2017ல் கூகுளில் இந்தியர்கள் அதிகம் தேடிய டாப்- 10 பைக் மாடல்கள்!

கூகுளில் இந்தியர்கள் அதிகம் தேடிய டாப் 10 பைக் மாடல்கள் குறித்த விபரங்களை இந்த செய்தியில் காணலாம்.

By Saravana Rajan

கூகுளில் இந்தியர்கள் அதிகம் தேடிய கார், பைக் மாடல்கள் குறித்த விபரங்கள் வெளியாகி உள்ளன. இன்று காலை கூகுள் தேடலில் முதல் 10 இடங்களை பிடித்த கார் மாடல்கள் விபரங்களை படித்திருப்பீர்கள். இந்த செய்தியில் முதல் 10 இடத்தை பிடித்த பைக் மாடல்கள் குறித்த விபரங்களை இந்த செய்தியில் காணலாம்.

10. யமஹா ஆர்1

10. யமஹா ஆர்1

கடந்த ஆண்டு கூகுளில் அதிகம் தேடப்பட்ட பைக் மாடல்களில் 10வது இடத்தை யமஹா ஆர்1 சூப்பர் பைக் பிடித்துள்ளது. ஆர்ப்பரிக்கும் டிசைன், செயல்திறன் மிக்க எஞ்சின் போன்றவை இந்த பைக்கின் சிறப்புகள்.

இந்த பைக்கில் 197 பிஎச்பி பவரையும், 112.4 என்எம் டார்க் திறனையும் வழங்கும் 998சிசி எஞ்சின் பொருத்தப்பட்டு இருக்கிறது. இந்த பைக்கில் 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் கொடுக்கப்பட்டு இருக்கிறது.

09. ட்ரையம்ஃப் போனிவில் ஸ்பீட்மாஸ்டர்

09. ட்ரையம்ஃப் போனிவில் ஸ்பீட்மாஸ்டர்

கோவாவில் நடந்த 2017 இந்திய பைக் திருவிழாவில் அறிமுகம் செயய்ப்பட்ட ட்ரையம்ஃப் போனிவில் ஸ்பீட்மாஸ்டர் பைக் 9வது இடத்தை பிடித்துள்ளது. இந்த பைக்கில் 76 பிஎச்பி பவரையும், 106 என்எம் டார்க் திறனையும் வழங்கும் 1200சிசி லிக்யூடு கூல்டு எஞ்சின் பொருத்தப்பட்டு இருக்கிறது.

08. ஹீரோ எக்ஸ்பல்ஸ்

08. ஹீரோ எக்ஸ்பல்ஸ்

இத்தாலியில் நடந்த மோட்டார்சைக்கிள் கண்காட்சியில் பார்வைக்கு வைக்கப்பட்டிருந்த ஹீரோ எக்ஸ்பல்ஸ் பைக் மாடல்தான் கூகுளில் இந்தியர்கள் அதிகம் தேடிய பைக் மாடல்களில் 8வது இடத்தை பிடித்துள்ளது. அட்வென்ச்சர் ரக பைக் மாடலாக இது வர இருக்கிறது.

07. டிவிஎஸ் அப்பாச்சி ஆர்ஆர்310

07. டிவிஎஸ் அப்பாச்சி ஆர்ஆர்310

டிவிஎஸ் அப்பாச்சி ஆர்ஆர்310 பைக் மாடல் 7வது இடத்தை பிடித்துள்ளது. டிவிஎஸ் நிறுவனத்தின் மிகவும் சக்திவாய்ந்த பைக் மாடல் என்பது இதற்கு வலு சேர்க்கும் அம்சம்.

Recommended Video

Shocking Car Accident That Happened In Karunagappally, Kerala
06. பிஎம்டபிள்யூ ஆர் நைன்டி

06. பிஎம்டபிள்யூ ஆர் நைன்டி

பிஎம்டபிள்யூ மோட்டோராட் நிறுவனத்தின் பாரம்பரிய டிசைன் தத்துவத்தில் வந்த இந்த மாடல்தான் கூகுளில் இந்தியர்கள் அதிகம் தேடிய பைக் மாடல்கலில் 6வது இடத்தை பிடித்துள்ளது. இந்த பைக்கில் இருக்கும் 1170சிசி எஞ்சின் 109 பிஎச்பி பவரையும், 116 என்எம் டார்க் திறனையும் வழங்கும்.

05. ராயல் என்ஃபீல்டு 650 ட்வின்ஸ்

05. ராயல் என்ஃபீல்டு 650 ட்வின்ஸ்

இத்தாலியில் நடந்த சர்வதேச மோட்டார்சைக்கிள் கண்காட்சியில் இரண்டு புதிய 650சிசி மோட்டார்சைக்கிள் மாடல்களை ராயல் என்ஃபீல்டு அறிமுகம் செய்தது. ராயல் என்ஃபீல்டு நிறுவனத்தின் மிகவும் சக்திவாய்ந்த இந்த மாடல்களை இந்தியர்கள் ஆர்வமுடன் தேடி இருப்பது தெரிய வந்துள்ளது. இந்த ஆண்டு மத்தியில் இந்த புதிய மோட்டார்சைக்கிள்கள் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Trending On Drivespark:

04. கவாஸாகி நின்ஜா 650

04. கவாஸாகி நின்ஜா 650

கடந்த ஆண்டு மார்ச் மாதத்தில் அறிமுகம் செய்யப்பட்ட கவாஸாகி நின்ஜா 650 பைக் மாடல் கூகுள் தேடலில் 4வது இடத்தை பிடித்துள்ளது. இந்த பைக்கில் 67 பிஎச்பி பவரையும், 65.7 என்எம் டார்க் திறனையும் வழங்கும் 649சிசி எஞ்சின் பொருத்தப்பட்டு இருக்கிறது.

 03. இந்தியன் ஸ்கவுட்

03. இந்தியன் ஸ்கவுட்

கடந்த ஆண்டு கூகுள் தேடலில் 3வது இடத்தை இந்தியன் ஸ்கவுட் பிடித்துள்ளது. இந்த பிரம்மாண்ட மோட்டார்சைக்கிளில் 98.63 பிஎச்பி பவரையும், 97 என்எம் டார்க் திறனையும் வழங்கும் 1133சிசி எஞ்சின் பொருத்தப்பட்டு இருக்கிறது. வி- ட்வின் எஞ்சின் உள்ளதுடன், 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் கொடுக்கப்பட்டு இருக்கிறது.

02. ஹோண்டா க்ரேஸியா

02. ஹோண்டா க்ரேஸியா

கடந்த ஆண்டு கூகுள் தேடலில் இரண்டாவது இடத்தை ஹோண்டா க்ரேஸியா பிடித்துள்ளது. தற்போது 125சிசி ரக ஸ்கூட்டர் மார்க்கெட்டில் விற்பனையில் கலக்கி வருகிறது.

 01. சுஸுகி இன்ட்ரூடெர்

01. சுஸுகி இன்ட்ரூடெர்

எந்த ஒரு தகவலும் இல்லாத நிலையில், சுஸுகி மோட்டார்சைக்கிள் நிறுவனம் சர்ப்ரைஸாக களமிறக்கிய குறைவான விலை க்ரூஸர் ரக மோட்டார்சைக்கிள்தான் இன்ட்ரூடெர் 150. பஜாஜ் அவென்ஜர் மாடல்களுக்கு போட்டியாக வந்த இந்த மாடலை, இந்தியர்கள் அதிகம் கூகுளில் தேடி இருக்கின்றனர்.

Trending On Drivespark:

இந்தியாவில் கூகுளில் அதிகம் தேடப்பட்ட டாப்- 10 பைக் மாடல்கள்!

கடந்த ஆண்டில் கூகுளில் இந்தியர்கள் தேடிய பைக் மாடல்களை வைத்து பார்க்கும்போது, பிரிமியம் ரக மோட்டார்சைக்கிள்கள் மீது இந்தியர்களுக்கு ஆர்வம் அதிகரித்து வருவது கண்கூடாக தெரிகிறது. வரும் ஆண்டுகளில் பிரிமியம் மோட்டார்சைக்கிளுக்கான வரவேற்பு கூடுவதற்கான வாய்ப்பையும் இந்த பட்டியல் மூலமாக தெரிந்து கொள்ள முடிகிறது.

Trending On Drivespark Youtube Videos

Subscribe To DriveSpark Tamil YouTube Channel - Click Here

Most Read Articles
English summary
Top 10 Most Searched Bike Models in India 2017.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X