டிவிஎஸ் என்டார்க் Vs. அப்ரிலியா எஸ்.ஆர் 125: டிசைனிங், விலை, எஞ்சின் உள்ளிட்ட முழு தகவல்கள்..!!

டிவிஎஸ் என்டார்க் Vs. அப்ரிலியா எஸ்.ஆர் 125: டிசைனிங், விலை, எஞ்சின் உள்ளிட்ட முழு தகவல்கள்..!!

By Azhagar

இந்தியாவில் 125சிசி ப்ரீமியம் தர ஸ்கூட்டர் செக்மென்ட் பெரியளவில் வளர்ச்சி அடைந்து வருகிறது. அதை குறிவைத்து பல்வேறு புதிய வாகனங்கள் தொடர்ந்து அறிமுகமாகி வருகின்றன.

டிவிஎஸ் என்டார்க் Vs. அப்ரிலியா எஸ்.ஆர் 125: முழு தகவல்கள்

சமீபத்தில் வெளியான டிவிஎஸ் என்டார்க் 125 மற்றும் அப்ரிலியா எஸ்.ஆர் 125 ஸ்கூட்டர்கள் ப்ரீமியம் மற்றும் செயல்திறன் சார்ந்த வாகன செக்மென்டில் பேசுபொருளாக உள்ளன.

முரடான, ஸ்போர்டி தோற்றத்தில் தயாராகியுள்ள இந்த இரண்டு ஸ்கூட்டர்களும் இந்திய வாடிக்கையாளர்களை பெரியளவில் ஈர்த்து வருகிறது.

டிவிஎஸ் என்டார்க் Vs. அப்ரிலியா எஸ்.ஆர் 125: முழு தகவல்கள்

டிவிஎஸ் என்டார்க் மற்றும் அப்ரிலியா எஸ்.ஆர் 125 ஸ்கூட்டர்கள் தரம் மற்றும் பர்ஃபாமென்ஸை குறிவைத்து தான் தயாரிக்கப்பட்டுள்ளது. அதன் காரணமாக இந்த இரு ஸ்கூட்டர்களின் வடிவமைப்பு, சிறப்பம்சங்கள், தொழில்நுட்ப கட்டமைப்பு மற்றும் விலை ஆகியவற்றை ஒப்பிட்டு பார்ப்பது அவசியமாகிறது.

வடிவமைப்பு

வடிவமைப்பு

2014 ஆட்டோ எக்ஸ்போவில் டிவிஎஸ் காட்சிப்படுத்திய கிராஃபைட் ஸ்கூட்டர் கான்செப்டில் தான் என்டார்க் 125 மாடல் தயாராகியுள்ளது. தாக்கும் திறன் பெற்ற ஒரு போர் விமானத்தின் தாக்கத்தில் என்டார்க் ஸ்கூட்டர் உருவாகியுள்ளது.

டிவிஎஸ் என்டார்க் Vs. அப்ரிலியா எஸ்.ஆர் 125: முழு தகவல்கள்

ஆக்ரோஷமான தோற்றம், கூர்மையான வரிசைகள் மற்றும் முன்பகுதி நீட்டமான ஏப்ரன் போன்றவை இதன் ஸ்போர்ட்ஸ் அம்சத்தை வெளிச்சம் போட்டு காட்டுகின்றன.

டிவிஎஸ் என்டார்க் Vs. அப்ரிலியா எஸ்.ஆர் 125: முழு தகவல்கள்

எல்.இ.டி பகல்நேர விளக்குகள், சிவப்பு நிற வேலைபாடுகள் கொண்ட இருக்கை, ஃபாக்ஸ் கார்பன் ஃப்பைபர் பேனல்களுடன் என்டார்க் ஸ்கூட்டரின் ஏரோடைனமிக் சிஸ்டம் சிறப்பாக வலுவூட்டப்பட்டுள்ளது.

டிவிஎஸ் என்டார்க் Vs. அப்ரிலியா எஸ்.ஆர் 125: முழு தகவல்கள்

ஜெட் ரக தாக்கும் விமானங்களில் இருப்பது போன்ற இதனுடைய எக்ஸாஸ்ட் சிஸ்டம் வடிவமைக்கப்பட்டுள்ளடு. இது என்டார்க் ஸ்கூட்டருக்கு தனித்துவத்தை தருகிறது.

டிவிஎஸ் என்டார்க் Vs. அப்ரிலியா எஸ்.ஆர் 125: முழு தகவல்கள்

அப்ரிலியா நிறுவனம் முன்னர் வெளியிட்ட எஸ்.ஆர் 150 மாடலை பின்பற்றி தான் எஸ்.ஆர். 125 ஸ்கூட்டர் தயாராகியுள்ளது. இந்த மாடலின் முன்பக்க ஏப்ரனில் டூயல்-ஹெட்லேம்ப் செட்-அப், டிஸ்க் பிரேக் கொண்ட பெரிய உறுதியான டயர்கள்உள்ளன. மொத்தமாக இந்த ஸ்கூட்டரின் முன்பகுதி ஏப்ரன் திருத்தமான மற்றும் ஆக்ரோஷம் தரும் எட்ஜுகளுடன் சிறப்பாக காட்சியளிக்கிறது.

டிவிஎஸ் என்டார்க் Vs. அப்ரிலியா எஸ்.ஆர் 125: முழு தகவல்கள்

பக்கவாட்டு பகுதியிலும் அதே திருத்தமான டிசைனிங் அமைப்புகள் தொடர்கின்றன. குறிப்பாக எஸ்.ஆர் 125 ஸ்கூட்டரின் கிராஃபிக்ஸ் வேலைப்பாடுகள் கண்ணை பறிக்கின்றன.

டிவிஎஸ் என்டார்க் Vs. அப்ரிலியா எஸ்.ஆர் 125: முழு தகவல்கள்

ஸ்கூட்டரின் பின்பகுதியில் டெயில் விளக்குகள் கூர்மையாக மற்றும் எல்.இ.டி டெயில் விளக்குடன் சிறப்பாக உள்ளது. ஸ்போர்டி திறன் பெற்ற எக்ஸாஸ்ட் அப்ரிலியா எஸ்.ஆர் 125 மாடலுக்கு டிசைனிங்கில் வலுசேர்க்கிறது.

சிறப்பம்சங்கள்

சிறப்பம்சங்கள்

125சிசி செக்மென்டில் ப்ளுடூத் கனெக்ட்டிவிட்டி உடன் கூடிய எல்சிடி இன்ஸ்ட்ருமென்ட் கிளஸ்டர் திரை பெற்ற முதல் ஸ்கூட்டர் டிவிஎஸ் என்டார்க் தான்.

டிவிஎஸ் உருவாக்கிய மொபைல் செயலி உடன் ஸ்கூட்டரை இணைத்துவிட்டால் போதும், கைப்பேசியில் வரும் அழைப்புகள் மற்றும் தகவல்கள் எல்.சி.டி திரையில் தோன்றும்.

டிவிஎஸ் என்டார்க் Vs. அப்ரிலியா எஸ்.ஆர் 125: முழு தகவல்கள்

இதுதவிர இந்த எல்.சி.டி திரை வேகத்தை பதிவு செய்வது, லேப் டைமர், கைப்பேசியின் பேட்டரி திறன், பார்க்கிங் அசிஸ்ட், மல்டிபிள் ரைடிங் மோடுகள் உள்ளிட்ட மொத்தம் 55 அம்சங்களை வழங்கும்.

டிவிஎஸ் என்டார்க் Vs. அப்ரிலியா எஸ்.ஆர் 125: முழு தகவல்கள்

கூடுதலாக எஞ்சில் கில் ஸ்விட்ச், கூடுதல் எரிவாயுவை சேமிக்கும் கேப், 22 லிட்டர் அளவு கொண்ட ஸ்டோரேஜ் வசதி, அலாய் சக்கரங்கள் மற்றும் யுஎஸ்பி சார்ஜர் போன்ற பல்வேறு அம்சங்கள் இடம்பெற்றுள்ளன.

டிவிஎஸ் என்டார்க் Vs. அப்ரிலியா எஸ்.ஆர் 125: முழு தகவல்கள்

இரண்டு சக்கரங்களிலும் டிஸ்க் பிரேக் தேவையை பெற்றுள்ள இந்த ஸ்கூட்டரில் டெலஸ்கோபிக் ஃபிரென்ட் ஃபோர்க்ஸ் மற்றும் காயில் ஸ்பிரிங் ஷாக் அப்ஸபர்கள் சஸ்பென்ஷன் தேவையை பூர்த்தி செய்கின்றன.

டிவிஎஸ் என்டார்க் Vs. அப்ரிலியா எஸ்.ஆர் 125: முழு தகவல்கள்

அப்ரிலியா எஸ்.ஆர் 125 ஸ்கூட்டரில் டூயல்-ஹெட்லேம்ப் செட் அப் கவனமீர்க்கிறது. அனலாக் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர் கொண்ட இந்த ஸ்கூட்டரில் கால்வைக்கும் பகுதி சற்று பெரிதாக உள்ளது.

டிவிஎஸ் என்டார்க் Vs. அப்ரிலியா எஸ்.ஆர் 125: முழு தகவல்கள்

14 இஞ்ச் அளவு கொண்ட சக்கரங்கள், அந்த சக்கரங்களின் இரண்டு பக்கங்களிலும் டிஸ்க் பிரேக் பொருத்தப்பட்டுள்ளது. முன்பக்க சக்கரத்தில் டெலஸ்கோபிக் ஃப்போர்க்ஸ் மற்றும் பின்பக்க சக்கரத்தில் காயில் ஸ்பிரிங் ஆகியவை சஸ்பென்ஷன் தேவையை பூர்த்தி செய்கின்றன.

எஞ்சின்

எஞ்சின்

டிவிஎஸ் என்டார்க் ஸ்கூட்டரில் 124.79 சிசி சிங்கிள் சிலிண்டர், ஏர்-கூல்டு எஞ்சின் உள்ளது. இது அதிகப்பட்சமாக 9.27 பிஎச்பி பவர் மற்றும் 10.4 என்.எம் டார்க் திறனை வழங்கும்.

தொழில்நுட்ப கட்டமைப்புகள் அனைத்தும் உயர்ரக தரத்தில் இந்த ஸ்கூட்டரில் உள்ளது. சிறப்பாக முடுக்கு விசையை பெற்றுள்ள இந்த ஸ்கூட்டரின் டாப் ஸ்பீடு மணிக்கு 95 கி.மீ

டிவிஎஸ் என்டார்க் Vs. அப்ரிலியா எஸ்.ஆர் 125: முழு தகவல்கள்

அப்ரிலியா எஸ்.ஆர் 125 ஸ்கூட்டரில் 124சிசி சிங்கிள்-சிலிண்டர், ஏர்-கூல்டு எஞ்சின் உள்ளது. இது 9.46 பிஎச்பி பவர் மற்றும் 9.9 என்.எம் டார்க் திறனை வழங்கும்.

சிவிடி கியர்பாக்ஸ் கொண்ட இந்த எஞ்சின் சிறந்த மற்றும் உயர்ரக பர்ஃபாமென்ஸை வழங்கும். குறிப்பாக பார்த்தால் டிவிஎஸ் என்டார்கை விட எஸ்.ஆர் 125 ஸ்கூட்டரின் செயல்திறன் சிறப்பாக உள்ளது.

விலை

விலை

டிவிஎஸ் நிறுவனம் என்டார்க் 125 ஸ்கூட்டரை ரூ. 58,750 (எக்ஸ்-ஷோரூம் டெல்லி) விலையில் விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ளது. ஸ்போர்ட்டி தரம் மற்றும் பல்வேறு தொழில்நுட்ப அம்சங்கள் பெற்ற இந்த ஸ்கூட்டருக்கு இந்த விலை குறைவு தான் என்பது சந்தையில் இருக்கும் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

டிவிஎஸ் என்டார்க் Vs. அப்ரிலியா எஸ்.ஆர் 125: முழு தகவல்கள்

2018 ஆட்டோ எக்ஸ்போவில் அப்ரிலியா எஸ்.ஆர் 125 ஸ்கூட்டரை ரூ. 65,310 (எக்ஸ்-ஷோரூம் பூனே) விலையில் அறிமுகம் செய்தது. டிவிஎஸ் என்டார்க்கை விட இந்த ஸ்கூட்டர் கூடுதலாக ரூ. 6000 விலை பெற்றுள்ளது.

டிவிஎஸ் என்டார்க் Vs. அப்ரிலியா எஸ்.ஆர் 125: முழு தகவல்கள்

எந்தவிதமான தொழில்நுட்ப அம்சங்கள் மற்றும் மேம்பட்ட கட்டமைப்புகள் எதுவுமின்றி எஸ்.ஆர் 125 மாடலுக்கு இந்த விலையை அப்ரிலியா நிர்ணயித்துள்ளது. எல்லாவற்றுக்கும் காரணம் பிராண்டு என்பது தான்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து

டிரைவ்ஸ்பார்க் கருத்து

125சிசி செக்மென்டில் டிவிஎஸின் என்டார்க் சிறந்த தயாரிப்பு என்பதில் மாற்று கருத்தில்லை. 125சிசி எஞ்சின் திறன் ப்ரீமியம் தரத்தோடு என்டார்க் இந்த செக்மென்டில் சிறப்பான தயாரிப்பு என்பதை நிலைநாட்டியுள்ளது.

டிவிஎஸ் என்டார்க் Vs. அப்ரிலியா எஸ்.ஆர் 125: முழு தகவல்கள்

டிவிஎஸ் என்டார்க்குடன் ஒப்பிடும் போது அப்ரிலியா 125 ஸ்கூட்டர் சற்று விலை அதிகம் தான். ஆனால் பிராண்டு, கையாளும் திறன் மற்றும் உறுதியான கட்டமைப்பிற்கு அந்த விலை வலுசேர்க்கிறது.

டிவிஎஸ் என்டார்க் Vs. அப்ரிலியா எஸ்.ஆர் 125: முழு தகவல்கள்

ப்ரீமியம் தர ஸ்கூட்டரை தேடும் வாடிக்கையாளராக நீங்கள் இருந்தால் உங்களுக்கான சிறந்த தேர்வு டிவிஎஸ் என்டார்க் 125 ஸ்கூட்டர் தான். அதேவேளையில் பர்ஃப்பாமென்ஸ் விரும்பியாக இருந்தால் உங்களது தேர்வு அப்ரிலியா எஸ்.ஆர் 125 மாடல் மட்டுமே.

More from DriveSpark

Article Published On: Tuesday, February 20, 2018, 13:03 [IST]
English summary
Read in Tamil: TVS NTorq 125 Vs. Aprilia SR 125 Click for Design, Specs, Features, Price and More...
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+