சிறந்த மைலேஜ் தரக்கூடிய டாப் 5 பைக்குகளின் பட்டியல்

இந்தியாவில் அதிக அளவில் மக்கள் தொகை இருப்பதால் இந்தியாவில் விற்பனையாகும் வாகனங்களும் பல்வேறு வகைகளில் உள்ளது. சிலர் சொகுசானா வாகனத்தை விரும்புகின்றனர்.

By Balasubramanian

இந்தியாவில் அதிக அளவில் மக்கள் தொகை இருப்பதால் மக்கள் மத்தியில் ஒவ்வொருவருக்கும் ஒரு விருப்பம் இருக்கிறது. அதனால் இந்தியாவில் விற்பனையாகும் வாகனங்களும் பல்வேறு வகைகளில் உள்ளது.

சிறந்த மைலேஜ் தரக்கூடிய டாப் 5 பைக்குகளின் பட்டியல்

சிலர் சொகுசானா வாகனத்தை விரும்புகின்றனர். சிலர் நல்ல பெர்பாமென்ஸ் தரும் வாகனத்தை விரும்புகின்றனர். சிலர் நல்ல மைலேஜ் தரும் வாகனத்தை விரும்புகின்றனர். இப்படியாக ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விருப்பம் இருக்கிறது. இப்படி எந்த வகையான விருப்பம் கொண்டிருந்தாலும், அவர்களுக்கு ஏற்ற வாகனம் இந்தியாவில் கிடைக்கும்.

சிறந்த மைலேஜ் தரக்கூடிய டாப் 5 பைக்குகளின் பட்டியல்

அந்த வகையில் இந்தியாவில் விற்பனை செய்யப்படும் பைக்குகளில் சிறந்த மைலஜ் தரும் பைக்குளின் டாப் பைக்குகளின் பட்டியலை நாம் கீழே காணலாம். இதன் மூலம் நீங்கள் மைலேஜ் பைக்குகளை எதிர்பார்ப்பவராக இருந்தால் உங்களுக்கு இது பயன்படும்.

சிறந்த மைலேஜ் தரக்கூடிய டாப் 5 பைக்குகளின் பட்டியல்

ஹீரோ ஸ்பிளெண்டர் ஐ ஸ்மார்ட் - மைலேஜ்: 102.5 கிமீ

ஹீரோ நிறுவனத்தின் ஸ்பிளெண்டர் பைக்கின் புதிய தொழிற்நுட்பங்களை புகுத்தி ஸ்பிளெண்டர் ஐ ஸ்மார்ட் என்ற பைக்கை வெளியிட்டுள்ளனர். அந்த பைக் லிட்டருக்கு 102.5 கி.மீ. மைலஜை வழங்குகிறது. இதற்காக அந்தபைக்கில் ஐ3எஸ் என்ற தொழிற்நுட்பத்தை இன்ஜினில் புகுத்தியுள்ளனர். இது வண்டியை ஸ்டார்ட் மற்றும் ஸ்டாப் செய்யும் போது ஏற்படும் எரிபொருள் இழப்பை கட்டுப்படுத்தும்.

சிறந்த மைலேஜ் தரக்கூடிய டாப் 5 பைக்குகளின் பட்டியல்

மேலும் இந்த பைக் சில நொடிகள் நகரமால் இருந்தால் பைக் தானாக ஆப் ஆகி விடும். மீண்டும் பைக்கை ஸ்டார்ட் செய்ய கிளட்சை பிடித்தால் போதும். பைக் ஸ்டார்ட் ஆகிவிடும் இதன் மூலம் நமக்கே தெரியாமல் டிராப்பிக்கில் நிற்கும் போது சிக்கனலில் நிற்கும் போது ஏற்படும். எரிபொருள் இழப்பு குறைகிறது. இந்த பைக்கின் நல்ல மைலேஜிற்கு இதுவும் ஒரு காரணம்.

சிறந்த மைலேஜ் தரக்கூடிய டாப் 5 பைக்குகளின் பட்டியல்

பஜாஜ் சிடி 100 - மைலேஜ்: 99.1 கிமீ

பஜாஜ் நிறுவனம் சிடி 100 பைக்கை கடந்த 2015ம் ஆண்டு மீண்டும் விற்பனைக்கு கொண்டு வந்தது. ஏற்கனவே இந்திய ஆட்டோமொபைல் மார்கெட்டில் சிடி100 பைக்கிற்கு ஒரளவிற்கு மவுசு இருந்ததால் விரைவாக விற்பனை பிக்கப் ஆகி விட்டது. இதனால் பிளாட்டினா பைக்கின் விற்பனை சற்று சரிந்தது. மேலும் இந்த பைக் தற்போது சிடி 100 பி, சிடி 100 கேஎஸ் அலாய், மற்றும் சிடி இஎஸ் ஆகிய வேரியண்ட்களில் விற்பனையாகி வருகிறது. இந்த பைக் சுமார் 99 கிமீ மைலேஜ் கிடைக்கும் என அந்நிறுவனம் அறிவித்துள்ளது.

சிறந்த மைலேஜ் தரக்கூடிய டாப் 5 பைக்குகளின் பட்டியல்

பஜாஜ் பிளாட்டினா 100 இஎஸ் - மைலேஜ்: 96.9 கிமீ

பஜாஜ் நிறுவனம் பிளாட்டினா பைக்கின் விலையை சி.டி 100 பைக்கின விலை விட சற்று அதிக விலையில் விற்பனை செய்து வருகிறது. இந்த பைக் 102 சிசி, சிங்கிள் சிலிண்டர், 2 வால்வு, டிடிஎஸ் ஐ எக்ஸாஸ் டெக் இன்ஜின் பொரத்தப்ட்டுள்ளது. இதில் 4 கியர்கள் உள்ளன.

சிறந்த மைலேஜ் தரக்கூடிய டாப் 5 பைக்குகளின் பட்டியல்

இந்த பைக் 7500 ஆர்.பிஎம்மில் 7.8 பிஎச்பி பவரையும், 5500 ஆர்பிஎம்மில் 8.34 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். இந்த பைக்கின் முன் பக்கம் டெலஸ்கோபிக் சஸ்பென்ஸனும், பின்பக்கம் ஸ்பிரிங் டைப் சஸ்பென்ஸனும் பொருத்தப்பட்டுள்ளது.

சிறந்த மைலேஜ் தரக்கூடிய டாப் 5 பைக்குகளின் பட்டியல்

டிவிஎஸ் ஸ்போர்ட்- மைலேஜ்: 95 கிமீ

தமிழகத்தை சேர்ந்த டிவிஎஸ் நிறுவனம் இந்த பைக்கை விற்பனை செய்து வருகிறது. இந்த பைக் மொத்தம் தான் டிவிஎஸ் நிறுவனத்தின் அதிகமாக விற்பனையாகும். பைக். 99.7 சிசி சிங்கிள் சிலிண்டர் டியூரா பைல் 4 ஸ்பீடு கியர் கொண்டது இந்த பைக்.

சிறந்த மைலேஜ் தரக்கூடிய டாப் 5 பைக்குகளின் பட்டியல்

இது 7500 ஆர்பிஎம்மில் 7.4 பிஎச்பி பவரை வெளிப்படுத்தும். இந்த பைக் அறிமுகப்படுத்தப்படத்தில் இருந்து பல மாற்றங்களை பெற்று விட்டது. குறிப்பாக எலெக்ட்ரிக் ஸ்டார்ட், முன்பக்கம் 130 மிமீ டிரம் பிரேக் என முக்கிய மாற்றங்களை பெற்று சிறப்பாக விற்பனையாகி வருகிறது. இதன் பைக்கின் லிட்டருக்கு 95 கி.மீ வரை மைலேஜ் தரும்.

சிறந்த மைலேஜ் தரக்கூடிய டாப் 5 பைக்குகளின் பட்டியல்

ஹீரோ எச் எப் ரேஞ்ச்- மைலேஜ்: 88.5 கிமீ

ஹீரோ நிறுவனத்தின் ஸ்பிளெண்டர் பைக்கை தவிர அதிக மைலேஜ் தரும் பைக் இது தான். லிட்டருக்கு 88.5 லிட்டர் மைலேஜ் தருகிறது. இந்த பைக் எச்எப் டான், எச்எப் டீலக்ஸ், எச்எப் டீலக்ஸ் இசிஓ ஆகிய வேரியன்ட்களில் கிடைக்கிறது.

சிறந்த மைலேஜ் தரக்கூடிய டாப் 5 பைக்குகளின் பட்டியல்

இந்த மூன்று மாடல் பைக்கும் 97.2 சிசி ஏர் கூலண்டு 4 ஸ்டோக் சிங்கிள் சிலிண்டர் ஓஎச்சி இன்ஜின் இதில் பொருத்தப்பட்டுள்ளது. இது 8000 ஆர்பிஎம்மில் 8.36 பிஎச்பி பவரையும், 5000 ஆர்.பிஎம்மில் 8.05 என்எம் டார்க்திறனையும் வெளிப்படுத்தக்கூடியது.

டிரைவ் ஸ்பார்க் தமிழ் தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்ட செய்திகள்.

Most Read Articles
English summary
Top 5 most fuel efficient bikes in India.Read in Tamil
Story first published: Friday, June 1, 2018, 14:37 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X