சுஸுகி இன்ட்ரூடெர் 150 பைக்கின் ஸ்பெஷல் எடிசன் அறிமுகம்!!
பண்டிகை காலத்தையொட்டி, சுஸுகி இன்ட்ரூடெர் எஸ்பி என்ற பெயரில் ஸ்பெஷல் எடிசன் மாடல் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. இந்த பைக்கின் ஸ்பெஷல் எடிசன் மாடலானது கருப்பு வண்ணத்தில் சிவப்பு வண்ண ஸ்டிக்கர் அலங
பண்டிகை காலத்தையொட்டி, சுஸுகி இன்ட்ரூடெர்150 பைக்கின் ஸ்பெஷல் எடிசன் மாடல் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. இந்த பைக்கில் இடம்பெற்றிருக்கும் கூடுதல் சிறப்பம்சங்கள் மற்றும் விலை விபரத்தை இந்த செய்தியில் காணலாம்.

சுஸுகி இன்ட்ரூடெர் எஸ்பி என்ற பெயரில் இந்த ஸ்பெஷல் எடிசன் மாடல் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. இந்த பைக்கின் ஸ்பெஷல் எடிசன் மாடலானது கருப்பு வண்ணத்தில் சிவப்பு வண்ண ஸ்டிக்கர் அலங்காரத்துடன் புதிய இரட்டை வண்ணக் கலவையில் வந்துள்ளது.

இந்த பைக்கில் பின்னால் அமரும் பயணிக்கான பேக் ரெஸ்ட் நிரந்தர ஆக்சஸெரீயாக இடம்பெற்றுள்ளது. சைலென்சர் கார்டு கருப்பு வண்ணத்தில் கொடுக்கப்பட்டு இருப்பது இதன் தனித்துவமான அம்சமாக இருக்கிறது. புதிய சைடு மிரர்கள் கொடுக்கப்பட்டு இருக்கின்றன.

இந்த பைக்கில் வேறு எந்த மாற்றங்களும் இல்லை. இந்த பைக்கில் இருக்கும் 154.9 சிசி எஞ்சின் அதிகபட்சமாக 14 பிஎச்பி பவரையும், 14 என்எம் டார்க் திறனையும் வழங்கும். 5 ஸ்பீடு கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டு இருக்கிறது. கார்புரேட்டர் மற்றும் ஃப்யூவல் இன்ஜெக்ஷன் சிஸ்டம் கொண்ட மாடல்களில் கிடைக்கிறது.

புதிய சுஸுகி இன்ட்ரூடெர் 150 எஸ்பி பைக்கில் பகல்நேர விளக்குகளுடன் கூடிய ஹெட்லைட் அமைப்பு, எல்இடி டெயில் லைட்டுகள், முழுவதுமான டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர் மற்றும் இரட்டை குழல் புகைப்போக்கி அமைப்பு ஆகியவை இடம்பெற்றுள்ளன.

இந்த பைக்கில் முன்புறத்தில் டெலிஸ்கோப்பிக் ஃபோர்க்குகள் கொண்ட சஸ்பென்ஷனும், பின்புறத்தில் மோனோ ஷாக் அப்சார்பரும் பொருத்தப்பட்டுள்ளன. இந்த பைக்கில் இரண்டு சக்கரங்களிலும் டிஸ்க் பிரேக்குகள் மற்றும் ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம் இடம்பெற்றுள்ளது. மேலும், 17 அங்குல ட்யூப்லெஸ் டயர்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன.

புதிய சுஸுகி இன்ட்ரூடெர் 150 எஸ்பி ஸ்பெஷல் எடிசன் மாடலின் கார்புரேட்டர் மாடலுக்கு ரூ.1 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையிலும், ஃப்யூவல் இன்ஜெக்ஷன் சிஸ்டம் கொண்ட மாடலுக்கு ரூ.1.07 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையாகவும் நிர்ணயிக்கப்பட்டு இருக்கிறது. பண்டிகை காலத்தில் புதிய பைக் வாங்க காத்திருப்போருக்கு சிறந்த தேர்வாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications








