டிவிஎஸ் என்டார்க் எஸ்எக்ஸ்ஆர் ஸ்கூட்டர் அறிமுகம்: விபரம்!

தேசிய ராலி பந்தயத்திற்கான புதிய டிவிஎஸ் என்டார்க் எஸ்எக்ஸ்ஆர் ரேஸ் ஸ்கூட்டர் மாடலை டிவிஎஸ் மோட்டார்ஸ் அறிமுகம் செய்துள்ளது. மஹாராஷ்டிர மாநிலம் நாசிக்கில் நடைபெற்று வரும் தேசிய ராலி சாம்பியன்ஷிப் பந்தய

By Saravana Rajan

தேசிய ராலி பந்தயத்திற்கான புதிய டிவிஎஸ் என்டார்க் எஸ்எக்ஸ்ஆர் ரேஸ் ஸ்கூட்டர் மாடலை டிவிஎஸ் மோட்டார்ஸ் அறிமுகம் செய்துள்ளது. இந்த ஸ்கூட்டரின் அருமை, பெருமைகளை இந்த செய்தியில் காணலாம்.

டிவிஎஸ் என்டார்க் எஸ்எக்ஸ்ஆர் ஸ்கூட்டர் அறிமுகம்: விபரம்!

தேசிய ராலி சாம்பியன்ஷிப் பந்தயத்தில் மூன்று முறை வென்ற ஆசிப் அலி மற்றும் ஷமிம் கான் ஆகியோர் இந்த ஸ்கூட்டரை பயன்படுத்துகின்றனர். டிவிஎஸ் எஸ்எக்ஸ்ஆர் 160 ஸ்கூட்டரின் வழித் தோன்றலாக இனி டிவிஎஸ் என்டார்க் எஸ்எக்ஸ்ஆர் பயன்படுத்தப்பட இருக்கிறது.

டிவிஎஸ் என்டார்க் எஸ்எக்ஸ்ஆர் ஸ்கூட்டர் அறிமுகம்: விபரம்!

டிவிஎஸ் என்டார்க் எஸ்எக்ஸ்ஆர் ஸ்கூட்டரின் தோற்றம் என்டார்க் 125 ஸ்கூட்டரை ஒத்திருக்கிறது. ஆனால், பாடி டீக்கெல் ஸ்டிக்கர் மூலமாக ரேஸ் மாடலாக வேறுபடுத்தப்பட்டு இருக்கிறது.

டிவிஎஸ் என்டார்க் எஸ்எக்ஸ்ஆர் ஸ்கூட்டர் அறிமுகம்: விபரம்!

சாதாரண என்டார்க் 125 ஸ்கூட்டரின் எஞ்சின் 9 பிஎச்பி பவரை வெளிப்படுத்தும் நிலையில், இந்த ரேஸ் ஸ்கூட்டரில் இருக்கும் 125 எஞ்சின் அதிகபட்சமாக 19 பிஎச்பி பவரை வெளிப்படுத்தும் விதத்தில் ட்யூனிங் செய்யப்பட்டு இருக்கிறது. டிவிஎஸ் என்டார்க் எஸ்எக்ஸ்ஆர் ஸ்கூட்டர் மணிக்கு 120 கிமீ வேகம் வரை செல்லும்.

டிவிஎஸ் என்டார்க் எஸ்எக்ஸ்ஆர் ஸ்கூட்டர் அறிமுகம்: விபரம்!

இந்த ஸ்கூட்டரில் விசேஷ இன்டேக் மற்றும் எக்ஸ்சாஸ்ட் சிஸ்டம் பயன்படுத்தப்பட்டுள்ளது. ராலி பந்தயத்தில் பயன்படுத்துவதற்காக விசேஷ சஸ்பென்ஷன், 12 அங்குல ஆஃப்ரோடு டயர்கள் உள்ளிட்டவை சேர்க்கப்பட்டுள்ளன.

டிவிஎஸ் என்டார்க் எஸ்எக்ஸ்ஆர் ஸ்கூட்டர் அறிமுகம்: விபரம்!

புதிய டிவிஎஸ் என்டார்க் எஸ்எக்ஸ்ஆர் ஸ்கூட்டரில் ஸ்மார்ட்எக்ஸ் கனெக்ட் தொடர்பு வசதியுடன் கூடிய இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது. டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர் இடம்பெற்றுள்ளது. இதில், 55 விதமான தகவல்களை பெறமுடியும்.

டிவிஎஸ் என்டார்க் எஸ்எக்ஸ்ஆர் ஸ்கூட்டர் அறிமுகம்: விபரம்!

டிவிஎஸ் ரேஸிங் அணியின் மேலாளர் பி. செல்வராஜ் கூறுகையில், "ராலி பந்தயங்களில் டிவிஎஸ் எஸ்எக்ஸ்ஆர் 160 ஸ்கூட்டர் பல்வேறு குறிப்பிடத்தக்க சாதனைகளை படைத்தது. அதன் வழித்தோன்றலாக வந்துள்ள இந்த புதிய என்டார்க் எஸ்எக்ஸ்ஆர் ஸ்கூட்டரும் பல்வேறு புதிய மைல்கற்களை தொடும்," என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

டிவிஎஸ் என்டார்க் எஸ்எக்ஸ்ஆர் ஸ்கூட்டர் அறிமுகம்: விபரம்!

இருசக்கர மோட்டார் ஸ்போர்ட்ஸ் உலகில் டிவிஎஸ் நிறுவனம் நீண்ட பாரம்பரியத்தையும், இளம் வீரர்களை இனம் காண்பதற்கு குறிப்பிடத்தக்க பங்களிப்பையும் வழங்கி வருகிறது. இந்த நிலையில், இந்த புதிய டிவிஎஸ் என்டார்க் எஸ்எக்ஸ்ஆர் ஸ்கூட்டர் மூலமாக தனது பாரம்பரியத்தில் புதிய அத்தியாயத்தை எழுத தயாராகி இருக்கிறது.

More from DriveSpark

Article Published On: Saturday, May 26, 2018, 12:02 [IST]
English summary
TVS Motor Company's racing arm, TVS Racing has revealed the rally-spec NTorq SXR scooter. The TVS NTorq SXR is based on the regular NTorq 125 scooter. The rally-spec TVS NTorq SXR will make its debut at the fourth round of the Indian National Rally Championship in Nashik.
மேலும்... #டிவிஎஸ் #tvs motor
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+