சுஸுகியின் புதிய ஆஃப்ரோடு பைக்குகள் இந்தியாவில் அறிமுகம்!!
சுஸுகி RM-Z250 மற்றும் RM-Z450 ஆகிய இரண்டு ஆஃப்ரோடு பைக்குகளும் முறையே ரூ.7.10 லட்சம் மற்றும் ரூ.8.31 லட்சம் விலையில் இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டுள்லன. சுஸுகி RM-Z250 பைக்கில் சிங்கிள் ச
சுஸுகி நிறுவனத்தின் இரண்டு புதிய ஆஃப்ரோடு ரக பைக்குகள் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. இந்த இரண்டு பைக்குகளின் சிறப்பம்சங்கள், விலை விபரங்களை இந்த செய்தியில் காணலாம்.

சுஸுகி RM-Z250 மற்றும் RM-Z450 ஆகிய இரண்டு ஆஃப்ரோடு பைக்குகளும் இந்திய மார்க்கெட்டில் களமிறக்கப்பட்டுள்ளன. சுஸுகி RM-Z250 பைக்கில் சிங்கிள் சிலிண்டர் கொண்ட 249சிசி லிக்யூடு கூல்டு DOHC எஞ்சின் பொருத்தப்பட்டு இருக்கிறது. மோட்டோக்ராஸ் பந்தயங்கள் மற்றும் ஆஃப்ரோடு சாகசங்களின்போது எளிதில் கையாளும் விதத்தில், இலகு எடை கொண்ட அலுமினிய சக்கரங்கள் பொருத்தப்பட்டு இருக்கின்றன. இந்த பைக் 106 கிலோ எடை கொண்டது.

சுஸுகி RM-Z450 பைக்கில் சிங்கிள் சிலிண்டர் அமைப்புடைய 449சிசி லிக்யூடு கூல்டு DOHC எஞ்சின் பொருத்தப்பட்டு இருக்கிறது. இந்த பைக்கில் மூன்று விதமான டிரைவிங் மோடுகள் கொடுக்கப்பட்டு இருப்பதுடன், சுஸுகியின் விசேஷமான Holeshot Assit Control சிஸ்டத்துடன் இணைந்து இயங்கும்.

சுஸுகி RM-Z450 பைக்கில் BFRC என்ற விசேஷ தொழில்நுட்பம் இருக்கிறது. இதன்மூலமாக, டர்ட் டிராக்குகளில் ஓட்டும்போது மிகச் சிறந்த தரைப்பிடிப்பையும், அதிர்வுகளை வெகுவாக உள்வாங்கி குறைக்கும் நுட்பத்தையும் பெற்றிருக்கிறது.

புதிய சுஸுகி RM-Z450 பைக்கின் முன்புறத்தில் 21 அங்குல சக்கரமும், பின்புறத்தில் 18 அங்குல சக்கரமும் பொருத்தப்பட்டு இருக்கின்றன. இந்த பைக்கில் முன்புறத்தில் அப்சைடு டவுன் ஃபோர்க்குகளும், பின்புறத்தில் மோனோ ஷாக் அப்சார்பரும் பொருத்தப்பட்டுள்ளன. இந்த பைக்கில் இரண்டு சக்கரங்களிலும் டிஸ்க் பிரேக்குகள் உள்ளன. இந்த பைக் 112 கிலோ எடை கொண்டது.

இந்த புதிய ஆஃப்ரோடு பைக்குகள் அறிமுகம் குறித்து சுஸுகி மோட்டார்சைக்கிள் இந்தியா நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் சதோஷி உச்சிடா கூறுகையில்," கடந்த சில ஆண்டுகளாக இந்தியாவில் ஆஃப்ரோடு மற்றும் சாகச ரக பைக்குகளுக்கான வரவேற்பு தொடர்ந்து அதிகரித்து வருவதை காண முடிகிறது.

இந்த துறையில் இந்தியர்கள் காட்டும் ஆர்வத்தையும், சந்தை தேவையை கருதியும், இந்த இரண்டு புதிய மாடல்களை அறிமுகம் செய்துள்ளோம். இந்த புதிய மாடல்கள் வாடிக்கையாளர்களுக்கு மிக த்ரில்லான அனுபவத்தை வழங்கும்," என்று கூறினார்.

சுஸுகி RM-Z250 பைக் ரூ.7.10 விலையிலும், சுஸுகி RM-Z450 பைக் ரூ.8.31 லட்சம் டெல்லி எக்ஸ்ஷோரூம் விலையிலும் வந்துள்ளன. இரண்டு பைக்குகளையும் சாதாரண சாலைகளில் ஓட்டுவதற்கான அனுமதி இல்லை. இந்த பைக்குகள் இந்திய ஆஃப்ரோடு மற்றும் சாகச பிரியர்களை வெகுவாக கவரும் என்று நம்பலாம்.


Click it and Unblock the Notifications








