டிவிஎஸின் புதிய மின்சார ஸ்கூட்டர் கான்செப்ட் ஆட்டோ எக்ஸ்போவில் வெளியீடு; புகைப்படங்களுடன் தகவல்கள்

Written By:

டிவிஎஸ் நிறுவனத்தின் புதிய க்ரையன் மின்சார ஸ்கூட்டர் கான்செப்ட் 2018 ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிப்படுத்தப்பட்டது.

சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில் இந்த கான்செப்ட் இருந்தாலும், இது முற்றிலும் செயல்திறன் மிக்க ஸ்கூட்டராகவே தயாராகவுள்ளது.

டிவிஎஸின் க்ரையன் மின்சார ஸ்கூட்டர் கான்செப்ட் வெளியீடு..!!

இந்த ஸ்கூட்டரில் 12 கிலோ வால்ட் மோட்டார் மற்றும் 3 லித்தியம் அயான் பேட்டரிகள் உள்ளன. வெறும் 5.1 விநாடிகளில் இந்த ஸ்கூட்டர் 100 கி.மீ வேகத்தை எட்டிவிடும்.

க்ரையன் கான்செப்ட் ஸ்கூட்டர் பேட்டரிகள் ஒரு மணிநேரத்தில் 80 சதவீதம் வரை சார்ஜ் ஆகிவிடும். முழுமையாக சார்ஜ் செய்யப்பட்ட இந்த ஸ்கூட்டரில் 80 கி.மீ வரை செல்லலாம்.

டிவிஎஸின் க்ரையன் மின்சார ஸ்கூட்டர் கான்செப்ட் வெளியீடு..!!

க்ரையன் கான்செப்ட் ஸ்கூட்டரில் டிஎஃப்டி திரைபெற்ற ஸ்பீடோமீட்டர், பேட்டரி சார்ஜிங்கை தெரிவிக்கும் குறியீடு, வேகத்தை கணக்கிடும் டாகோ மீட்டர், பயண தூரத்தை பார்க்க ட்ரிப் மீட்டர், ஓடோ மீட்டர் உள்ளன.

டிவிஎஸின் க்ரையன் மின்சார ஸ்கூட்டர் கான்செப்ட் வெளியீடு..!!

மேலும் கிளவுட் தொழில்நுட்பம் பெற்ற இந்த ஸ்கூட்டரில் விவரங்களை சேமிக்கும் வசதி, 3 ரைடிங் மோடுகள், பார்க்கிங் அசிஸ்டு, ஜிபிஸ் போன்ற வசதிகளையும் டிவிஎஸ் பொருத்தியுள்ளது.

மென்பொருள் பிராஸஸர்களை தயாரிக்கும் இன்டல் நிறுவனத்துடன் இணைந்து க்ரையன்ஸ்கூட்டருக்கான தொழில்நுட்பங்கள் உள்ளடக்கியுள்ளதாக டிவிஎஸ் கூறியுள்ளது.

டிவிஎஸின் க்ரையன் மின்சார ஸ்கூட்டர் கான்செப்ட் வெளியீடு..!!

எடை குறைவான பெரிமீட்டர் ஃபிரேம், டயமன்டு கட் அலாய் சக்கரங்கள், ஏபிஸ் கொண்ட பாதுகாப்பு ஆகிய அம்சங்களுடன் டிவிஎஸின் இந்த மின்சார ஸ்கூட்டர் கான்செப்ட் தயாரிப்பு நிலையை எட்டும்.

Recommended Video - Watch Now!
New Maruti Swift Launch: Price; Mileage; Specifications; Features; Changes
டிவிஎஸின் க்ரையன் மின்சார ஸ்கூட்டர் கான்செப்ட் வெளியீடு..!!

டிவிஎஸ் க்ரீயான் மின்சார ஸ்கூட்டர் பார்க்க முனைப்பாகவும் மற்றும் ஸ்போர்டி வடிவமைப்பிலும் உள்ளது. இதையே டிவிஎஸ் தயாரிப்பு நிலை மாடலாக மாற்றுமா என்பது தெரியவில்லை.

டிவிஎஸின் க்ரையன் மின்சார ஸ்கூட்டர் கான்செப்ட் வெளியீடு..!!

இருந்தாலும் தற்போது ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிப்படுத்தப்பட்டுள்ள இந்த புதிய மின்சார ஸ்கூட்டர் கான்செப்ட் நிச்சயம் எதிர்கால வாகன துறை சார்ந்த செயல்பாட்டிற்கு பெரிய ஊக்கமாக இருக்கும்.

English summary
Read in Tamil: TVS Creon Electric Scooter Concept Unveiled — Launch Date, Specifications & Images. Click for Details...
Story first published: Thursday, February 8, 2018, 11:51 [IST]

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark