சுஸுகி ஜிக்ஸெர் 250 பைக்கின் இந்திய வருகை விபரம்!

சுஸுகி ஜிக்ஸெர் 250 பைக்கின் இந்திய வருகை குறித்த விபரங்கள் வெளியாகி இருக்கின்றன. அதன் விபரங்களை இந்த செய்தியில் காணலாம்.

சுஸுகி ஜிக்ஸெர் 250 பைக்கின் இந்திய வருகை விபரம்!

கேடிஎம் பைக்குகளை போன்றே, சுஸுகி ஜிக்ஸெர் வரிசையிலான பைக் மாடல்கள் இந்திய இளைஞர்களை வெகுவாக ஈர்த்துள்ளது. இந்த 150சிசி பைக் டிசைன் மற்றும் செயல்திறன் மிக்க எஞ்சின் சிறப்பாக இருப்பதுடன் சரியான பட்ஜெட்டில் கிடைப்பதும் முக்கிய காரணமாக அமைந்துள்ளது.

சுஸுகி ஜிக்ஸெர் 250 பைக்கின் இந்திய வருகை விபரம்!

இந்த சூழலில், வெளிநாடுகளில் விற்பனையில் இருக்கும் சுஸுகி ஜிஎஸ்எக்ஸ் 250ஆர் பைக் இந்தியாவில் ஜிக்ஸெர் பிராண்டில் அறிமுகம் செய்யப்பட இருப்பதாக தகவல்கள் தொடர்ந்து வெளியாகி வருகின்றன.

சுஸுகி ஜிக்ஸெர் 250 பைக்கின் இந்திய வருகை விபரம்!

பைக் இந்தியா தளம் வெளியிட்டு இருக்கும் தகவல்களிபடி, அடுத்த ஆண்டு மத்தியில் இந்த பைக் இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வரப்பட இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது ஆரம்ப ரக ஸ்போர்ட்ஸ் பைக்குகளை வாங்க காத்திருப்போருக்கும், பைக் பிரியர்களுக்கும் மகிழ்ச்சி தரும் செய்தியாக அமைந்துள்ளது.

Recommended Video

மஹிந்திரா அல்டுராஸ் ஆஃப் ரோடு டிரைவ் - முதல் அபிப்ராயம்
சுஸுகி ஜிக்ஸெர் 250 பைக்கின் இந்திய வருகை விபரம்!

சுஸுகி ஜிக்ஸெர் 250 என்ற பெயரில் இந்த புதிய மாடல் வர இருப்பதாக தகவல்கள் கூறுகின்றன. சுஸுகி ஜிஎஸ்எக்ஸ் 250ஆர் பைக்கில் இரட்டை சிலிண்டர் கொண்ட லிக்யூடு கூல்டு எஞ்சின் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது. இரட்டை சிலிண்டர் விரும்பிகளுக்கு மிகச் சரியான தேர்வாக இருக்கும்.

சுஸுகி ஜிக்ஸெர் 250 பைக்கின் இந்திய வருகை விபரம்!

இந்த பைக்கில் இரண்டு சக்கரங்களிலும் டிஸ்க் பிரேக் சிஸ்டம் மற்றும் டியூவல் சேனல் ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம் கொடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வெளிநாடுகளில் இந்த பைக்கின் முன்புறத்தில் இன்வர்டெட் டெலிஸ்கோப்பிக் ஃபோர்க்குகள் பயன்படுத்தப்பட்டுள்ளன. ஆனால், இந்தியாவில் சாதாரண ஃபோர்க்குகள் பயன்படுத்தப்படும்.

சுஸுகி ஜிக்ஸெர் 250 பைக்கின் இந்திய வருகை விபரம்!

சுஸுகி ஜிக்ஸெர் மற்றும் ஜிக்ஸெர் எஸ்எஃப் பைக் மாடல்கள் போன்றே ஜிக்ஸெர் 250சிசி மாடலும் நேக்கட் மற்றும் முழுமையான ஃபேரிங் பேனல்கள் கொண்ட ஸ்போர்ட்ஸ் பைக் மாடல்களில் விற்பனைக்கு கொண்டுவரப்படும். யமஹா எஃப்இசட் 25, கேடிஎம் 250 ட்யூக் உள்ளிட்ட பைக் மாடல்களுடன் போட்டி போடும்.

More from DriveSpark

Article Published On: Tuesday, November 27, 2018, 11:06 [IST]
English summary
Suzuki Motorcycles India are planning to introduce the Gixxer 250 in the country soon. According to Bike India, the Suzuki Gixxer 250 will be launched in the Indian market, sometime in mid-2019.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+