ரூ.48,400 விலையில் புதிய டிவிஎஸ் ரேடியான் 110 பைக் விற்பனைக்கு அறிமுகம்!!

டிவிஎஸ் மோட்டார்ஸ் நிறுவனத்தின் புத்தம் புதிய ரேடியான் 110சிசி பைக் சென்னையில் நடந்த விழாவில் சற்றுமுன் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

By Saravana Rajan

டிவிஎஸ் மோட்டார்ஸ் நிறுவனத்தின் புத்தம் புதிய ரேடியான் 110சிசி பைக் சென்னையில் நடந்த விழாவில் சற்றுமுன் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த பைக் குறித்த விரிவானத் தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

ரூ.48,400 விலையில் புதிய டிவிஎஸ் ரேடியான் 110 பைக் விற்பனைக்கு அறிமுகம்!!

டிவிஎஸ் ஸ்டார்சிட்டி ப்ளஸ், டிவிஎஸ் விக்டர் வரிசையில் டிவிஎஸ் மோட்டார்ஸ் நிறுவனத்தின் மூன்றாவது 110சிசி பைக் மாடலாக ரேடியான் பைக் களமிறங்கி இருக்கிறது. இந்த ரக பைக் மார்க்கெட்டில் வாடிக்கையாளர்களுக்கு அதிக தேர்வை வழங்கும் விதத்திலும், தனது சந்தையை வலுப்படுத்தும் விதத்திலும் இந்த புதிய மாடலை டிவிஎஸ் மோட்டார்ஸ் களமிறக்கி இருக்கிறது.

ரூ.48,400 விலையில் புதிய டிவிஎஸ் ரேடியான் 110 பைக் விற்பனைக்கு அறிமுகம்!!

2012ம் ஆண்டு டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிக்கு வைக்கப்பட்டு இருந்த டிவிஎஸ் ரேடியான் கான்செப்ட் மாடலிலிருந்து டிசைனில் முற்றிலும் வேறுபட்ட மாடலாக உருவாக்கப்பட்டு இருக்கிறது. டிவிஎஸ் அப்பாச்சி வரிசை பைக் மாடல்களின் டிசைன் தாத்பரியங்களையும் ஆங்காங்கே காண முடிகிறது. எனினும், ஹீரோ டீலக்ஸ் மற்றும் ஸ்பிளென்டர் பைக்குகளை மனதில் வைத்து வடிவமைத்தது போன்ற நினைப்பை ஏற்படுத்துகிறது.

ரூ.48,400 விலையில் புதிய டிவிஎஸ் ரேடியான் 110 பைக் விற்பனைக்கு அறிமுகம்!!

இந்த பைக்கில் 18 அங்குல சக்கரங்களில் டியூரா க்ரிப் டயர்கள் பொருத்தப்பட்டு இருக்கின்றன. இதன் காரணமாக, சிறந்த ரோடு க்ரிப்பையும், சொகுசான பயண அனுபவத்தையும் பெற முடியும் என்று டிவிஎஸ் மோட்டார்ஸ் தெரிவித்துல்ளது.

ரூ.48,400 விலையில் புதிய டிவிஎஸ் ரேடியான் 110 பைக் விற்பனைக்கு அறிமுகம்!!

டிவிஎஸ் ரேடியான் பைக்கில் டெலிஸ்கோப்பிக் ஃபோர்க்குகளுடன் கூடிய சஸ்பென்ஷனும்,பின்புறத்தில் ஹைட்ராலிக் சஸ்பென்ஷனும் பொருத்தப்ப்டடு இருக்கின்றன. இந்த பைக் 180 மிமீ கிரவுண்ட் கிளியரன்ஸ் கொண்டது. எனவே, ஊரக பகுதிகளுக்கும் சிறப்பான தேர்வாக இருக்கும்.

ரூ.48,400 விலையில் புதிய டிவிஎஸ் ரேடியான் 110 பைக் விற்பனைக்கு அறிமுகம்!!

செல்ஃப் ஸ்டார்ட் வசதி, யுஎஸ்பி சார்ஜர் போன்றவையும் முக்கிய அம்சங்களாக இருக்கின்றன. வழக்கம்போல் பிற டிவிஎஸ் பைக்குகளை போல இந்த பைக்கிலும் அதிக பிரகாசத்தை அளிக்கும் திறன் வாய்ந்த ஹெட்லைட் மற்றும் பகல்நேர விளக்குகள் பொருத்தப்ப்டடுள்ளன.

ரூ.48,400 விலையில் புதிய டிவிஎஸ் ரேடியான் 110 பைக் விற்பனைக்கு அறிமுகம்!!

பெட்ரோல் டேங்கில் தொடைகளுக்கு சப்போர்ட் தரும் தை பேடுகள் இடம்பெற்றுள்ளன. இந்த பைக்கின் ஸ்பீடோமீட்டர் கன்சோல், ஷாக்அப்சார்பர்கள், சைலென்சர் ஆகியவற்றில் க்ரோம் ஃபினிஷிங் செய்யப்பட்டு இருக்கின்றன.

ரூ.48,400 விலையில் புதிய டிவிஎஸ் ரேடியான் 110 பைக் விற்பனைக்கு அறிமுகம்!!

இந்த ரக பைக்குகளில் முதலாவதாக சிங்க்ரோனைஸ் பிரேக்கிங் சிஸ்டம் கொடுக்கப்பட்டு இருக்கிறது. அதாவது, பிரேக் பிடிக்கும்போது இரண்டு சக்கரங்களுக்கும் பிரேக் பவர் குறிப்பிட்ட அளவில் செலுத்தப்பட்டு, வண்டி நிறுத்தப்படும். இந்த புதிய பிரேக் சிஸ்டம் மூலமாக பைக் நிலைகுலைந்து விழுவதை தவிர்க்க முடியும். அதேபோன்று, சைடு ஸ்டான்ட் இண்டிகேட்டர் வசதியும் உள்ளது.

ரூ.48,400 விலையில் புதிய டிவிஎஸ் ரேடியான் 110 பைக் விற்பனைக்கு அறிமுகம்!!

புதிய டிவிஎஸ் ரேடியான் பைக்கில் 109.7சிசி டியூரா லைஃப் எஞ்சின் பொருத்தப்பட்டு இருக்கிறது. இந்தத எஞ்சின் அதிகபட்சமாக 8.2 பிஎச்பி பவரையும், 8.7 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். 4 ஸ்பீடு கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டு இருக்கிறது. இந்த பைக் லிட்டருக்கு 69.3 கிமீ மைலேஜ் தரும் என்று நிறுவனம் தெரிவிக்கிறது. 10 லிட்டர் கொள்திறன் கொண்ட பெட்ரோல் டேங்க் உள்ளது.

ரூ.48,400 விலையில் புதிய டிவிஎஸ் ரேடியான் 110 பைக் விற்பனைக்கு அறிமுகம்!!

புதிய டிவிஎஸ் ரேடியான் பைக் வெள்ளை, பீஜ், இளஞ்சிவப்பு மற்றும் கருப்பு ஆகிய வண்ணங்களில் கிடைக்கும். இந்த பைக்கிற்கு 5 ஆண்டுகளுக்கான வாரண்டியை டிவிஎஸ் மோட்டார்ஸ் வழங்குகிறது.

ரூ.48,400 விலையில் புதிய டிவிஎஸ் ரேடியான் 110 பைக் விற்பனைக்கு அறிமுகம்!!

ரூ.48,400 டெல்லி எக்ஸ்ஷோரூம் விலையில் டிவிஎஸ் ரேடியான் பைக் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. இந்த பைக்கின் டிசைன், வசதிகள், விலை உள்ளிட்ட அனைத்தும் மெட்ரோ நகரங்களின் பட்ஜெட் வாடிக்கையாளர்களையும், ஊரக வாடிக்கையாளர்களையும் குறிவைத்து நிலைநிறுத்தப்பட்டு இருக்கிறது. அடுத்த மாதம் டெலிவிரி துவங்கப்பட இருக்கிறது.

ரூ.48,400 விலையில் புதிய டிவிஎஸ் ரேடியான் 110 பைக் விற்பனைக்கு அறிமுகம்!!

டிவிஎஸ் ரேடியான் பைக் 110சிசி மாடலாக இருந்தாலும் விலை அடிப்படையில் ஹீரோ நிறுவனத்தின் டீலக்ஸ், ஸ்பிளென்டர், பஜாஜ் சிடி100 போன்ற 100சிசி மாடல்களுடனும், ஹோண்டா ட்ரீம் யுகா, யமஹா சலூட்டோ ஆர்எக்ஸ் ஆகிய 110சிசி மாடல்களுடனும் போட்டி போடும்.

More from DriveSpark

Article Published On: Thursday, August 23, 2018, 14:12 [IST]
English summary
TVS Radeon launched in India: TVS has launched the new Radeon 110cc commuter bike in the Indian market. The TVS Radeon is priced at Rs 48,400 ex-showroom (Delhi). With the launch of the Radeon, TVS has strengthened its position in the commuter bike segment in the country.
மேலும்... #டிவிஎஸ் #tvs motor
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+