டிவிஎஸ் அப்பாச்சி ஆர்டிஆர் 180 ரேஸ் எடிசன் விற்பனைக்கு அறிமுகம்!!

டிவிஎஸ் அப்பாச்சி ஆர்டிஆர் 180 பைக்கின் ரேஸ் எடிசன் மாடல் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. டிவிஎஸ் அப்பாச்சி ஆர்டிஆர் 180 ரேஸ் எடிசன் மாடல் வெள்ளை, சிவப்பு மற்றும் சாம்பல் வண்ணங்களின் கலவ

By Saravana Rajan

டிவிஎஸ் அப்பாச்சி ஆர்டிஆர் 180 பைக்கின் ரேஸ் எடிசன் மாடல் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. இந்த புதிய மாடலின் சிறப்புகள், விலை விபரத்தை இந்த செய்தியில் காணலாம்.

டிவிஎஸ் அப்பாச்சி ஆர்டிஆர் 180 ரேஸ் எடிசன் விற்பனைக்கு அறிமுகம்!!

டிவிஎஸ் அப்பாச்சி ஆர்டிஆர் 180 ரேஸ் எடிசன் மாடல் வெள்ளை, சிவப்பு மற்றும் சாம்பல் வண்ணங்களின் கலவையில் வந்துள்ளது. ரேஸ் பைக்குளை போன்று காட்சி தரும் வகையில், ஸ்டிக்கர் அலங்காரம் செய்யப்பட்டு இருக்கிறது.

டிவிஎஸ் அப்பாச்சி ஆர்டிஆர் 180 ரேஸ் எடிசன் விற்பனைக்கு அறிமுகம்!!

டிவிஎஸ் அப்பாச்சி ஆர்டிஆர் 180 ரேஸ் எடிசன் மாடலில் புதிய முப்பரிமாண டிவிஎஸ் லட்சினை பெட்ரோல் டேங்கில் பொருத்தப்பட்டு இருக்கிறது. அலாய் வீல்களில் சிவப்பு வண்ண ஸ்டிக்கர் ஒட்டப்பட்டு இருக்கிறது. இந்த பைக்கில் முன்புறம் மற்றும் பின்புற சக்கரங்களில் டிஸ்க் பிரேக்குகள் கொடுக்கப்பட்டு இருக்கின்றன.

டிவிஎஸ் அப்பாச்சி ஆர்டிஆர் 180 ரேஸ் எடிசன் விற்பனைக்கு அறிமுகம்!!

புதிய வண்ணக் கலவை தவிர்த்து பெரிய மாற்றங்கள் இல்லை. வழக்கம்போல மிரட்டலான ஹெட்லைட் ஹவுசிங், எல்இடி பகல்நேர விளக்குகள், வலிமையான பெட்ரோல் டேங்க் டிசைன் ஆகியவை ஸ்போர்ட்டியான பைக் மாடலாக காட்டுகிறது.

டிவிஎஸ் அப்பாச்சி ஆர்டிஆர் 180 ரேஸ் எடிசன் விற்பனைக்கு அறிமுகம்!!

டிவிஎஸ் அப்பாச்சி ஆர்டிஆர் 180 ரேஸ் எடிசன் மாடலில் எஞ்சின் கவுல் பொருத்தப்பட்டு இருக்கிறது. அதில், டிவிஎஸ் பிராண்டும் கொடுக்கப்பட்டு இருப்பது சிறப்பு.

டிவிஎஸ் அப்பாச்சி ஆர்டிஆர் 180 ரேஸ் எடிசன் விற்பனைக்கு அறிமுகம்!!

நீல வண்ண பேக்லிட்டுடன் கூடிய இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர் பொருத்தப்பட்டு இருக்கிறது. 0-60 கிமீ வேகத்தை தொடும் நேரத்தை பதிவு செய்யும் வசதி, ரேஸ் டிராக்குகளில் ஒரு சுற்றை கடக்கும் நேரம், சர்வீஸ் ரிமைன்டர் வசதிகளை அளிக்கும்.

டிவிஎஸ் அப்பாச்சி ஆர்டிஆர் 180 ரேஸ் எடிசன் விற்பனைக்கு அறிமுகம்!!

புதிய டிவிஎஸ் அப்பாச்சி ஆர்டிஆர் 180 ரேஸ் எடிசன் மாடலில் 177.4சிசி எஞ்சின் பொருத்தப்பட்டு இருக்கிறது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 16.3 பிஎச்பி பவரையும், 15.5 என்எம் டார்க் திறனையும் வழங்க வல்லது. 5 ஸ்பீடு கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டு இருக்கிறது.

டிவிஎஸ் அப்பாச்சி ஆர்டிஆர் 180 ரேஸ் எடிசன் விற்பனைக்கு அறிமுகம்!!

டிவிஎஸ் அப்பாச்சி ஆர்டிஆர் 180 பைக் 0-60 கிமீ வேகத்தை 4.96 வினாடிகளில் எட்டிவிடும். இந்த பைக்கின் பிரேக் செயல்திறன் மிகச் சிறப்பானதாக இருக்கிறது. எடைக்கும், பவரை வெளிப்படுத்தும் திறனுக்குமான விகிதமும் மிகச் சிறப்பாக இருக்கிறது.

டிவிஎஸ் அப்பாச்சி ஆர்டிஆர் 180 ரேஸ் எடிசன் விற்பனைக்கு அறிமுகம்!!

டிவிஎஸ் நிறுவனம் தனது அப்பாச்சி ஆர்டிஆர் 200 4வி மற்றும் ஆர்டிஆர் 160 பைக்குகளில் ரேஸ் எடிசன் மாடலை அறிமுகம் செய்துவிட்டது. இதைத்தொடர்ந்து, தற்போது ஆர்டிஆர் 180 மாடலிலும் ரேஸ் எடிசன் மாடல் வந்துள்ளது. ரூ.83,233 டெல்லி எக்ஸ்ஷோரூம் விலையில் கிடைக்கும்.

More from DriveSpark

Article Published On: Wednesday, May 9, 2018, 20:04 [IST]
English summary
TVS Apache RTR 180 Race Edition launched in India. TVS Motor Company has launched the Race Edition of the Apache RTR 180 in the country. The TVS Apache RTR 180 Race Edition is priced at Rs 83,233 ex-showroom (Delhi).
மேலும்... #டிவிஎஸ் #tvs motor
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+