ப்யூவல் இன்ஜெக்ஷன் எஞ்சினுடன் புதிய சுஸுகி இன்ட்ரூடெர் 150 பைக் விற்பனைக்கு அறிமுகம்!
புதிய சுஸுகி இன்ட்ரூடெர் 150 பைக்கின் ஃப்யூவல் இன்ஜெக்ஷன் மாடல் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. விரிவானத் தகவல்களை இந்த செய்தியில் காணலாம்.
ஃப்யூவல் இன்ஜெக்ஷன் எஞ்சினுடன் புதிய சுஸுகி இன்ட்ரூடெர் 150 பைக் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. கூடுதல் விபரங்களை இந்த செய்தியில் காணலாம்.

கடந்த மாதம் நடந்த சர்வதேச ஆட்டோ எக்ஸ்போவில் சுஸுகி இன்ட்ரூடெர் 150 பைக்கின் ஃப்யூவல் இன்ஜெக்ஷன் சிஸ்டம் மாடல் பார்வைக்கு கொண்டு வரப்பட்டது. இந்த நிலையில், இந்த புதிய மாடலின் அதிகாரப்பூர்வ விலை விபரம் வெளியிடப்பட்டு இருக்கிறது.

புதிய சுஸுகி இன்ட்ரூடெர் 150 பைக்கின் ஃப்யூவல் இன்ஜெக்ஷன் எஞ்சின் பொருத்தப்பட்ட மாடல் ரூ.1.06 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது.

கார்புரேட்டர் எஞ்சின் பொருத்தப்பட்ட மாடல் ரூ.99,995 விலையில் விற்பனை செய்யப்படும் நிலையில், இந்த் புதிய மாடல் ரூ.7,000 கூடுதல் விலையில் விற்பனைக்கு வந்துள்ளது.

கார்புரேட்டர் மாடலுக்கும், ஃப்யூவல் இன்ஜெக்ஷன் மாடலுக்கும் தோற்றத்தில் எந்த விதமான வித்தியாசங்கள் இல்லை. எஞ்சின் மட்டுமே வித்தியாசப்படுகிறது.

புதிய சுஸுகி இன்ட்ரூடெர் பைக்கில் இருக்கும் 154.9சிசி எஞ்சின் அதிகபட்சமாக 14 பிஎச்பி பவரையும், 14 என்எம் டார்க் திறனையும் வழங்கும். இந்த எஞ்சின் 5 ஸ்பீடு கியர்பாக்ஸுடன் இணைக்கப்பட்டு இருக்கிறது.

சுஸுகி நிறுவனத்தின் நவீன தொழில்நுட்பத்திலான ஃப்யூவல் இன்ஜெக்ஷன் சிஸ்டம் கொடுக்கப்பட்டு இருக்கிறது. சிறப்பான எரிசக்தி கிடைப்பதற்கு ஏதுவாக எவ்வளவு எரிபொருள் தேவை வேண்டும் என்பதை 6 சென்சார்கள் உதவியுடன் இதன் இசியூ சாதனம் கணக்கிட்டு துல்லியமாக எரிபொருளை செலுத்தும். இதனால், மிகச் சிறப்பான எரிபொருள் சிக்கனத்தையும், செயல்திறனையும் வழங்கும்.

புதிய சுஸுகி இன்ட்ரூடெர் 150 பைக்கில் புரொஜெக்டர் ஹெட்லைட், பொசிஷன் லேம்ப், டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர், எல்இடி டெயில் லைட், ட்யூவல் போர்ட் சைலென்சர் மஃப்ளர், பக்கெட் சீட் போன்றவை மிக முக்கிய சிறப்பம்சங்கள்.

இந்த பைக்கில் முன்புறத்தில் டெலிஸ்கோப்பிக் சஸ்பென்ஷனும், பின்புறத்தில் மோனோஷாக் அப்சார்பரும் பொருத்தப்பட்டு இருக்கின்றன. இந்த பைக்கின் இரு சக்கரங்களிலும் டிஸ்க் பிரேக் பொருத்தப்பட்டு இருப்பதுடன், முன்சக்கரத்திற்கு சிங்கிள் சேனல் ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டமும் கொடுக்கப்பட்டு இருக்கிறது.

புதிய சுஸுகி இன்ட்ரூடெர் 150 ஃப்யூவல் இன்ஜெக்ஷன் மாடலானது, கார்புரேட்டர் மாடலைவிட சிறப்பான எரிபொருள் சிக்கனம் மற்றும் சீரான செயல்திறனையும் வழங்கும். அதேநேரத்தில், இரண்டு மாடலுக்கும் பவரை வெளிப்படுத்தும் திறனில் மாற்றம் இல்லை.

புதிய சுஸுகி இன்ட்ரூடெர் 150 ஃப்யூவல் இன்ஜெக்ஷன் மாடலானது மெட்டாலிக் ஊர்ட்/ மெட்டாலிக் மேட் பிளாக் நம்பர்2 என்ற ஒரு வண்ணக் கலவையிலும், க்ளாஸ் ஸ்பார்க்கிள் பிளாக்/ மெட்டாலிக் மேட் டைட்டானியம் சில்வர் என்ற மற்றொரு வண்ணக் கலவையிலும் கிடைக்கிறது.

புதிய சுஸுகி இன்ட்ரூடெர் 150 ஃப்யூவல் இன்ஜெக்ஷன் மாடலானது பஜாஜ் அவென்ஜர் ஸ்ட்ரீட் 180, அவென்ஜர் ஸ்ட்ரீட் 220 மற்றும் அவென்ஜர் க்ரூஸ் 220 ஆகிய பைக் மாடல்களுடன் போட்டி போடும். ஆனால், பஜாஜ் அவென்ஜர் வரிசை மாடல்களில் ஃப்யூவல் இன்ஜெக்ஷன் எஞ்சின் மாடல் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications








