இந்திய இளைஞர்களுக்கு பொருத்தமான க்ரூஸர் பைக்... அமர்க்களப்படுத்தும் சுஸுகி இன்ட்ரூடர்...

சுஸுகி நிறுவனம் அறிமுகம் செய்துள்ள இன்ட்ரூடர் பைக், இந்திய இளைஞர்களை கவர்ந்திழுத்து வருகிறது. இதன் அட்டகாசமான சிறப்பம்சங்கள் உங்களையும் ஈர்க்கலாம்.

இன்ட்ரூடர் (Intruder) பைக்கை விற்பனைக்கு அறிமுகம் செய்ததன் மூலமாக, இந்திய மார்க்கெட்டின் க்ரூஸர் (Cruiser) பைக் செக்மெண்ட்டில் அடியெடுத்து வைத்துள்ளது சுஸுகி நிறுவனம். 150 சிசி செக்மெண்ட்டில், ஸ்டைலான மற்றும் சௌகரியமான க்ரூஸர் பைக்தான் சுஸுகி இன்ட்ரூடர்.

இந்திய இளைஞர்களுக்கு பொருத்தமான க்ரூஸர் பைக்... அமர்க்களப்படுத்தும் சுஸுகி இன்ட்ரூடர்...

இதன் ஒட்டுமொத்த டிசைன் முழுவதும், மிகப்பெரிய இன்ட்ரூடர் பைக்கான எம்1800ஆர் (M1800R) பைக்கை அடிப்படையாக கொண்டது. இன்ட்ரூடரை தவிர்த்து விட்டு பார்த்தாலும், இந்திய மார்க்கெட்டிற்கான சுஸுகி நிறுவனத்தின் போர்ட்ஃபோலியோ மிகப்பெரியதாகவே உள்ளது.

இந்திய இளைஞர்களுக்கு பொருத்தமான க்ரூஸர் பைக்... அமர்க்களப்படுத்தும் சுஸுகி இன்ட்ரூடர்...

ஏனெனில் இன்ட்ரூடர் தவிர, ஹயாட்டே கம்யூட்டர் மோட்டார் சைக்கிள், ப்ரீமியம் 150 சிசி ஜிக்ஸெர் சீரிஸ் பைக்குகளையும் சுஸுகி விற்பனை செய்து வருகிறது. அத்துடன் 125 சிசி ஸ்கூட்டர் செக்மெண்ட்டில் அக்ஸெஸ், பர்க்மான் ஸ்ட்ரீட் ஆகிய ஸ்கூட்டர்கள் சுஸுகி நிறுவனத்தால் விற்பனை செய்யப்படுகின்றன.

இந்திய இளைஞர்களுக்கு பொருத்தமான க்ரூஸர் பைக்... அமர்க்களப்படுத்தும் சுஸுகி இன்ட்ரூடர்...

ஆனால் இந்த கூட்டத்தில் இருந்து இன்ட்ரூடர் மட்டும் தனித்து தெரிகிறது. இதற்கு மிக முக்கியமான காரணம் அதன் வித்தியாசமான ஸ்டைல்தான். முக்கோண வடிவில் உள்ள ஹெட்லேம்ப் உடன் இன்ட்ரூடர் பைக்கின் முன்பகுதி டிசைன் மிக பெரியதாகவும், மிரட்டலாகவும் காட்சியளிக்கிறது.

இந்திய இளைஞர்களுக்கு பொருத்தமான க்ரூஸர் பைக்... அமர்க்களப்படுத்தும் சுஸுகி இன்ட்ரூடர்...

இன்ட்ரூடர் பைக்கின் ஹெட்லேம்ப்க்கு மேலே முகப்புதாங்கி எனப்படும் கவுல் (Cowl) ஒன்றை சுஸுகி வழங்கியுள்ளது. இன்ட்ரூடர் பைக்கில் ஏராளமான ஹைலைட்கள் உள்ளன. இந்த பைக்கின் மிரட்டலான மஸ்குலர் ப்யூயல் டேங்க் (Muscular Fuel Tank) அப்படியான ஹைலைட்களில் ஒன்று.

இந்திய இளைஞர்களுக்கு பொருத்தமான க்ரூஸர் பைக்... அமர்க்களப்படுத்தும் சுஸுகி இன்ட்ரூடர்...

அகலமான ஹேண்டில்பார்கள், முன்பகுதியில் இரண்டு கால்களையும் வைத்து கொள்வதற்கான ஃபுட்பெக்ஸ், சௌகரியமாக அமர்ந்து ஓட்டுவதற்கு ஏதுவாக தாழ்வாக அமைக்கப்பட்டுள்ள இருக்கை ஆகியவை இன்ட்ரூடர் பைக்கிற்கு கூடுதல் சிறப்பை சேர்க்கின்றன.

இந்திய இளைஞர்களுக்கு பொருத்தமான க்ரூஸர் பைக்... அமர்க்களப்படுத்தும் சுஸுகி இன்ட்ரூடர்...

இன்ட்ரூடர் பைக்கின் ரைடிங் பொஷிஷன் மிக சௌகரியமாக இருப்பது, அதன் மற்றொரு ஹைலைட். க்ரூஸர் பைக்குகளுக்கு உண்டான வகையில், ரைடிங் பொஷிஷனை மிக சிறப்பான முறையில் வடிவமைத்துள்ளது சுஸுகி நிறுவனம்.

இந்திய இளைஞர்களுக்கு பொருத்தமான க்ரூஸர் பைக்... அமர்க்களப்படுத்தும் சுஸுகி இன்ட்ரூடர்...

இன்ட்ரூடர் பைக்கின் பின்பகுதியும் அட்டகாசமாக இருக்கிறது. இதில், டியூயல் போர்ட் மஃப்ளர் (Dual-port Exhaust Muffler) கொண்ட சைலென்சர், ஸ்டைலான பின் பக்க கவுல், நேர்த்தியான டெயில் லைட் (Tail Light) ஆகியவை குறிப்பிடத்தகுந்தவை ஆகும்.

இந்திய இளைஞர்களுக்கு பொருத்தமான க்ரூஸர் பைக்... அமர்க்களப்படுத்தும் சுஸுகி இன்ட்ரூடர்...

இன்ஜின் பெல்லி பேன் (Engine Belly Pan), க்ரோம் ரியர் வியூ மிரர்ஸ் (Chrome Rear-view Mirrors) ஆகியவற்றையும் இன்ட்ரூடர் பைக் பெற்றுள்ளது. ஒட்டுமொத்த டிசைனிற்கு இவை கூடுதல் சிறப்பை சேர்க்கின்றன.

இந்திய இளைஞர்களுக்கு பொருத்தமான க்ரூஸர் பைக்... அமர்க்களப்படுத்தும் சுஸுகி இன்ட்ரூடர்...

இன்ட்ரூடர் பைக்கில் பொருத்தப்பட்டுள்ள 154.9 சிசி ஏர் கூல்டு ப்யூயல் இன்ஜெக்டட் சிங்கிள் சிலிண்டர் இன்ஜின், 8,000 ஆர்பிஎம்மில் 14.5 பிஎச்பி பவரையும், 6,000 ஆர்பிஎம்மில் 14 என்எம் டார்க் திறனையும் உருவாக்கும் சக்தி வாய்ந்தது.

இந்திய இளைஞர்களுக்கு பொருத்தமான க்ரூஸர் பைக்... அமர்க்களப்படுத்தும் சுஸுகி இன்ட்ரூடர்...

இன்ட்ரூடர் பைக்கில், 5 ஸ்பீடு கியர் பாக்ஸ் வழங்கப்பட்டுள்ளது. இதில், சுஸுகி எகோ பெர்ஃபார்மென்ஸ் (Suzuki Eco Performance-SEP) என்ற தொழில்நுட்பம் வழங்கப்பட்டுள்ளது. குறைவான எரிபொருள் நுகர்விற்கு இந்த தொழில்நுட்பம் உதவி செய்யும்.

இந்திய இளைஞர்களுக்கு பொருத்தமான க்ரூஸர் பைக்... அமர்க்களப்படுத்தும் சுஸுகி இன்ட்ரூடர்...

அத்துடன் ஆக்ஸலரேஷனும் மிக சிறப்பாக இருக்கும். முன்பகுதி, பின்பகுதி என இரண்டு சக்கரங்களிலும் டிஸ்க் பிரேக்குகள் வழங்கப்பட்டுள்ளன. இதுதவிர முன்பகுதியில் சிங்கிள் சேனல் ஏபிஎஸ் வசதியும் வழங்கப்பட்டுள்ளது.

இந்திய இளைஞர்களுக்கு பொருத்தமான க்ரூஸர் பைக்... அமர்க்களப்படுத்தும் சுஸுகி இன்ட்ரூடர்...

ஸ்மார்ட் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் கிளஸ்டர், ப்யூயல் டேங்க்கில் இடம்பெற்றுள்ள இன்ட்ரூடர் எம்பளம், எல்இடி டெயில் லைட் ஆகியவையும் சிறப்பாக உள்ளன. நகர்ப்புறங்களிலும் கூட கையாள்வதற்கு எளிதாக இருப்பது இன்ட்ரூடர் பைக்கின் மற்றொரு சிறப்பம்சம்.

இந்திய இளைஞர்களுக்கு பொருத்தமான க்ரூஸர் பைக்... அமர்க்களப்படுத்தும் சுஸுகி இன்ட்ரூடர்...

இன்ட்ரூடர் பைக்கின் முன்பகுதியில் பெரிய பாடி பேனல்கள் வழங்கப்பட்டுள்ளன. என்றாலும் இதன் மொத்த எடை குறைவாகவே இருப்பதால், ஓட்டுவதற்கு மிக எளிதாக இருக்கிறது. ஒட்டுமொத்தத்தில் இந்திய இளைஞர்களுக்கு பொருத்தமான க்ரூஸர் பைக்காக இன்ட்ரூடர் இருக்கும்.

More from DriveSpark

Article Published On: Monday, November 5, 2018, 15:27 [IST]
English summary
Suzuki Intruder — Perfect Cruiser For The Indian Youngsters. Read in Tamil
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+