டிவிஎஸ் அப்பாச்சி ஆர்ஆர்310 பைக்கிற்கு அக்ரபோவிக் சைலென்சர் அறிமுகம்!!
டிவிஎஸ் அப்பாச்சி ஆர்ஆர்310 பைக்கிற்கு விசேஷ சைலென்சரை அக்ரபோவிக் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது .இது முழுவதுமான புகைப்போக்கி அமைப்பாக வந்துள்ளது. பவரை வெளிப்படுத்தும் திறன் 2.4 பிஎச்பி வரையில் அதிகரி
டிவிஎஸ் அப்பாச்சி ஆர்ஆர்310 ஸ்போர்ட்ஸ் பைக்கின் செயல்திறனை அதிகரிக்கச் செய்யும் புதிய புகைப்போக்கி அமைப்பை அக்ரபோவிக் நிறுவனம் விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ளது. இந்த புகைப்போக்கி அமைப்பை பொருத்துவதால் எஞ்சின் பவரில் ஏற்படும் மாற்றங்கள், விலை விபரங்களை இந்த செய்தியில் காணலாம்.

டிவிஎஸ் அப்பாச்சி ஆர்ஆர்310 பைக்கிற்கு ஏராளமான ஆக்சஸெரீகள் வெளிச்சந்தையில் விற்பனைக்கு வந்துள்ளன. அந்த வகையில், தற்போது அக்ரபோவிக் நிறுவனம் டிவிஎஸ் அப்பாச்சி ஆர்ஆர்310 பைக்கின் செயல்திறனை கூட்டும் புதிய சைலென்சரை அறிமுகம் செய்துள்ளது.

இது முழுவதுமான புகைப்போக்கி அமைப்பாக வந்துள்ளது. இந்த புகைப்போக்கியை பொருத்துவதன் மூலமாக, டிவிஎஸ் அப்பாச்சி ஆர்ஆர்310 பைக்கின் பவரை வெளிப்படுத்தும் திறன் 2.4 பிஎச்பி வரையில் அதிகரிக்கும். அதேபோன்று, டார்க் திறன் 2.7 என்எம் கூடுதலாகும் என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது

அக்ரபோவிக் சைலென்சர் கார்பன் மற்றும் ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் என இரண்டு விதமாான ஃபினிஷிங்கில் கிடைக்கும். இந்த புதிய சைலென்சர் மூலமாக செயல்திறன் அதிகரிப்பதோடு, பைக்கின் எடையும் வெகுவாக குறையும்.

பைக்குடன் வரும் சைலென்சரைவிட அக்ரபோவிக் அறிமுகம் செய்துள்ள விசேஷமான கார்பன் சைலென்சரை பொருத்தும்போது பைக்கின் எடை 4.6 கிலோ குறையும். ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் சைலென்சரை பொருத்தும்போது 3.3 கிலோ வரை எடை குறையும்.

அக்ரபோவிக் சைலெசன்ரை பொருத்துவதன் மூலமாக பைக்கின் தோற்றம் கூடுதல் வசீகரம் பெறுவதுடன், சைலென்சர் சப்தமும் மிகச் சிறப்பாக இருக்கும் என்று அக்ரபோவிக் நிறுவனம் தெரிவித்துள்ளது.

டிவிஎஸ் அப்பாச்சி ஆர்ஆர்310 பைக்கில் 310சிசி சிங்கிள் சிலிண்டர் எஞ்சின் பொருத்தப்பட்டு இருக்கிறது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 34 பிஎச்பி பவரையும், 27.3 என்எம் டார்க் திறனையும் வழங்கும். அக்ரபோவிக் சைலென்சர் பொருத்தும்போது, 36.4 பிஎச்பி பவரையும், 30 என்எம் டார்க் திறனையும் வழங்கும்.

வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும் பிஎம்டபிள்யூ ஜி 310ஆர் மற்றும் ஜி 310ஜிஎஸ் ஆகிய பைக் மாடல்களுக்கு ஏற்கனவே அக்ரபோவிக் நிறுவனம் சைலென்சரை அறிமுகம் செய்தது. அதே எஞ்சின் பொருத்தப்பட்ட டிவிஎஸ் அப்பாச்சி ஆர்ஆர்310 பைக்கிற்கும் இப்போது அக்ரபோவிக் அதே சைலென்சரை அறிமுகம் செய்துள்ளது.

மும்பையில் உள்ள பெர்ஃபார்மென்ஸ் ரேஸிங் ஸ்டோரில் இந்த சைலென்சர் கிடைக்கிறது. ரூ.55,000 விலை நிர்ணயிக்கப்பட்டு இருக்கிறது. இந்த சைலென்சரை எளிதாக பொருத்திக் கொள்ள முடியும் என்பதுடன், இசியூ சாதனத்தில் எந்த மாற்றமும் செய்ய தேவையில்லை என்றும் தெரிவித்துள்ளது.
Source:AUTOCARINDIA


Click it and Unblock the Notifications








