டிவிஎஸ் அப்பாச்சி ஆர்ஆர்310 Vs கேடிஎம் ஆர்சி 390 டிராக் ரேஸ்... கில்லாடி யார்?

Written By:

அண்மையில் விற்பனைக்கு வந்த டிவிஎஸ் அப்பாச்சி ஆர்ஆர்310 பைக் வடிவமைப்பிலும், வசதிகளும் இளைஞர்களை கவர்ந்து வருகிறது. ஆனால், இந்த பைக் கேடிஎம் ஆர்சி390 பைக் மார்க்கெட்டை குறிவைத்து களமிறக்கப்பட்டுள்ளது.

 டிவிஎஸ் அப்பாச்சி ஆர்ஆர்310 Vs கேடிஎம் ஆர்சி 390 டிராக் ரேஸ்... கில்லாடி யார்?

இந்தநிலையில், இந்தியன்ஸ்டஃப் என்ற யூ-ட்யூப் தளத்தை சேர்ந்தவர்கள் அப்பாச்சி ஆர்ஆர் 310 மற்றும் கேடிஎம் ஆர்சி390 பைக்குகளுக்கு இடையே ஒரு டிராக் ரேஸை நடத்தி, இரு பைக்குகளின் திறனையும் பரிசோதித்து பார்த்துள்ளனர்.

 டிவிஎஸ் அப்பாச்சி ஆர்ஆர்310 Vs கேடிஎம் ஆர்சி 390 டிராக் ரேஸ்... கில்லாடி யார்?

இரு பைக்குகளையும் 400 மீட்டர் தூரத்திற்கு ஓட்டி பார்த்து திறனை அறியும் முயற்சியில் இறங்கினர். பரிசோதனையில் கேடிஎம் ஆர்சி 390 பைக் மிகச் சிறப்பான திறனை வெளிக்காட்டி அசத்தி இருக்கிறது.

 டிவிஎஸ் அப்பாச்சி ஆர்ஆர்310 Vs கேடிஎம் ஆர்சி 390 டிராக் ரேஸ்... கில்லாடி யார்?

ஆரம்பத்தில் இருந்தே கேடிஎம் ஆர்சி390 பைக்கின் பிக்கப் மிகச் சிறப்பாக இருப்பதுடன், அதிகபட்சமாக மணிக்கு 179 கிமீ வேகத்தை அனாயசமாக எட்டிவிட்டது. ஆனால், டிவிஎஸ் அப்பாச்சி பைக் அதிகபட்சமாக மணிக்கு 162 கிமீ வேகத்தை மட்டுமே எட்டி இருக்கிறது.

 டிவிஎஸ் அப்பாச்சி ஆர்ஆர்310 Vs கேடிஎம் ஆர்சி 390 டிராக் ரேஸ்... கில்லாடி யார்?

இந்த வீடியோ மூலமாக கேடிஎம் ஆர்சி390 பைக்கின் செயல்திறன் வியக்க வைக்கும் வகையில் இருப்பதை உணர முடிகிறது. அதேநேரத்தில், அப்பாச்சி செயல்திறனில் இந்த விஷயத்தில் பின் தங்கினாலும், இருக்கை அமைப்பு ஓட்டுனருக்கு மிக சவுகரியமானதாக இருக்கிறது.

 டிவிஎஸ் அப்பாச்சி ஆர்ஆர்310 Vs கேடிஎம் ஆர்சி 390 டிராக் ரேஸ்... கில்லாடி யார்?

டிவிஎஸ் அப்பாச்சி ஆர்ஆர் 310 பைக்கில் 34 பிஎச்பி பவரையும், 28 என்எம் டார்க் திறனையும் வழங்கும் 311சிசி எஞ்சினும், கேடிஎம் ஆர்சி 390 பைக்கில் 44 பிஎச்பி பவரையும், 37 என்எம் டார்க் திறனையும் வழங்க வல்ல 373சிசி எஞ்சினும் பொருத்தப்பட்டு இருக்கிறது.

 டிவிஎஸ் அப்பாச்சி ஆர்ஆர்310 Vs கேடிஎம் ஆர்சி 390 டிராக் ரேஸ்... கில்லாடி யார்?

அதேநேரத்தில், பட்ஜெட் அடிப்படையில் இரு பைக்குகளும் ஒரே மாதிரியான வாடிக்கையாளர் வட்டத்தை குறிவைத்து நிலைநிறுத்தப்பட்டு இருக்கிறது. எனவே, இந்த ஒப்பீடு நியாயமற்றதாக கருதிவிட முடியவில்லை.

 டிவிஎஸ் அப்பாச்சி ஆர்ஆர்310 Vs கேடிஎம் ஆர்சி 390 டிராக் ரேஸ்... கில்லாடி யார்?

கேடிஎம் ஆர்சி 390 பைக் ரூ.2.59 லட்சம் ஆன்ரோடு விலையிலும், டிவிஎஸ் அப்பாச்சி ஆர்ஆர் 310 பைக் ரூ.2.25 லட்சம் ஆன்ரோடு விலையிலும் விற்பனை செய்யப்படுகின்றன. விலையை பொறுத்தவரையில் அப்பாச்சி ஆர்ஆர்310 சிறப்பானதாக இருந்தாலும், செயல்திறனில் கேடிஎம்தான் மிக மிக சிறப்பானதாக இருக்கிறது.

Disclaimer: பொது சாலைகளில் இதுபோன்ற சாகசங்களை டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளம் ஆதரிக்கவில்லை. இரு பைக்குகளுக்கு இடையிலான செயல்திறன் வித்தியாசத்தை காட்டவே இந்த வீடியோ குறித்த தகவலை பகிர்ந்து கொண்டுள்ளோம்.

English summary
TVS Apache RR310 vs KTM RC390 motorcycle drag race on video.
Story first published: Friday, March 2, 2018, 17:25 [IST]

Latest Photos

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark