஃபோர்க்குகளும், பின்புறத்தில் சிங்கிள் ஷாக் அப்சார்பரும் பொருத்தப்பட்டு இருக்கிறது. முன்சக்கரம் 12 அங்குல விட்டமும், பின்சக்கரம் 10 அங்குல விட்டமும் கொண்டதாக இருக்கின்றன.

புதிய சுஸுகி பர்க்மேன் ஸ்கூட்டர் ரூ.70,000 எக்ஸ்ஷோரூம் விலையில் எதிர்பார்க்கப்படுகிறது. டிவிஎஸ் என்டார்க், ஹோண்டா க்ரேஸியா, அப்ரிலியா எஸ்ஆர்125 ஆகிய மாடல்களுக்கு போட்டியாக இருக்கும்.


Click it and Unblock the Notifications








