புதிய நிறத்திலான டிவிஎஸ் ஸ்கூட்டி ஜெஸ்ட் 110 ஸ்கூட்டர் இந்தியாவில் வெளியீடு..!!

புதிய நிறத்திலான டிவிஎஸ் ஸ்கூட்டி ஜெஸ்ட் 110 ஸ்கூட்டர் இந்தியாவில் வெளியீடு..!!

By Azhagar

இந்தியாவில் டிவிஎஸ் நிறுவனம் பிரபலமான ஸ்கூட்டி ஜெஸ்ட் ஸ்கூட்டரை புதிய நிறத்தில் வெளியிட்டுள்ளது. முன்னதாக இந்த ஸ்கூட்டர் 2018 ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிப்படுத்தப்பட்டது.

புதிய நிறத்தில் டிவிஎஸ் ஸ்கூட்டி ஜெஸ்ட் ஸ்கூட்டர்..!!

2017ல் டிவிஎஸ் நிறுவனம் அறிமுகம் செய்த டிவிஎஸ் ஸ்கூட்டி ஜெஸ்ட் ஸ்கூட்டர் மேட் ஃபினிஷ் செய்யப்பட்ட புதிய பர்பிள் நிற ஸ்கீம்மில் வெளிவரவுள்ளது.

புதிய நிறத்தில் டிவிஎஸ் ஸ்கூட்டி ஜெஸ்ட் ஸ்கூட்டர்..!!

டிவிஎஸ் நிறுவனம் இந்த மாடல் ஸ்கூட்டரை ஏற்கனவே சிவப்பு, மஞ்சள், கருப்பு மற்றும் நீலம் ஆகிய நிறங்களில் தயாரித்து விற்பனை செய்து வருகிறது.

புதிய நிறத்தில் டிவிஎஸ் ஸ்கூட்டி ஜெஸ்ட் ஸ்கூட்டர்..!!

இந்த வரிசையில் புதியதாக நிறம் சேர்க்கப்பட்டுள்ளதே தவிர, ஸ்கூட்டி ஜெஸ்ட் மாடலில் எவ்வித காஸ்மெடிக் மாற்றங்களும் மேற்கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதிய நிறத்தில் டிவிஎஸ் ஸ்கூட்டி ஜெஸ்ட் ஸ்கூட்டர்..!!

டிவிஎஸ் ஸ்கூட்டி ஜெஸ்ட் ஸ்கூட்டரில் 109.7 சிசி சிங்கிள் சிலிண்டர், ஏர் கூல்டு எஞ்சின் உள்ளது. இது 7.8 பிஎச்பி பவர் மற்றும் 8.4 என்.எம் டார்க் திறனை அதிகப்பட்சமாக வெளிப்படுத்தும்.

புதிய நிறத்தில் டிவிஎஸ் ஸ்கூட்டி ஜெஸ்ட் ஸ்கூட்டர்..!!

ஸ்கூட்டரின் முன்பக்க சக்கரத்தில் டெலஸ்கோபிக் ஃபோர்க்ஸ் மற்றும் பின்பக்க சக்கரத்தில் ஹைட்ராலிக் மோனோஷாக் அப்ஸபர்கள் சஸ்பென்ஷன் தேவையை பூர்த்தி செய்கின்றன.

புதிய நிறத்தில் டிவிஎஸ் ஸ்கூட்டி ஜெஸ்ட் ஸ்கூட்டர்..!!

பிரத்யேக பூட் லைட், டீயட் டோன் இருக்கை, சில்வர் ஓக் இண்ட்ரீயர் பேனல், 3டி ஜெஸ் 110 கோலோ போன்ற இந்த ஸ்கூட்டரின் தோற்றப்பொலிவில் உள்ளன.

Recommended Video

New Maruti Swift Launch: Price; Mileage; Specifications; Features; Changes
புதிய நிறத்தில் டிவிஎஸ் ஸ்கூட்டி ஜெஸ்ட் ஸ்கூட்டர்..!!

இளைய தலைமுறையினரை சேர்ந்த பெண்களின் விருப்ப தேர்வாக உள்ள இந்த ஸ்கூட்டர் ஹோண்டா ஆக்டிவா- ஐ, சுஸுகி லெட்ஸ், ஹீரோ பிளெஷர் மற்றும் யமஹா ரே-இசட் போன்ற மாடல்களுக்கு போட்டியாக வலம் வருகிறது.

புதிய நிறத்தில் டிவிஎஸ் ஸ்கூட்டி ஜெஸ்ட் ஸ்கூட்டர்..!!

சமீபத்தில் டிவிஎஸ் 125 செக்மென்டை வலுப்படுத்த என்டார்க் ஸ்கூட்டரை விற்பனைக்கு அறிமுகம் செய்தது. பல தரப்பு வாடிக்கையாளர்களிடம் என்டார்க் 125 பெரியளவில் வரவேற்பு பெற தொடங்கியுள்ளது.

புதிய நிறத்தில் டிவிஎஸ் ஸ்கூட்டி ஜெஸ்ட் ஸ்கூட்டர்..!!

இந்நிலையில் இந்தியாவில் தொடர்ந்து ஸ்கூட்டர் செக்மென்ட் விற்பனையில் முன்னிலை பெற ஸ்கூட்டி ஜெஸ்ட் ஸ்கூட்டரை மேம்படுத்தி வெளியிட்டுள்ளது டிவிஎஸ்.

More from DriveSpark

Article Published On: Tuesday, February 27, 2018, 8:30 [IST]
English summary
Read in Tamil: TVS Scooty Zest 110 Scooter Matte Purple Color Launched In India. Click for Details...
மேலும்... #டிவிஎஸ் #tvs motor
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+