டிவிஎஸ் அப்பாச்சி ஆர்ஆர் 310க்கு போட்டியாக எக்ஸ்எப்3ஆர் பைக்கை அறிமுகம் செய்ய ஹீரோ திட்டம்?

டிவிஎஸ் அப்பாச்சி ஆர்ஆர் 310 பைக்கிற்கு போட்டியாக, எக்ஸ்எப்3ஆர் பைக்கை ஹீரோ நிறுவனம் விற்பனைக்கு அறிமுகம் செய்ய உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

டிவிஎஸ் அப்பாச்சி ஆர்ஆர் 310 பைக்கிற்கு போட்டியாக, எக்ஸ்எப்3ஆர் பைக்கை ஹீரோ நிறுவனம் விற்பனைக்கு அறிமுகம் செய்ய உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

டிவிஎஸ் அப்பாச்சி ஆர்ஆர் 310க்கு போட்டியாக எக்ஸ்எப்3ஆர் பைக்கை அறிமுகம் செய்ய ஹீரோ திட்டம்?

உலகின் மிகப்பெரிய இரு சக்கர வாகன உற்பத்தி நிறுவனமான ஹீரோ மோட்டோகார்ப், கம்யூட்டர் பைக் செக்மெண்ட்டில்தான் ஆதிக்கம் செலுத்தி கொண்டுள்ளது. ஆனால் பெர்ஃபார்மென்ஸ் பைக் செக்மெண்டிலும் ஆதிக்கம் செலுத்தும் வகையில், தன்னைத்தானே உந்தி தள்ளிக்கொண்டுள்ளது ஹீரோ மோட்டோகார்ப்.

டிவிஎஸ் அப்பாச்சி ஆர்ஆர் 310க்கு போட்டியாக எக்ஸ்எப்3ஆர் பைக்கை அறிமுகம் செய்ய ஹீரோ திட்டம்?

அத்தகைய பைக்குகளுக்கு மார்க்கெட்டில் டிமாண்ட் அதிகரித்து வருவதே இதற்கு காரணம். இந்த சூழலில், 2016 ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிப்படுத்தப்பட்டிருந்த எக்ஸ்எப்3ஆர் கான்செப்ட்டின் புரொடெக்ஷன் வெர்ஷன் பணிகளில் ஹீரோ மோட்டோகார்ப் ஈடுபட்டுள்ளதாக நியூஸ்எக்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

டிவிஎஸ் அப்பாச்சி ஆர்ஆர் 310க்கு போட்டியாக எக்ஸ்எப்3ஆர் பைக்கை அறிமுகம் செய்ய ஹீரோ திட்டம்?

இந்த பைக் எப்போது விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும்? என்ற தகவல்கள் எதுவும் தற்போதைக்கு வெளியாகவில்லை. என்றாலும், எக்ஸ்எப்3ஆர் பைக் மார்க்கெட்டில் விற்பனைக்கு வர இன்னும் சில ஆண்டுகள் ஆகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

டிவிஎஸ் அப்பாச்சி ஆர்ஆர் 310க்கு போட்டியாக எக்ஸ்எப்3ஆர் பைக்கை அறிமுகம் செய்ய ஹீரோ திட்டம்?

எக்ஸ்எப்3ஆர் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டால், இன்ஜின் டிஸ்ப்ளேஸ்மென்ட் அடிப்படையில், ஹீரோ நிறுவனத்தின் மிகப்பெரிய பைக்காக இது திகழும். அத்துடன் விலை உயர்ந்த பைக்காகவும் இருக்கும்.

டிவிஎஸ் அப்பாச்சி ஆர்ஆர் 310க்கு போட்டியாக எக்ஸ்எப்3ஆர் பைக்கை அறிமுகம் செய்ய ஹீரோ திட்டம்?

அனேகமாக இந்திய மார்க்கெட்டில் பிஎஸ் 6 விதிகள் கட்டாயமாக்கப்பட்ட பிறகு, 2020ம் ஆண்டின் மத்தியில் இந்த பைக் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படலாம் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஏற்கனவே குறிப்பிட்டிருந்தபடி, 2016 ஆட்டோ எக்ஸ்போவில்தான், எக்ஸ்எப்3ஆர் காட்சிபடுத்தப்பட்டிருந்தது.

டிவிஎஸ் அப்பாச்சி ஆர்ஆர் 310க்கு போட்டியாக எக்ஸ்எப்3ஆர் பைக்கை அறிமுகம் செய்ய ஹீரோ திட்டம்?

இதன் கான்செப்ட் வெர்ஷன் மிகவும் ஷார்ப் ஆக இருந்தது. எனவே கான்செப்ட் வெர்ஷனுடைய பல டிசைன் அம்சங்கள், புரொடெக்ஷன் வெர்ஷனுடன் பகிர்ந்து கொள்ளப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. என்றாலும் ஹை எண்ட் வசதிகள் இடம்பெற வாய்ப்பில்லை என கூறப்படுகிறது.

டிவிஎஸ் அப்பாச்சி ஆர்ஆர் 310க்கு போட்டியாக எக்ஸ்எப்3ஆர் பைக்கை அறிமுகம் செய்ய ஹீரோ திட்டம்?

அதாவது இந்த நேக்கட் பைக்கின் இறுதி புரொடெக்ஷன் வெர்ஷனில், சிங்கிள் சைடு ஸ்விங்ஆர்ம், அன்டர்சீட் எக்ஸாஸ்ட் மஃபில் உள்ளிட்ட ஹை எண்ட் வசதிகள் வழங்கப்பட வாய்ப்பில்லை என தெரிகிறது. ஏனெனில் இவை பைக்கின் விலையை வெகுவாக உயர்த்தி விடும்.

டிவிஎஸ் அப்பாச்சி ஆர்ஆர் 310க்கு போட்டியாக எக்ஸ்எப்3ஆர் பைக்கை அறிமுகம் செய்ய ஹீரோ திட்டம்?

என்றாலும் பைக்கிற்கு பிரீமியம் உணர்வை சேர்க்க வேண்டும் என்பதற்காக, எல்இடி ஹெட்லேம்ப்பை ஹீரோ வழங்கலாம். அதே சமயம் இதன் புரொடெக்ஷன் வெர்ஷனின் பின்பகுதியில் மோனோ ஷாக் டிரான்ஸ்மிஷனும், முன்பகுதியில் வழக்கமான டெலஸ்கோபிக் போர்க்கும் இடம்பெறலாம்.

டிவிஎஸ் அப்பாச்சி ஆர்ஆர் 310க்கு போட்டியாக எக்ஸ்எப்3ஆர் பைக்கை அறிமுகம் செய்ய ஹீரோ திட்டம்?

இளைஞர்களை கவர வேண்டும் என்பதற்காக, எக்ஸ்எப்3ஆர் பைக்கிற்கு, கவர்ச்சிகரமான கலர் ஸ்கீம்களை வழங்கவும் ஹீரோ திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. சமீப காலமாக 300 சிசி மெக்மெண்ட், அதிக வாடிக்கையாளர்களை ஈர்த்து வருகிறது.

டிவிஎஸ் அப்பாச்சி ஆர்ஆர் 310க்கு போட்டியாக எக்ஸ்எப்3ஆர் பைக்கை அறிமுகம் செய்ய ஹீரோ திட்டம்?

பிஎம்டபிள்யூ மற்றும் டிவிஎஸ் கூட்டணியில் உருவாக்கப்பட்டுள்ள டிவிஎஸ் அப்பாச்சி ஆர்ஆர் 310 பைக், சமீபத்தில் இந்த செக்மெண்ட்டில் நுழைந்துள்ளது. டிவிஎஸ் அப்பாச்சி ஆர்ஆர் 310 ஃபுல்லி ஃபேர்டு பைக் என்றாலும் கூட, ஹீரோவின் தயாரிப்பின் விலையும் கிட்டத்தட்ட அதனை போன்றே இருக்கலாம்.

டிவிஎஸ் அப்பாச்சி ஆர்ஆர் 310க்கு போட்டியாக எக்ஸ்எப்3ஆர் பைக்கை அறிமுகம் செய்ய ஹீரோ திட்டம்?

தற்போது ஆல் நியூ 300 சிசி இன்ஜினை உருவாக்கும் பணிகளில் ஹீரோ மோட்டோகார்ப் ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது. இந்த லிக்யூட் கூல்டு, சிங்கிள் சிலிண்டர் இன்ஜினானது, 28 பிஎச்பி பவர் மற்றும் 28 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

டிவிஎஸ் அப்பாச்சி ஆர்ஆர் 310க்கு போட்டியாக எக்ஸ்எப்3ஆர் பைக்கை அறிமுகம் செய்ய ஹீரோ திட்டம்?

அதே நேரத்தில் இது 6 ஸ்பீடு டிரான்ஸ்மிஷனை பெறும் எனவும் கூறப்படுகிறது. இந்த பைக்கின் விலை சுமார் ரூ.1.8 லட்சமாக இருக்கலாம். இந்த சூழலில் தற்போது எக்ஸ்பல்ஸ் ட்யூயல் பர்பஸ் பைக்கை லான்ச் செய்யும் பணிகளில் ஹீரோ ஈடுபட்டு வருகிறது.

டிவிஎஸ் அப்பாச்சி ஆர்ஆர் 310க்கு போட்டியாக எக்ஸ்எப்3ஆர் பைக்கை அறிமுகம் செய்ய ஹீரோ திட்டம்?

2018 ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிப்படுத்தப்பட்டிருந்த இந்த பைக், 2019ம் ஆண்டின் மத்தியில் விற்பனைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Most Read Articles
English summary
TVS Apache RR310 Rival Hero XF3R Will Launch Soon In India. Read in Tamil
Story first published: Friday, December 14, 2018, 11:50 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X