பல்சர் கொடி பறக்குது... ஹீரோ எப்பவும் அதுக்கு சரிப்பட்டு வரவே வராது...!

By Arun

இந்தியா முழுவதும் கடந்த ஏப்ரல் மாதம் விற்பனையான 150 செக்மெண்ட் பைக்குகளின் விபரங்கள் வெளியாகியுள்ளன. வழக்கம் போல பல்சர் 150 முதலிடம் பிடித்து, சாதனை படைத்துள்ளது. ஆனால் ஹீரோ நிறுவனத்தின் நிலையோ பரிதாபமாக உள்ளது. இது குறித்த விரிவான புள்ளி விபரங்களை பின்வரும் ஸ்லைடர்களில் காணலாம்.

பல்சர் கொடி பறக்குது... ஹீரோ எப்பவும் அதுக்கு சரிப்பட்டு வரவே வராது...!!!

பல்சர் 150 சாதனை

2018ம் ஆண்டு ஏப்ரல் மாதம் இந்தியாவில் விற்பனையான 150 சிசி பைக் செக்மெண்டின் விபரங்கள் வெளியாகியுள்ளன. இதில், பஜாஜ் பல்சர் 150 பைக் முதலிடத்தை பிடித்துள்ளது. கடந்த ஏப்ரல் மாதத்தில் மட்டும் விற்பனையான பஜாஜ் பல்சர் 150 பைக்குகளின் எண்ணிக்கை 48,319.

பல்சர் கொடி பறக்குது... ஹீரோ எப்பவும் அதுக்கு சரிப்பட்டு வரவே வராது...!!!

அதற்கு முந்தைய மார்ச் மாதத்தில், 32,709 பஜாஜ் பல்சர் 150 பைக்குகள் மட்டுமே விற்பனையாகி இருந்தன. இந்த வகையில், ஒரே மாதத்தில், 48 சதவீத விற்பனை வளர்ச்சியை பஜாஜ் பல்சர் 150 கண்டு, சாதனை படைத்துள்ளது.

பல்சர் கொடி பறக்குது... ஹீரோ எப்பவும் அதுக்கு சரிப்பட்டு வரவே வராது...!!!

பஜாஜ் பல்சர் பைக், கடந்த 2001ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது. ஏறத்தாழ 17 ஆண்டுகள் உருண்டோடி விட்டாலும், பஜாஜ் பல்சர் பைக்தான், இன்றளவும் இளைஞர்களின் இதய துடிப்பாக உள்ளது. இதனை தற்போது வெளியாகியுள்ள புள்ளி விபரங்கள் தெளிவாக உறுதி செய்கின்றன.

பல்சர் கொடி பறக்குது... ஹீரோ எப்பவும் அதுக்கு சரிப்பட்டு வரவே வராது...!!!

தடுமாறும் அப்பாச்சி சீரிஸ்

2018ம் ஆண்டு ஏப்ரல் மாதம் அதிகம் விற்பனையான பைக்குகளின் பட்டியலில் 2வது இடத்தை பிடித்திருப்பது டிவிஎஸ் அப்பாச்சி சீரிஸ் பைக்குகள். அப்பாச்சி சீரிஸில் மொத்தம் 43,383 பைக்குகள் விற்பனையாகி உள்ளன.

பல்சர் கொடி பறக்குது... ஹீரோ எப்பவும் அதுக்கு சரிப்பட்டு வரவே வராது...!!!

ஆனால் முந்தைய மார்ச் மாதம், அப்பாச்சி சீரிஸில் மொத்தம் 45,644 பைக்குகள் விற்பனையாகி இருந்தன. அதனுடன் ஒப்பிடுகையில், அப்பாச்சி சீரிஸின் விற்பனை வளர்ச்சியானது, ஏப்ரல் மாதத்தில் 5 சதவீத சரிவை கண்டு, அதிர்ச்சியை சந்தித்திருக்கிறது.

பல்சர் கொடி பறக்குது... ஹீரோ எப்பவும் அதுக்கு சரிப்பட்டு வரவே வராது...!!!

அதுமட்டுமல்லாமல் ஏப்ரல் மாதம் விற்பனையான 43,383 பைக்குகள் என்பதும் கூட 160, 180 மற்றும் 200 என அப்பாச்சி சீரிஸின் ஒட்டுமொத்த பைக்குகளின் கூட்டுத்தொகைதான். அப்பாச்சி 160, 180, 200 ஆகிய பைக்குகளுக்கு டிவிஎஸ் நிறுவனம் தனித்தனியான விற்பனை விபரங்களை வெளியிடவில்லை. எனவேதான் அப்பாச்சி சீரிஸ் என மொத்தமாக கணக்கிட்டு, 2வது இடம் கொடுக்க வேண்டியதாயிற்று.

பல்சர் கொடி பறக்குது... ஹீரோ எப்பவும் அதுக்கு சரிப்பட்டு வரவே வராது...!!!

வளர்ச்சி பாதையில் ஹோண்டா சிபி யுனிகார்ன் 150

சிறப்பான இன்ஜின் திறன் கொண்டதாக அறியப்படும் ஹோண்டா சிபி யுனிகார்ன் 150 பைக்தான், இந்த பட்டியலில் 3வது இடத்தை பிடித்துள்ளது. கடந்த ஏப்ரல் மாதத்தில் மட்டும், 30,561 ஹோண்டா சிபி யுனிகார்ன் 150 பைக்குகள் விற்பனையாகி உள்ளன.

பல்சர் கொடி பறக்குது... ஹீரோ எப்பவும் அதுக்கு சரிப்பட்டு வரவே வராது...!!!

முன்னதாக கடந்த மார்ச் மாதத்தில், 21,859 ஹோண்டா சிபி யுனிகார்ன் 150 பைக்குகள் மட்டுமே விற்பனையாகி இருந்தன. அந்த வகையில் பார்த்தால், ஹோண்டா சிபி யுனிகார்ன் 150 பைக், விற்பனையில் வளமான 40 சதவீத வளர்ச்சியை பதிவு செய்திருக்கிறது.

பல்சர் கொடி பறக்குது... ஹீரோ எப்பவும் அதுக்கு சரிப்பட்டு வரவே வராது...!!!

4வது இடத்தை தக்க வைத்த யமஹா FZ

அதே நேரத்தில் யமஹா FZ பைக், பட்டியலில் 4வது இடத்தை தக்க வைத்து கொண்டுள்ளது. ஏப்ரல் மாதத்தில் மொத்தமாக 20,366 யமஹா FZ பைக்குகள் விற்பனையாகி உள்ளன. முந்தைய மார்ச் மாதம் விற்பனையான 18,348 என்ற எண்ணிக்கையுடன் ஒப்பிடுகையில், இது 11 சதவீத வளர்ச்சியாகும்.

பல்சர் கொடி பறக்குது... ஹீரோ எப்பவும் அதுக்கு சரிப்பட்டு வரவே வராது...!!!

ஹோண்டாவுக்குள் டிஷ்யூம்...டிஷ்யூம்...

ஹோண்டா சிபி ஹார்னெட் 160ஆர் பைக் தனது இடத்தை, மற்றொரு ஹோண்டா 160 சிசி பைக்கான எக்ஸ்-பிளேடு இடம் இழந்து, ஒரு இடம் பின்தங்கியுள்ளது. அதாவது 11,527 பைக்குகள் என்ற எண்ணிக்கையுடன் ஹோண்டா எக்ஸ் பிளேடு 5வது இடத்தையும், 7,728 பைக்குகள் என்ற எண்ணிக்கையுடன் ஹோண்டா சிபி ஹார்னெட் 160ஆர் 6வது இடத்தையும் பிடித்துள்ளன.

பல்சர் கொடி பறக்குது... ஹீரோ எப்பவும் அதுக்கு சரிப்பட்டு வரவே வராது...!!!

ஹோண்டா எக்ஸ் பிளேடு பைக், மார்ச் மாதம்தான் லான்ச் செய்யப்பட்டது. அந்த மாதத்தில் 2,717 பைக்குகள் மட்டுமே விற்பனையாகி இருந்தன. ஆனால் ஏப்ரல் மாதத்தில், 11,527 ஹோண்டா எக்ஸ் பிளேடு பைக்குகள் விற்பனையாகி உள்ளன. இது 324 சதவீத வளர்ச்சியாகும்.

பல்சர் கொடி பறக்குது... ஹீரோ எப்பவும் அதுக்கு சரிப்பட்டு வரவே வராது...!!!

அதே நேரத்தில் ஹோண்டா சிபி ஹார்னெட் 160ஆர் பைக் தனது இடத்தை இழந்து பின்தங்கியிருந்தாலும் கூட, 145 சதவீத வளர்ச்சியை கண்டுள்ளது. ஏனெனில் மார்ச் மாதத்தில் மொத்தமாகவே 3,148 ஹோண்டா சிபி ஹார்னெட் 160ஆர் பைக்குகள்தான் விற்பனையாகி இருந்தன. ஏப்ரல் மாதத்தில் விற்பனையான அந்த பைக்குகளின் எண்ணிக்கை 7,728.

பல்சர் கொடி பறக்குது... ஹீரோ எப்பவும் அதுக்கு சரிப்பட்டு வரவே வராது...!!!

ஆர்15 VS வி15

பட்டியலில் 7வது இடத்தை யமஹா ஆர்15 பைக்கும், 8வது இடத்தை பஜாஜ் வி15 பைக்கும் பிடித்துள்ளன. ஏப்ரல் மாதத்தில், 6,034 யமஹா ஆர்15 பைக்குகளும், 4,040 பஜாஜ் வி15 பைக்குகளும் விற்பனை செய்யப்பட்டுள்ளன.

பல்சர் கொடி பறக்குது... ஹீரோ எப்பவும் அதுக்கு சரிப்பட்டு வரவே வராது...!!!

9, 10வது இடங்களில் யார்?

3,796 பைக்குகளுடன் யமஹா SZ 9வது இடத்தையும், 3,726 பைக்குகளுடன் சுசூகி இன்ட்ரூடர் 150 10வது இடத்தையும் பிடித்துள்ளன. மார்ச் மாதத்துடன் ஒப்பிடுகையில், யமஹா SZ 20 சதவீத வளர்ச்சியையும் (3,160), சுசூகி இன்ட்ரூடர் 150 17 சதவீத சரிவையும் (4,495) கண்டுள்ளன.

பல்சர் கொடி பறக்குது... ஹீரோ எப்பவும் அதுக்கு சரிப்பட்டு வரவே வராது...!!!

பரிதாப நிலையில் ஜிக்ஸர்...

இதனிடையே சுசூகி நிறுவனத்தின் ஜிக்ஸர் பைக்கால் 11வது இடத்தை மட்டுமே பிடிக்க முடிந்திருக்கிறது. சுசூகி இன்ட்ரூடர் 150 பைக்குடன் ஒப்பிடுகையில், ஜிக்ஸர் பைக் 3,636 என்ற எண்ணிக்கையுடன் சற்றே பின்தங்கியுள்ளது.

பல்சர் கொடி பறக்குது... ஹீரோ எப்பவும் அதுக்கு சரிப்பட்டு வரவே வராது...!!!

ஹீரோ அதுக்கு சரிப்பட்டு வராது...!!!

பட்டியலில் 12வது இடத்தை ஹோண்டா சிபி யுனிகார்ன் 160 பைக்கும் (2,065), 13வது இடத்தை ஹீரோ எக்ஸ்ட்ரீம் பைக்கும் (1,691), 14வது இடத்தை ஹீரோ அச்சீவர் பைக்கும் (1,557) பிடித்துள்ளன. இதுகுறித்த விரிவான பட்டியலை நீங்கள் கீழே காணலாம்.

பல்சர் கொடி பறக்குது... ஹீரோ எப்பவும் அதுக்கு சரிப்பட்டு வரவே வராது...!!!
Rank Model Sales April-18

Sales March-18

MoM Growth

1 Bajaj Pulsar 150 48,319 32,709 48%
2 TVS Apache Series 43,383 45,644 -5%
3 Honda CB Unicorn 150 30,561 21,859 40%
4 Yamaha FZ 20,366 18,348 11%
5 Honda X-Blade 11,527 2,717 324%
6 Honda CB Hornet 160 R 7,728 3,148 145%
7 Yamaha R15 6,034 5,252 15%
8 Bajaj V15 4,040 3,631 11%
9 Yamaha SZ 3,796 3,160 20%
10 Suzuki Intruder 150 3,726 4,495 -17%
11 Suzuki Gixxer 3,636 4,720 -23%
12 Honda CB Unicorn 160 2,065 2,910 -29%
13 Hero Xtreme 1,691 1,653 2%
14 Hero Achiever 1,557 1,588 -2%

150 செக்மெண்டிற்கு ஹீரோ நிறுவனம் எப்பவுமே சரிப்பட்டு வராது போல. ஏனெனில் டாப்-10ல் ஹீரோ நிறுவனத்தின் ஒரு பைக் கூட இடம்பெறவில்லை. 13, 14வது இடங்கள்தான் ஹீரோ நிறுவன பைக்குகளுக்கு கிடைத்திருக்கிறது.

Tamil
மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Top Selling 150cc Bikes In April 2018, Pulsar 150 Reigns Supreme. read in tamil.
 
X

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark

Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Drivespark sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Drivespark website. However, you can change your cookie settings at any time. Learn more