2020ல் வருகிறது சுஸூகி எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்

சுஸூகி மோட்டார் சைக்கிள் நிறுவனம் இந்தியாவில் அதன் விற்பனை பிரிவை விரிவுபடுத்த திட்டமிட்டுள்ளது. அதன்படி 100 எக்ஸ்குளுசிவ் டீலர்ஷிப்களும், 200 டச்பாய்ண்ட்களும் நிறுவ முடிவு செய்துள்ளது.

By Balasubramanian

சுஸூகி மோட்டார் சைக்கிள் நிறுவனம் இந்தியாவில் அதன் விற்பனை பிரிவை விரிவுபடுத்த திட்டமிட்டுள்ளது. அதன்படி 100 எக்ஸ்குளுசிவ் டீலர்ஷிப்களும், 200 டச்பாய்ண்ட்களும் நிறுவ முடிவு செய்துள்ளது. இதன் மூலம் இந்தியா நிதியாண்டில் 7 லட்சம் வாகனங்களையும் 2020ம் நிதியாண்டில் 10 லட்சம் வாகனங்களையும் விற்பனை செய்ய முடிவு செய்துள்ளது.

2020ல் வருகிறது சுஸூகி எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்

தற்போது அந்நிறுவனத்திற்கு இந்தியா முழுவதும் 500 டீலர்ஷிப்களும், 1000 டச் பாயிண்ட்களும் உள்ளன. இந்நிறுவனம் கடந்த நிதியாண்டில் மொத்தம் 5 லட்சம் வாகனங்களை விற்பனை செய்திருந்தது. அதற்கு முந்தைய ஆண்டில் மொத்தம் 3.5 லட்சம் வாகனங்களை விற்பனை செய்திருந்தது.

2020ல் வருகிறது சுஸூகி எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்

தற்போது உள்ள அந்நிறுவனம் எக்ஸ்குளுசிவ் டீலர்களாக 500 டீலர்களை வைத்துள்ளது. இந்த நிதியாண்டில் அதை 600 ஆக உயர்த்த திட்டமிட்டுள்ளதாகவும், அதன் மூலம் விற்பனை புதிய இலக்கை எட்டும் எனவும்

2020ல் வருகிறது சுஸூகி எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்

தற்போது உள்ள 1000 டச் பாயிண்ட்களை வரும் காலத்தில் 1200 டச் பாயிண்ட்களாக உயர்த்த திட்டமிட்டுள்ளோம் எனஅந்நிறுவன துணைதலைவர் சஞ்சீவ் ராஜசேகரன் தெரிவித்துள்ளார்.

2020ல் வருகிறது சுஸூகி எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்

இதற்கிடையில் அந்நிறுவனம் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் கவனம் செலுத்தி வருகிறது. 2020ம் ஆண்டு அந்நிறுவனம் தனது புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை விற்பனைக்கு கொண்டு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

2020ல் வருகிறது சுஸூகி எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்

இது குறித்து அந்நிறுவன நிர்வாக இயக்குநர் கூறுகையில் : "தற்போது முதல் தலைமுறை எலெக்ட்ரிக் வாகனங்களை மார்கெட்டில் மக்களின் எண்ண ஓட்டங்களை அறிந்து கொள்ளவே களம் இறக்கவுள்ளோம். அதற்கு கிடைக்கும் வரவேற்ப்பை பொருத்தே இரண்டாம் மூன்றாம் தலைமுறை தயாரிப்புகளை களம் இறக்குவோம்" என கூறினார்.

2020ல் வருகிறது சுஸூகி எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்

தற்போது இந்நிறுவனம் வரும் 2021ம் இரண்டாவது தயாரிப்பு தொழிற்சாலையை நிறுவ திட்டமிட்டுள்ளது. 2020ம் ஆண்டிற்குள் தற்போது உள்ள தொழிற்சாலையில் முழு கொள்ளவு நிறைபெற்று விடும் தற்போது உள்ள தொழிற்சாலை ஆண்டிற்கு 10 லட்சம் வாகனங்களை மட்டுமே தயார் செய்யும் அளவிற்கு வடிவமைக்கப்பட்டுள்ளது.

2020ல் வருகிறது சுஸூகி எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்

தற்போது இரண்டாது ஆலை அமைப்பதற்கான பணி நடந்து வருவதாகவும், அதற்கான இடத்தை தேர்வு செய்வதில் தற்போது தீவிரமாக இருப்பபதாகவும் அந்நிறுவனம் அறிவித்துள்ளது. இடம் கிடைத்தவுடன் சில மாதங்களில் இந்த தொழிற்சாலை கட்டமைக்கப்படும் என அந்நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2020ல் வருகிறது சுஸூகி எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்

நேற்று இந்நிறுவனம் சா்ரபில் சுஸூகி பர்க்மேன் ஸ்டிரீட் என்ற 125 சிசி ஸ்கூட்டர் அறிமுகப்படுத்தப்ட்டது. தற்போது இந்த ஸ்கூட்டர் ரூ 68,000 விலையில் விற்பனையாகி வருகிறது. இந்நிறுவனம் 650 சிசி கொண்ட புதிய பைக்கை இந்தியாவில் இன்னும் சில மாதங்களில் அறிமுகப்படுத்தவுள்ளது.

டிரைவ்ஸ்பார்க் தமிழ்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்ட செய்திகள்

More from DriveSpark

Article Published On: Friday, July 20, 2018, 14:02 [IST]
English summary
Suzuki Motorcycle to expand sales network; launch first e-scooter by 2020. Read in Tamil
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+