டிவிஎஸ் அப்பாச்சி ஆர்டிஆர் 200 பைக்கில் புதிய வண்ணங்கள் அறிமுகம்!

டிவிஎஸ் அப்பாச்சி ஆர்டிஆர் 200 4வி பைக்கில் புதிய வண்ணங்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. புதிய டிவிஎஸ் அப்பாச்சி ஆர்டிஆர் 200 4வி பைக்கில் வெள்ளை- சிவப்பு, சாம்பல்- மஞ்சள், சிவப்பு- கருப்பு மற்றும் மேட்

By Saravana Rajan

டிவிஎஸ் அப்பாச்சி ஆர்டிஆர் 200 4வி பைக்கில் புதிய வண்ணங்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. கூடுதல் விபரங்களை இந்த செய்தியில் காணலாம்.

டிவிஎஸ் அப்பாச்சி ஆர்டிஆர் 200 பைக்கில் புதிய வண்ணங்கள் அறிமுகம்!

சில மாதங்களுக்கு அறிமுகம் செய்யப்பட்ட ரேஸ் எடிசன் வண்ணக் கலவை போன்றே தற்போது புதிய வண்ணங்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. புதிய டிவிஎஸ் அப்பாச்சி ஆர்டிஆர் 200 4வி பைக்கில் வெள்ளை- சிவப்பு, சாம்பல்- மஞ்சள், சிவப்பு- கருப்பு மற்றும் மேட் பிளாக்- ரெட் என்ற விசேஷ கருப்பு - சிவப்பு வண்ணக் கலவைகளில் வந்துள்ளது.

டிவிஎஸ் அப்பாச்சி ஆர்டிஆர் 200 பைக்கில் புதிய வண்ணங்கள் அறிமுகம்!

பெட்ரோல் டேங்கில் புதிய ஆர்டிஆர் பேட்ஜ் பொருத்தப்பட்டு இருக்கிறது. முன்புற கவுலில் புதிய பாடி கிராஃபிக்ஸ் ஸ்டிக்கர் ஒட்டப்பட்டு இருக்கிறது. மொத்தத்தில் புதிய வண்ணங்கள் மற்றும் ஸ்டிக்கர் டிசைனில் வந்துள்ளது.

டிவிஎஸ் அப்பாச்சி ஆர்டிஆர் 200 பைக்கில் புதிய வண்ணங்கள் அறிமுகம்!

டிசைன் மற்றும் சிறப்பம்சங்களில் எந்த மாற்றமும் இல்லை. எல்இடி ஹெட்லைட், ஸ்பிளிட் இருக்கைகள், எல்இடி டெயில் லைட்டுகள் ஆகிய சிறப்பம்சங்களை இந்த பைக் பெற்றிருக்கிறது.

டிவிஎஸ் அப்பாச்சி ஆர்டிஆர் 200 பைக்கில் புதிய வண்ணங்கள் அறிமுகம்!

டிவிஎஸ் அப்பாச்சி ஆர்டிஆர் 200 4வி பைக்கில் 198சிசி சிங்கிள் சிலிண்டர் எஞ்சின் பொருத்தப்பட்டு இருக்கிறது. ஏர்-ஆயில் கூல்டு என்ற இரட்டை குளிர்விப்பு தொழில்நுட்பத்தை பெற்றிருக்கும் இந்த எஞ்சின் கார்புரேட்டர் மற்றும் ஃப்யூவல் இன்ஜெக்ஷன் சிஸ்டம் மாடல்களில் கிடைக்கிறது.

டிவிஎஸ் அப்பாச்சி ஆர்டிஆர் 200 பைக்கில் புதிய வண்ணங்கள் அறிமுகம்!

கார்புரேட்டர் எஞ்சின் அதிகபட்சமாக 20.2 பிஎச்பி பவரையும், 18.1 என்எம் டார்க் திறனையும் வழங்கும். ஃப்யூவல் இன்ஜெக்ஷன் சிஸ்டம் மாடல் அதிகபட்சமாக 20.7 பிஎச்பி பவரையும், 18.1 என்எம் டார்க் திறனையும் வழங்க வல்லது.

டிவிஎஸ் அப்பாச்சி ஆர்டிஆர் 200 பைக்கில் புதிய வண்ணங்கள் அறிமுகம்!

அப்பாச்சி ஆர்டிஆர் 200 4வி பைக்கில் முன்புறத்தில் டெலிஸ்கோப்பிக் சஸ்பென்ஷனும், பின்புறத்தில் மோனோஷாக் அப்சார்பரும் பொருத்தப்பட்டு இருக்கின்றன. முன்சக்கரத்தில் 270மிமீ டிஸ்க் பிரேக்கும், பின்சக்கரத்தில் 240 மிமீ டிஸ்க் பிரேக்கும் பொருத்தப்பட்டுள்ளன. டியூவல் சேனல் ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம் ஆப்ஷனலாக கொடுக்கப்படுகிறது.

டிவிஎஸ் அப்பாச்சி ஆர்டிஆர் 200 பைக்கில் புதிய வண்ணங்கள் அறிமுகம்!

புதிய டிவிஎஸ் அப்பாச்சி ஆர்டிஆர் 200 4வி பைக்கின் விலையில் மாற்றங்கள் இல்லை. கார்புரேட்டர் மாடல் ரூ.95,685 எக்ஸ்ஷோரூம் விலையிலும், ஃப்யூவல் இன்ஜெக்ஷன் சிஸ்டம் மாடல் ரூ.1.08 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையிலும் கிடைக்கும். ஏபிஎஸ் மாடல் ரூ.1.09 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையில் கிடைக்கிறது.

டிவிஎஸ் அப்பாச்சி ஆர்டிஆர் 200 பைக்கில் புதிய வண்ணங்கள் அறிமுகம்!

புதிய வண்ணக் கலவை வாடிக்கையாளர்களை பெரிதும் கவரும் வகையில் உள்ளது. குறிப்பாக, மேட் பிளாக் வண்ணம் மிகச் சிறப்பான தேர்வாக இருக்கும். பஜாஜ் பல்சர் என்எஸ்200 பைக்கிற்கு இது நேர் போட்டியாக இருக்கும்.

More from DriveSpark

Article Published On: Thursday, May 3, 2018, 15:55 [IST]
English summary
TVS Apache RTR 200 4V now available in new colour options. TVS has introduced new colour schemes for the Apache RTR 200 4V which is similar to the race edition model launched earlier. The new colours follow a similar pattern of the Apache RTR 200 4V Race Edition.
மேலும்... #டிவிஎஸ் #tvs motor
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+