அர்னால்டு பயன்படுத்திய ஹார்லி டேவிட்சன் பைக் இவ்வளவு கோடிக்கு விற்பனையா? ரசிகர்கள் ஆச்சரியம்...

டெர்மினேட்டர்-2 படத்தில் அர்னால்டு பயன்படுத்திய ஹார்லி டேவிட்சன் ஃபேட் பாய் பைக், எதிர்பார்க்கப்பட்டதை விட மிக அதிக தொகைக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது.

By Arun

டெர்மினேட்டர்-2 படத்தில் அர்னால்டு பயன்படுத்திய ஹார்லி டேவிட்சன் ஃபேட் பாய் பைக், எதிர்பார்க்கப்பட்டதை விட மிக அதிக தொகைக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்த விரிவான தகவல்களை பின்வரும் ஸ்லைடர்களில் காணலாம்.

அர்னால்டு பயன்படுத்திய ஹார்லி டேவிட்சன் பைக் இவ்வளவு கோடிக்கு விற்பனையா? ரசிகர்கள் ஆச்சரியம்...

டைட்டானிக், அவதார் உள்பட உலகம் முழுவதும் வசூலை வாரிகுவித்த பல ஹாலிவுட் படங்களை இயக்கியவர் ஜேம்ஸ் கேமரூன். இவரது இயக்கத்தில் கடந்த 1991ம் ஆண்டு வெளிவந்த படம் டெர்மினேட்டர்-2. இந்தியா உள்பட பல்வேறு நாடுகளில் ஹிட் அடித்த ப்ளாக்பஸ்டர் திரைப்படம் இது.

அர்னால்டு பயன்படுத்திய ஹார்லி டேவிட்சன் பைக் இவ்வளவு கோடிக்கு விற்பனையா? ரசிகர்கள் ஆச்சரியம்...

டெர்மினேட்டர்-2 படத்தில், அர்னால்டு உள்பட பலரும் நடித்திருந்தனர். பிரபலமான ஹார்லி டேவிட்சன் ஃபேட் பாய் பைக்கை, இந்த படத்தில் அர்னால்டு பயன்படுத்தியிருந்தார். அர்னால்டு பயன்படுத்திய ஹார்லி டேவிட்சன் ஃபேட் பாய் பைக் தற்போது ஏலம் விடப்பட்டுள்ளது.

அர்னால்டு பயன்படுத்திய ஹார்லி டேவிட்சன் பைக் இவ்வளவு கோடிக்கு விற்பனையா? ரசிகர்கள் ஆச்சரியம்...

இந்திய மதிப்பில் 1.3-2 கோடி ரூபாய்க்குள்தான் அந்த பைக் வாங்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் 3.3 கோடி ரூபாய்க்கு அந்த பைக் விற்பனை செய்யப்பட்டுள்ளது. அதாவது திட்டமிடப்பட்டிருந்த தொகையை காட்டிலும் ஏறத்தாழ 2 மடங்கு அதிக விலைக்கு அந்த பைக் விற்பனையாகியுள்ளது.

அர்னால்டு பயன்படுத்திய ஹார்லி டேவிட்சன் பைக் இவ்வளவு கோடிக்கு விற்பனையா? ரசிகர்கள் ஆச்சரியம்...

டெர்மினேட்டர்-2 படத்தில் அர்னால்டு பயன்படுத்திய சிறப்பு வாய்ந்த அந்த பைக், இன்றளவும் நல்ல கண்டிஷனில் இருப்பதாக நம்பப்படுகிறது. அந்த பைக்கின் ஓடோமீட்டர் ஆயிரத்திற்கும் குறைவான கிலோ மீட்டர்களை மட்டுமே காட்டுகிறது. பைக்கில் சில ஸ்கிராட்ச்கள் மட்டுமே ஏற்பட்டுள்ளன.

அர்னால்டு பயன்படுத்திய ஹார்லி டேவிட்சன் பைக் இவ்வளவு கோடிக்கு விற்பனையா? ரசிகர்கள் ஆச்சரியம்...

ஹார்லி டேவிட்சன் நிறுவனத்தில் இருந்து வெளிவந்த பிரபலமான பைக்குகளில் ஒன்று ஃபேட் பாய். டெர்மினேட்டர்-2 படத்தில் அர்னால்டு அந்த பைக்கை பயன்படுத்திய பிறகு, அதன் கிராப் ஏகத்துக்கும் எகிறியது.

அர்னால்டு பயன்படுத்திய ஹார்லி டேவிட்சன் பைக் இவ்வளவு கோடிக்கு விற்பனையா? ரசிகர்கள் ஆச்சரியம்...

இதன்மூலமாக அதிகம் விற்பனையாகும் ஹார்லி டேவிட்சன் பைக் என்ற அந்தஸ்தை பேட் பாய் பிடித்தது. கடந்த 1990ம் ஆண்டு முதல் இன்று வரை ஃபேட் பாய் பைக் உற்பத்தியில் இருந்து வருகிறது. அர்னால்டுக்கு அமெரிக்கா மட்டுமல்லாது உலகம் முழுவதும் ரசிகர்கள் உள்ளனர்.

அர்னால்டு பயன்படுத்திய ஹார்லி டேவிட்சன் பைக் இவ்வளவு கோடிக்கு விற்பனையா? ரசிகர்கள் ஆச்சரியம்...

குறிப்பாக இந்தியாவிலும் அவருக்கு அதிக அளவிலான ரசிகர்கள் இருக்கின்றனர். அப்படிப்பட்ட ரசிகர்கள் பலர் ஃபேட் பாய் பைக்கை ஆர்வத்துடன் வாங்கினர். ஒரு சிலர் தங்கள் பைக்குகளை ஹார்லி டேவிட்சன் ஃபேட் பாய் போல மாடிபிகேஷன் செய்து பயன்படுத்தினர்.

அர்னால்டு பயன்படுத்திய ஹார்லி டேவிட்சன் பைக் இவ்வளவு கோடிக்கு விற்பனையா? ரசிகர்கள் ஆச்சரியம்...

டெர்மினேட்டர்-2 படத்தின் பல காட்சிகளில் ஹார்லி டேவிட்சன் ஃபேட் பாய் பைக் பயன்படுத்தப்பட்டிருக்கும். குறிப்பாக சில ஸ்டண்ட் காட்சிகள், ஜம்ப் காட்சிகளில் ஹார்லி டேவிட்சன் ஃபேட் பாய் பைக்குடன் அர்னால்டு வருவார்.

அர்னால்டு பயன்படுத்திய ஹார்லி டேவிட்சன் பைக் இவ்வளவு கோடிக்கு விற்பனையா? ரசிகர்கள் ஆச்சரியம்...

டெர்மினேட்டர்-2 படத்தில், ஹார்லி டேவிட்சன் ஃபேட் பாய் பைக் வரும் சில மிரட்டலான காட்சிகளை, கீழே உள்ள வீடியோவில் நீங்கள் காணலாம்.

ஆனால் அர்னால்டு பயன்படுத்திய ஹார்லி டேவிட்சன் ஃபேட் பாய் பைக்கை வாங்கியவர் குறித்த தகவல்களை அறிந்து கொள்ள அனைவரும் ஆர்வமாக உள்ளனர். எனினும் அந்த தகவல்கள் வெளியிடப்படவில்லை.

Source:MASTER_GOW

டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்ட செய்திகள்

More from DriveSpark

Article Published On: Monday, July 9, 2018, 11:23 [IST]
English summary
Terminator-2 harley davidson bike sold for 3.3 crore. Read in tamil
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+