சுஸுகி பர்க்மேன் ஸ்ட்ரீட் 125 ஸ்கூட்டரின் விலை விபரம் கசிந்தது!

சுஸுகி பர்க்மேன் ஸ்ட்ரீட் 125 ஸ்கூட்டர் வரும் 19ந் தேதி விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. ஐரோப்பிய நாடுகளில் பிரபலமான மேக்ஸி ரக ஸ்டைலில் வர இருக்கும் இந்த புதிய ஸ்கூட்டர் இந்தியர்களை கவரும் எ

By Saravana Rajan

மேக்ஸி ஸ்டைலில் வர இருக்கும் புதிய சுஸுகி பர்க்மேன் ஸ்ட்ரீட் 125 ஸ்கூட்டரின் விலை விபரம் கசிந்துள்ளது. அதன் விபரங்களை இந்த செய்தியில் காணலாம்.

சுஸுகி பர்க்மேன் ஸ்ட்ரீட் 125 ஸ்கூட்டரின் விலை விபரம் கசிந்தது!

ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிக்கு வைக்கப்பட்டு இருந்த சுஸுகி பர்க்மேன் ஸ்ட்ரீட் 125 ஸ்கூட்டர் வரும் 19ந் தேதி விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. ஐரோப்பிய நாடுகளில் பிரபலமான மேக்ஸி ரக ஸ்டைலில் வர இருக்கும் இந்த புதிய ஸ்கூட்டர் இந்தியர்களை கவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சுஸுகி பர்க்மேன் ஸ்ட்ரீட் 125 ஸ்கூட்டரின் விலை விபரம் கசிந்தது!

இந்த நிலையில், இந்த புதிய ஸ்கூட்டருக்கு மும்பையில் ரூ.69,671 எக்ஸ்ஷோரூம் விலை நிர்ணயிக்கப்பட்டு இருப்பதாக தகவல் கசிந்துள்ளது. ரூ.81,000 ஆன்ரோடு விலையில் இந்த ஸ்கூட்டர் அங்கு விற்பனை செய்யப்பட இருக்கிறது.

சுஸுகி பர்க்மேன் ஸ்ட்ரீட் 125 ஸ்கூட்டரின் விலை விபரம் கசிந்தது!

வெளிநாடுகளில் சுஸுகி பர்க்மேன் ஸ்கூட்டர் 125சிசி முதல் 600சிசி திறன் வரையிலான எஞ்சின் பொருத்தப்பட்ட மாடல்களில் கிடைக்கிறது. இந்தியாவில் ஆரம்ப ரக மாடலான 125சிசி மாடல் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.

சுஸுகி பர்க்மேன் ஸ்ட்ரீட் 125 ஸ்கூட்டரின் விலை விபரம் கசிந்தது!

சுஸுகி அக்செஸ் 125 ஸ்கூட்டரில் பயன்படுத்தப்படும் அதே 125சிசி எஞ்சின்தான் இந்த புதிய ஸ்கூட்டரிலும் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 8.5 பிஎச்பி பவரையும், 10.2 என்எம் டார்க் திறனையும் வழங்க வல்லது.

சுஸுகி பர்க்மேன் ஸ்ட்ரீட் 125 ஸ்கூட்டரின் விலை விபரம் கசிந்தது!

சுஸுகி பர்க்மேன் ஸ்ட்ரீட் 125 ஸ்கூட்டர் பிரிமியம் மாடலாக வர இருக்கிறது. எல்இடி ஹெட்லைட், அகலமான முன்புற அப்ரான் பகுதி உள்பட வித்தியாசமான ஸ்டைலில் இருக்கிறது. அகலமான இருக்கைகள் வசதியாக பயணிக்க உதவும். பின்னால் அமர்பவருக்கும் இருக்கை வசதியாக இருக்கிறது.

சுஸுகி பர்க்மேன் ஸ்ட்ரீட் 125 ஸ்கூட்டரின் விலை விபரம் கசிந்தது!

இந்த ஸ்கூட்டரில் எல்இடி டெயில் லைட்டுகள் கொடுக்கப்பட்டு இருக்கின்றன. மேலும், ஒட்டுமொத்த ஸ்கூட்டரின் டிசைனும் வித்தியாசமாகவும், இந்திய மார்க்கெட்டிற்கு சற்று புதுமையாகவும் இருக்கிறது.

சுஸுகி பர்க்மேன் ஸ்ட்ரீட் 125 ஸ்கூட்டரின் விலை விபரம் கசிந்தது!

சுஸுகி ஜிக்ஸெர் பைக்கில் இருக்கும் அதே டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர்தான் இந்த ஸ்கூட்டரில் கொடுக்கப்பட்டு இருக்கிறது. இந்த ஸ்கூட்டரில் அதிக ஸ்டோரேஜ் இடவசதி, மொபைல்சார்ஜர், அகலமான ஃபுட்போர்டு ஆகியவை முக்கியமான அம்சங்கள்.

சுஸுகி பர்க்மேன் ஸ்ட்ரீட் 125 ஸ்கூட்டரின் விலை விபரம் கசிந்தது!

இந்த ஸ்கூட்டரில் டெலிஸ்கோப்பிக் ஃபோர்க்குகளும், பின்புறத்தில் மோனோ ஷாக் அப்சார்பரும் பொருத்தப்பட்டு இருக்கின்றன. இந்த ஸ்கூட்டரில் முன்புறத்தில் 12 அங்குல சக்கரமும், பின்புறத்தில் 10 அங்குல சக்கரமும் பொருத்தப்பட்டு இருக்கின்றன.

சுஸுகி பர்க்மேன் ஸ்ட்ரீட் 125 ஸ்கூட்டரின் விலை விபரம் கசிந்தது!

புதிய சுஸுகி பர்க்மேன் ஸ்ட்ரீட் 125 ஸ்கூட்டர் இந்தியாவில் டிவிஎஸ் என்டார்க் 125, ஹோண்டா க்ரேஸியா உள்ளிட்ட ஸ்கூட்டர் மாடல்களுடன் போட்டி போடும்.

Source: BikeWale

More from DriveSpark

Article Published On: Thursday, July 12, 2018, 17:46 [IST]
English summary
Japanese two-wheeler maker Suzuki is all set to launch the Burgman Street scooter in the Indian market on July 19, 2018. Ahead of that the price of the scooter has been revealed. BikeWale reports that the Suzuki Burgman Street will be priced at Rs 69,671 ex-showroom (Mumbai).
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+