ஏப்ரலில் ஆக்டிவா தான் நம்பர் 1; ஆக்டிவாவை வீழ்த்த இனி ஒரு பைக் பிறந்து தான் வரணும்
கடந்த ஏப்ரல் மாதம் இந்தியாவில் விற்பனையான பைக்குகளின் எண்ணிக்கை பட்டியல் தற்போது வெளியாகியுள்ளது மக்கள் அதிகம் விரும்பி வாங்ககூடிய பைக்காக ஹோண்டா ஆக்டிவா பைக் முதலிடத்தை பிடித்துள்ளது.
கடந்த ஏப்ரல் மாதம் இந்தியாவில் விற்பனையான பைக்குகளின் எண்ணிக்கை பட்டியல் தற்போது வெளியாகியுள்ளது மக்கள் அதிகம் விரும்பி வாங்ககூடிய பைக்காக ஹோண்டா ஆக்டிவா பைக் முதலிடத்தை பிடித்துள்ளது.

இந்தியாவில் பைக்குகள் வாங்குபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகமாகி வருகிறது. அதற்கு ஏற்றார் போல் கடந்த ஏப்ரல் மாதமும் பைக்குகளின் விற்பனை அதிகரித்துள்ளது. அதன் படி ஹோண்டா ஆக்டிவா ஸ்கூட்டர் தான் அதிகமாக விற்பனையாகி வருகிறது.

கடந்த சில தினங்களுக்கு ஏப்ரல் மாத பைக் விற்பனை குறித்த பட்டியல் ஒன்று வெளியாது. அதன் படி முதல் ஐந்து இடங்களை ஹோண்டா ஆக்டிவா, ஹீரோ ஸ்பிளெண்டர், எச்எப் டீலக்ஸ், சிபி ஷைன், ஆகிய பைக்குகள் பிடித்துள்ளன.

கடந்த ஏப். மாதம் மட்டும் ஹோண்டா ஆக்டிவா ஸ்கூட்டர் அதற்கு முந்தைய மாத வளர்ச்சியை விட 64 சதவீதம் அதிகரித்துள்ளது. கடந்த மாதம் மட்டும் சுமார் 3.3 லட்சம் ஆக்டிவா ஸ்கூட்டர்கள் விற்பனையாகியுள்ளன.

அதேபோல் ஹீரோ ஸ்பிளென்டர் பைக் 1 சதவீத வளர்ச்சியை அடைந்துள்ளது. இந்த பைக் மொத்தம் 2.66 லட்சம் பைக்குகளை கடந்த ஏப்ரல் மாதம் மட்டும் விற்பனை செய்துள்ளது. இதன் மூலம் முதலிடத்தில் இருந்த ஹீரோ பைக் இரண்டாம் இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. கடந்த மாதம் விற்பனையான பைக்குகளின் பட்டியலை நீங்கள் கீழே காணுங்கள்.

குறைந்த பட்சமாக ஹோண்டா கிளிக் ஸ்கூட்டர் 3748 ஸ்கூட்டர்களையும், ஹோண்டா நவி 75 பைக்குகளையும் மட்டுமே விற்பனை செய்துள்ளது. ஹோண்டா நிறுவனத்தின் சிபி யூனிகார்ன், ஹார்னட் ஆகிய பைக்குகள் தொடர்ந்து டாப் 25 பட்டியலில் இடம் பெற்று வருகின்றன.

ஹீரோ நிறுவனத்தின் பைக்குகளான எக்ஸ்டிரீம், எச்எப் டான், உள்ளிட்ட அந்நிறுவனம் தயாரிக்கும் எல்லா பைக்குகளும் டாப் 25 பட்டியலிலேயே உள்ளது.

சுஸூகி நிறுவனம் 3726 இன்ட்ரூடர் பைக்குகளையும், 3636 ஜிக்ஸெர் பைக்களையும் கடந்த மாதம் விற்பனை செய்து வருகிறது. இது தான் இந்நிறுவனம் 150 சிசிகளில் விற்பனை செய்யும் பைக்குகள். அதேபோல அந்நிறுவனம் வெளியிடும் லெட்ஸ், ஹெயேட் ஆகிய ஸ்கூட்டர்கள் 849,658 என் முறையே விற்பனையாகி வருகிறது.

யமஹா நிறுவனம் 2444 ஆல்ஃபா ஸ்கூட்டர்களையும், 3796 எஸ்இசட் பைக்குகளையும், 12,876 ரே ஸ்கூட்டர்களையும் விற்பனை செய்து வருகிறத. ஆர்3 பைக் மொத்தம் 88 பைக் தான் விற்பனையாகியுள்ளது. எப்இசட்25 பைக் மொத்தம் 1908 பைக்குகள் விற்பனை செய்யப்படுகிறது.

பஜாஜ் நிறுவனம் கடந்த மாதம் 26 சதவீத வளர்ச்சியை அடைந்துள்ளது. இந்நிறுவனம் கடந்த மாதம் மட்டும் 2 லட்சம் பைக்குகளை விற்பனை செய்துள்ளது. இந்நிறுவனத்தின் வி12, வி15 ஆகிய பைக்குகள் முறையே 321,4040 ஆகிய எண்ணிக்கையில் விற்பனையாகியுள்ளது.

இந்நிறுவனம் தயாரித்த டிஸ்கவர் பைக் 17,000 பைக்குகளும், இந்நிறுவனத்தின் முக்கிய தயாரிப்பான டோமினோர் பைக் 1000 பைக்குகளும் விற்பனையாகியுள்ளன.

ராயல் என்பீல்டு நிறுவனம் மொத்தம் 74,627 பைக்குகளை விற்பனை செய்துள்ளது. இந்நிறுவனத்தின் கிளாசிக் 350 ரக பைக் தான் அதிக விற்பனையை பெற்றுள்ளது. புல்லட் 35 பைக் மொத்தம் 10,798 பைக்குகளும், தண்டர்பேர்டு 350 மொத்தம் 3772 பைக்குகளும், தண்டர் பேர்டு 500 மொத்தம் 409 பைக்குகளையும், ஹிமாலயன் 1029 பைக்குகளையும் விற்பனை செய்துள்ளது.

டிவிஎஸ் நிறுவனத்தில் வழக்கம் போல ஜூப்பிட்டர், மற்றும் எக்ஸ் எல் சூப்பர் ஆகிய பைக்குகள் தான் சிறந்த விற்பனையில் உள்ளன. அந்நிறுவனம் சமீபத்தில் என்டார்க் 125 ஸ்கூட்டரும் கனிசமான விற்பனையை பெற்றுள்ளது. இந்நிறுவனம் வெளியிடும். ஃஸெஸ்ட் ரகத்தில் 5564 ஸ்கூட்டர்களும், 8918 பெப் பிளஸ் ஸ்கூட்டர்களும், 2360 வீகோ ஸ்கூட்டர்களும் கடந்த ஏப்ரல் மாத்ததில் விற்பனையாகியுள்ளன.

பைக்குகளை பொருத்தவரை டிவிஎஸ் விக்டர் பைக் 8864 பைக்களும், ஸ்டார் சிட்டி 13,866 பைக்குகளும் அதிக எண்ணிக்கையில் விற்பனையாகியுள்ளன. ஆப்பாச்சி ஆர்ஆர் 310 பைக்கை பொருத்தவரை மொத்தம் 862 பைக்குகள் கடந்த ஏப்ரல் மாதத்தில் விற்பனையாகியுள்ளன.

சமீபத்தில் ஹோண்டா ஆக்டிவா 5ஜி ஸ்கூட்டர் அறிமுகப்படுத்தப்பட்டது. 5 வது தலைமுறையாக அறிமுகப்படுத்தப்பட்ட இந்த பைக்கில் துவக்கத்திலேயே நல்ல விற்பனையை இந்த பைக் பெற்றுள்ளது. இந்த ஸ்கூட்டர் தான் இந்நிறுவனத்தின் விற்பனையை தூக்கி நிறுத்தி வருகிறது.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்ட செய்திகள்


Click it and Unblock the Notifications








